惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The GitHub Blog
The GitHub Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
爱范儿
爱范儿
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
雷峰网
雷峰网
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
量子位
V
V2EX
博客园 - 叶小钗
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விசிக ஆதரவை கோரிய விஜய்: “இடதுசாரிகள் முடிவை அறிந்து முடி...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

விசிக தலை​வர் திரு​மாவளவன்

Updated on: 

சென்னை: விசிக​வின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலை​யில் இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்கள் முடிவெடுப்போம் என திரு​மாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் வெளி​யாகி தவெக 108 இடங்​களில் வென்​றுள்​ளது. ஆட்​சி​யமைக்க தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் விஜய் ஆட்​சி​யமைக்க மற்ற கட்​சிகளின் ஆதர​வைக் கோரி வரு​கிறார்.

இந்​நிலை​யில் நேற்று காங்​கிரஸ் தவெக​வுக்கு ஆதரவு தெரி​வித்துள்​ளது. மேலும் விசிக மற்​றும் இடது​சாரி கட்​சிகள் தலா 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றிருக்​கும் நிலை​யில் அவர்​களின் ஆதர​வை​யும் விஜய் கோரி​யுள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றவர்​கள், தற்​போது கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்து தவெக​வுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற கேள்வி எழுத்​துள்​ளது.

இதுகுறித்து விசிக தலை​வர் திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தவெக தலை​வர் விஜய் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்​பி​யிருக்​கிறார். இடது​சாரி கட்​சிகளுக்​கும் அவர் கடிதம் எழு​தி​யிருக்​கிறார். இது தொடர்​பாக கட்​சி​யின் முன்​னணி பொறுப்பாளர்​களோடு கலந்​தாய்வு செய்த பின்​னர்​தான் முடிவெடுக்க முடி​யும். விஜய் மீது மக்​கள் நம்​பிக்கை வைத்து வாக்களித்​திருக்​கிறார்​கள். அந்த நம்​பிக்​கைக்​குப் பாத்​திர​மாக அவர் நல்​லாட்​சி​யைத் தரு​வார் என்று நம்​பு​கிறேன். திமுக உடனான கூட்​ட​ணி​யைப் பொறுத்​தவரை, நாங்​கள் கூட்டணியுடன் நீண்ட கால​மாக பயணித்து வந்​திருக்​கிறோம். இப்​போதும் அந்த நட்பு நீடிக்​கிறது.

ஆட்​சி​யில் பங்கு.. பாஜக ஒரே ஓர் இடத்​தில்​தான் வெற்றி பெற்று இருக்​கிறது. இப்​படி இருக்​கை​யில் தவெக ஆட்​சி​யமைப்​ப​தில் எப்​படி தலை​யீடு செய்ய முடி​யும் என்று தெரிய​வில்​லை, காங்​கிரஸின் நிலைப்​பாடு குறித்து நான் கருத்து சொல்ல விரும்​ப​வில்​லை.

ஆட்​சி​யில் பங்கு, அதி​காரத்​தில் பங்கு என்​பது எங்​கள் கோரிக்​கை, நிலைப்​பாடு. இந்த சூழலை உரு​வாக்​கிய தமிழக மக்​களுக்கு நன்றி சொல்ல கடமைப்​பட்​டிருக்​கிறோம். ஆனால் அமைச்​சர​வை​யில் இடம் என்ற ஒற்றை காரணத்​துக்​காக மட்​டும் முடிவை எடுக்க முடி​யாது. இதில் எங்​களுக்கு உள்ள நிறை, குறை, கட்​சி​யின் எதிர்​காலம் என அனைத்​தை​யும் சீர்​தூக்​கிப் பார்த்து முடி​வெடுக்க வேண்​டும். ஆட்​சி​யில் பங்​கு, அதி​காரத்​தில் பங்கு என்ற கோஷத்தை மட்​டுமே வைத்து முடிவு எடுக்க முடி​யாது என்​ப​தால் ஏற்​கெனவே விஜய் அந்​தக் கோரிக்​கையை கூறிய​போது ஏற்க முடி​யாத சூழ்​நிலை உரு​வானது. இரு​வரின் எதிர்​கால அரசி​யல் எப்​படி போகும் என்​ப​தைக் கணக்​கில் கொண்டு அதை ஒட்டி எங்​கள் முடிவு இருக்​கும். இது தொடர்பாக இடதுசாரிகளின் முடிவை அறிந்து நாங்களும் முடிவெடுப்போம், என திரு​மாவளவன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறாது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.