





















Updated on:
புதுடெல்லி: மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சில பேராசிரியர்கள், நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் மூலமாக நாடு முழுவதும் வினாத்தாள் கசிந்திருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் நீட் மறுதேர்வு ஜுன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: இதற்கு முன்பாக இந்திய அஞ்சல் துறை உதவியுடன் நீட் வினாத்தாள்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல விமானப் படையின் உதவியை கோரி உள்ளோம். இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கி உள்ளார்.
பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் அனைத்து மாநில அரசுகளின் உதவியுடன் நீட் மறுதேர்வு நேர்மையாக நடத்தப்படும். சிறு தவறுகூட ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。