惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
Jina AI
Jina AI
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
Recent Announcements
Recent Announcements
I
InfoQ
L
LangChain Blog
The Cloudflare Blog
IT之家
IT之家
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
A
About on SuperTechFans
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
美团技术团队
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜோதிடர் ரிக்கி ராதனுக்கு வழங்கப்பட்ட அரசுப் பதவி உத்தரவு ...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தவெக செய்​தித் தொடர்​பாள​ரான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் என்​பவர் முதல்​வர் விஜய்​யின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமனம் செய்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்​பிய​தால் அந்த உத்​தரவு திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது.

முதல்​வர் விஜய்க்கு நீண்ட கால​மாக ஆஸ்​தான ஜோதிட​ராக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் இருந்து வரு​கிறார். இவர் கொடுக்​கும் ஆலோ​சனை​களின் அடிப்​படை​யில்​தான் விஜய் முக்​கிய முடிவு​களை எடுத்து வரு​கிறார் என்​கிறார்​கள்.

ரிக்கி ராதனுக்கு தவெக​வின் செய்​தித் தொடர்​பாளர் பதவி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இப்​படி​யான சூழலில்​தான் தமிழக முதல்​வரின் அரசி​யல் விவ​காரங்​களைக் கவனிப்​ப​தற்​கான சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் நியமிக்​கப்​பட்​டார்.

இதற்கு பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் கூறும்​போது, “அறி​வியல் கண்​ணோட்​டத்தை வளர்க்க வேண்​டியது அரசின் கடமை.

முதல்​வரின் அரசி​யல் பிரிவு செய​லா​ள​ராக இன்று அறிவிக்​கப்​பட்​டுள்ள ரிக்கி ராதன் என்​பவர் அடிப்​படை​யில் ஒரு ஜோதிடர். அரசுச் செல​வில் அதி​காரி​யாக இத்​தகைய ஒரு​வரை நியமித்​திருப்​பது, மக்​கள் மத்​தி​யில் ஜோதிடம் தொடர்​பான நம்​பிக்​கையை அதி​கப்​படுத்​தவே உதவும்.

இவர் அரசி​யல் ஆலோ​சனை​களை கூறு​வார் என்​பதும் ஏற்​புடையதல்ல” என்று கூறினார். காங்​கிரஸ் எம்​.பி. சசி​காந்த் செந்​தில், “ஒரு ஜோதிடருக்கு ஏன் அரசு சிறப்பு அதி​காரி (OSD) பதவி வழங்​கப்பட வேண்​டும் என்​பது எனக்கு புரிய​வில்​லை. யாராவது விளக்க முடி​யு​மா?” எனக் கேள்வி எழுப்​பி​னார்.

விசிக சட்​டப்​பேர​வைக் குழுத் தலை​வர் வன்​னியரசு, “அறி​வியலுக்​குப் புறம்​பான நியமனத்தை திரும்​பப் பெறுக. ஆஸ்​தான ஜோதிடர்​கள் என்​பவர்​கள் மன்​னர்​களின் அரசவை​யில் ஆலோ​சனை கூறும் ராஜகுருக்​களாக வலம்​வந்​தவர்​கள். ஆனால் இன்று மன்​னர்​களும் இல்​லை, மன்​ன​ராட்​சி​யும் இல்​லை” எனத் தெரி​வித்​திருந்​தார்.

இப்​படி​யான சூழலில்​தான் நேற்று சட்​டப்​பேர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது பண்​டிட் நியமனத்​துக்கு தேமு​திக, விசிக, கொமதேக, மஜக உள்​ளிட்ட கட்​சிகள் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இதையடுத்து நடந்த நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்​றி​பெற்ற கையோடு “மக்​களின் கோரிக்​கைக்கு செவி​சாய்க்​கும் முக​மாக முதல் வேலை​யாக அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக ரிக்கி ராதன் பண்​டிட் வெற்​றிவேல் நியமனம் செய்​யப்​பட்ட உத்​தரவு 24 மணி நேரத்​துக்​குள் ரத்து செய்​யப்​படும்” என முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டார்.

அதன்​படி ரிக்கி ராதனை முதல்​வரின் அரசி​யல் பிரிவு சிறப்பு அதி​காரி​யாக நியமித்து பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை தமிழக அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது.

இதற்கு பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் கூறுகை​யில், “தவறை உணர்ந்​தும் ஜோதிடர் ரிக்கி ராதன் பணி நியமனத்தை அரசு திரும்​பப் பெற்​றுள்​ளது.

விமர்​சனங்​கள், குறை​கள் சுட்​டிக்​காட்​டப்​படும்​போது அதை ஏற்​றுச் சரிசெய்​து​கொள்​வது என்ற அணுகு​முறை தொடர வேண்​டும். அரசின் இந்த முடிவை வரவேற்​கிறேன்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, “ராதன் பண்​டிட்டை அரசுப் பணி​யில் நியமித்​ததை ரத்து செய்த தமிழக முதல்​வர் விஜய்க்கு வாழ்த்​துகள்” எனத் தெரி​வித்​துள்​ளார்.

காங்​கிரஸ் எம்​.பி ஜோதி​மணி வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், “அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பொது​மக்​களின் கருத்​துக்​களுக்கு மதிப்​பளித்து ஜோதிடர் நியமனத்தை முதல்​வர் ரத்து செய்​துள்​ளதை வரவேற்​கிறேன்.

வரும் காலங்​களில் மாணவர்​கள், இளைஞர்​கள் உள்​ளிட்ட எதிர்​காலத் தலை​முறைக்கு எடுத்​துக்​காட்​டாக முதல்​வர் மற்​றும் தமிழ்​நாடு அரசின் செயல்​பாடு​கள் அமை​யும் என்று நம்​பு​கிறேன்” எனத் தெரி​வித்​துள்​ளார்​. இப்​படி​யாக பல்​வேறு அரசி​யல்​ கட்​சிகள்​ வரவேற்பு தெரிவித்துள்ளன.