惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
雷峰网
雷峰网
P
Proofpoint News Feed
腾讯CDC
H
Help Net Security
V
Visual Studio Blog
美团技术团队
F
Fortinet All Blogs
MongoDB | Blog
MongoDB | Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
6 உலகக் கோப்பைகளிலும் கோல் - கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை ...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

ஹூஸ்டன்: 6 உலகக் கோப்பைகளிலும் கோலடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியின்போது ரொனால்டோ 2 கோல்களை அடித்தார்.

இதன்மூலம் 2026 உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை போர்ச்சுகல் அணி பதிவு செய்தது. இந்தப் போட்டியின்போது தான் பங்கேற்ற 6 உலகக் கோப்பை போட்டிகளிலும் தனது அணி சார்பில் கோல் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ரொனால்டோ செய்துள்ளார்.

2006, 2010, 2014, 2018, 2022, 2026 என 6 வெவ்வேறு உலகக் கோப்பைத் தொடர்களிலும் அவர் கோலடித்துள்ளார். 6 உலகக் கோப்பைகளில் அர்ஜெண்டினா வீரர் லயோனஸ் மெஸ்ஸி விளையாடியுள்ள போதிலும், அவர் 2010 உலகக் கோப்பையின்போது கோலடிக்க வில்லை.

நேற்றைய போட்டியின்போது 41 வயது 138 நாட்கள் நிரம்பியுள்ள நிலையில் 2 கோல்கள் அடித்த ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் அடித்த அதிக வயதான வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் இந்த சாதனை மெஸ்ஸியின் வசம் இருந்தது.

மேலும், உலகக் கோப்பையில் கோல் அடித்த இரண்டாவது அதிக வயதான வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 1994 உலகக் கோப்பையில் 42 வயது 39 நாட்களில் கோல் அடித்த ரோஜர் மில்லா உள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ஒரு நாட்டுக்காக உலகக் கோப்பைப் போட்டியில் இளம் வயதிலும் அதிக வயதிலும் கோல் அடித்த வீரர்கள் என்ற தனிச்சிறப்பை பெற்றவர்களின் பட்டியலிலும் ரொனால்டோ இணைந்தார். இந்தப் பட்டியலில் முதல் 2 இடங்களில் மைக்கேல் லாட்ரப் (டென்மார்க்), லயோனல் மெஸ்ஸி (அர்ஜெண்டினா) ஆகியோர் உள்ளனர். 3-வது இடத்தில் ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டி ரொனால்டோவின் 24-வது உலகக் கோப்பைப் போட்டி ஆகும். இந்த வரிசையில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி (28 போட்டிகள்) மற்றும் ஜெர்மனியின் லோத்தர் மத்தாயேஸ் (25 போட்டிகள்) மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.