惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
The GitHub Blog
The GitHub Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
C
Check Point Blog
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
V
V2EX
腾讯CDC
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பி...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

இஸ்தான்புல்: வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்​சிபி) அதி​காரி​கள் கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்பு "ஆபரேஷன் குளோபல் ஹன்ட்" என்ற ரகசிய நடவடிக்​கை​யைத் தொடங்​கினர்.

இதன்​படி என்​சிபி, மும்பை காவல் துறை, குஜ​ராத் தீவிர​வாத எதிர்ப்​புப் படை ஆகியவை ஒன்​றிணைந்து செயல்​பட்​டு, இன்​டர்​போல் உதவி​யுடன் சர்​வ​தேச போதை கும்​பல்​களை வேட்​டை​யாடும் பணி​யைத் தொடங்​கியது.

முதல்​கட்​ட​மாக உள்​நாடு, வெளி​நாடு​களில் செயல்​படும் 100-க்​கும் மேற்​பட்ட போதைப்​பொருள் கும்​பல்​களை ஒழிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. "ஆபரேஷன் குளோபல் ஹன்ட்" நடவடிக்​கை​யின் போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் நெருங்​கிய கூட்​டாளி சலீம் டோலா துருக்​கி​யில் பதுங்​கி​யிருப்​பது தெரிய வந்​தது. அவரை கைது செய்ய இன்​டர்​போல் மூலம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெட் கார்​னர் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது.

துருக்கி பாது​காப்​புப் படை​யினரின் நீண்ட தேடலுக்​குப் பிறகு இஸ்​தான்​புல் நகரில் சலீம் டோலா அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். கடந்த 28-ம் தேதி இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்ட டோலா, மும்பை நீதி​மன்​றத்தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார்.

அவரை மே 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. இதன்​பேரில் அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக போதைப் பொருள் தடுப்​புப் பிரிவு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யின் டோங்ரி பகு​தியை சேர்ந்த சலீம் டோலா, ஆரம்ப காலத்​தில் மும்​பை, டெல்​லி​யில் குட்கா விற்​பனை​யில் ஈடு​பட்டு வந்​தார். பின்​னர் அவருக்கு தாவூத் இப்​ராகி​முடன் தொடர்பு ஏற்​பட்​டது.

அதன்​பிறகு போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படத் தொடங்​கி​னார். அப்​போது பலமுறை மும்பை போலீ​ஸிடம் அவர் பிடிபட்​டார். கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்பு இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாட்​டுக்கு சலீம் டோலா தப்​பியோடி​னார்.

இந்​திய போதைப் பொருள் தடுப்​புப்பிரிவு அதி​காரி​கள், "ஆபரேஷன் குளோபல் ஹன்ட்" நடவடிக்​கை​யின் மூலம் டோலா​வின் சர்​வ​தேச வலை​யமைப்பை கண்​டறிந்​தனர். மகா​ராஷ்டி​ரா​வின் சாங்​லி, குஜ​ராத்​தின் சூரத், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய், துருக்​கி​யின் இஸ்​தான்​புல் நகரங்​களை மைய​மாக வைத்து டோலா செயல்​பட்டு வரு​வது தெரிய வந்​தது.

இதைத் தொடர்ந்து துபா​யில் வசித்து வந்த டோலா​வின் மகன் தாஹீர், மரு​மகன் முஸ்​தபா ஆகியோர் கைது செய்​யப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். தற்​போது துருக்​கி​யின் இஸ்​தான்​புல் நகரில் சலீம் டோலா கைது செய்​யப்​பட்​டு, இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். பல்​கேரியா நாட்​டின் பாஸ்​போர்ட்​டில் ஹம்சா என்ற பெயரில் டோலா தலைமறை​வாக வாழ்ந்து வந்​துள்​ளார். அவர் கைது செய்​யப்​பட்டு இருப்​ப​தன் மூலம் இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் போதைப் பொருள் கடத்​தல் கும்​பல்​கள் பிடிபடும்​. இவ்​வாறு போதைப்​ பொருள்​ தடுப்​பு பிரிவு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.