惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
美团技术团队
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
U
Unit 42
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
Martin Fowler
Martin Fowler
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
罗磊的独立博客
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
717 டாஸ்மாக் கடைகள் மூடல்: இடத்தின் உரிமையாளர்கள் வழக்கு ...
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் முடிவு நல்ல முடிவு என பாராட்டு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் முடிவை எதிர்த்து இட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தளங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் 2 வாரங்களுக்குள் மூடப்படும் என மே 12ஆம் தேதி தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை பத்திரிகை செய்தி குறிப்பை வெளியீட்டிருந்தது.

அந்தச் செய்திக் குறிப்பை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஆர்.ஏ.புரம் மற்றும் வேளச்சேரியில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ள அடையாரை சேர்ந்த சரவணன் மற்றும் மதியரசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.

அந்த மனுவில், கடைகளை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டு, 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடைகளை மதுபானக் கடைகளாக மாற்றுவதற்காக, பெரும் தொகை செலவு செய்து தேவையான உள் அலங்ககார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கடைகளை மூடுவதால் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்கு மதுபான கடைகள் அமைக்கப்படக் கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில், 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள கடைகள் அகற்றப்படும் என்ற பத்திரிகை செய்தி குறிப்பு தன்னிச்சையானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்குச் சட்டத்தில் அனைத்து விதிகளும், அறிவிப்புகளும் அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் கையெழுத்தில்லாமல் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்திகுறிப்புக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞ்சர் விஜய் நாராயண் ஆஜராகி முந்தைய ஆட்சி காலத்தில் இடத்தை குத்தகைக்கு கொடுத்தவர்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிர்வாகம் திருப்பிக் கொடுத்துவிடும் என்றும், புதிய அரசின் கொள்கை முடிவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.

717 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசின் முடிவு நல்ல முடிவு என்றும், முதல்வரின் முடிவுக்கு டாஸ்மாக் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இடத்தின் உரிமையாளர்கள் அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.