惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
宝玉的分享
宝玉的分享
月光博客
月光博客
爱范儿
爱范儿
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
小众软件
小众软件
量子位
MongoDB | Blog
MongoDB | Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
The Cloudflare Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
H
Help Net Security
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?
2026-04-17 · via hindutamil

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று தொண்டாமுத்தூர். கோவை மாநகராட்சியின் 19 வார்டுகளையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஏராளமான கிராமப் பகுதிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.

கோவை மாநகராட்சியின் செல்வபுரம், தெலுங்குபாளையம், ஆர்.எஸ்.புரத்தின் குறிப்பிட்ட பகுதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளும், போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூர், தேவராயபுரம், ஜாகீர் நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டணம், நரசீபுரம், மத்துவராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி, வேடப்பட்டி, தாழியூர், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, பூலுவப்பட்டி, தென்கரை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளும் இத்தொகுதியில் வருகின்றன.

பழமை வாய்ந்த சிவத்தலமான பேரூர்பட்டீசுவரர் ஆலயம், பேரூர் ஆதீனம், ஈஷா யோகா மையம், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில், முக்கிய பொழுது போக்கு மையங்களில் ஒன்றான கோவைக் குற்றாலம் போன்றவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளன.

கவுண்டர் சமுதாயத்தினர் இந்த தொகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து, ஒக்கலிககவுடர், நாயக்கர் சமூகத்தினர், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கணிசமாக வசிக்கின்றனர்.

விவசாய விளை நிலங்கள் அதிகளவில் இத்தொகுதியில் இருந்தாலும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும் இந்த தொகுதியில் உள்ளன. திராட்சை, வாழை, தென்னை, பாக்கு சாகுபடி இங்கு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகளின் பிரச்சினை

திராட்சை விலை வீழ்ச்சியால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வன விலங்குகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

யானை - மனித மோதல்களை தடுக்க வேண்டும் எனத் தொகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் காவிரி ஆற்றில் சென்று தேவையின்றி கலக்கிறது.

இதைத் தடுக்க, இத்தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குட்டைகளில், வெள்ளப் பெருக்கின்போது வரும் நீரை குழாய் மூலம் பம்பிங் செய்து, புதிய குட்டைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நொய்யல் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் 2009-ல் நடந்த ஒரு இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 16 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், அதிமுக 7 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் தலா 3 முறையும், மா.கம்யூனிஸ்ட், மதிமுக, தமாகா ஆகியவை தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக, 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் விஐபி தொகுதிகளில் ஒன்றாக தொண்டாமுத்தூர் உள்ளது. அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படும் எஸ்.பி.வேலுமணி இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேயன், நாதக சார்பில் ரஜ்பு நிஷா, தவெக சார்பில் சதீஷ் ராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

தொகுதியை நன்கு அறிந்தவர், மக்களுக்கு பரிச்சயமானவர் என்பது அதிமுக வேட்பாளர் வேலுமணிக்கு பலம். தொகுதியில் கட்சியினரை தாண்டி அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர் என்பது திமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு பலவீனம்.

இருப்பினும், தேர்தல் வித்தகர் செந்தில்பாலாஜியின் அரசியல் வியூகங்களால் வேலுமணிக்கு அதிர்ச்சியளித்து நம்மை கரை சேர்த்துவிடுவார் என திமுக வேட்பாளர் கார்த்திகேயன் நம்புகிறார். தவெக சார்பில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவும், எஸ்.பி.வேலுமணியின் அரசியல் குருவுமான கே.பி.ராஜூவின் மகன் சதீஷ் போட்டியிடுகிறார்.

கே.பி.ராஜூவின் மறைவுக்கு பின்னர் அதிமுக தங்களுக்கு உறுதுணையாக இல்லை என்ற எண்ணம் சதீஷுக்கு உண்டு. உள்ளூர் அரசியலில் வேலுமணியை வீழ்த்த நினைக்கும் சொந்த கட்சியினரின் மறைமுக ஆதரவு தவெக வேட்பாளர் சதீஷுக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாதக வேட்பாளர் ரஜ்புநிஷா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டாமுத்தூரில் வேலுமணியை தோற்கடிக்க வேண்டும் என 2021-ல் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை இத்தொகுதியில் நடத்தினார் ஸ்டாலின். அந்த அளவுக்கு வேலுமணி மீதான எதிர்ப்பு திமுகவுக்கு இருந்தது. ஆனால், தற்போதைய தேர்தலில் நிலை அப்படி இல்லை.

இத்தொகுதியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி சீட் எதிர்பார்த்தார். ஆனால், புதுமுகம் கார்த்திகேயன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து 4-வது முறையாக வென்று, தொண்டா முத்தூர் அதிமுகவின் கோட்டை என்பதை உறுதிப்படுத்தும் முனைப்பில் பிரச்சாரத்தை வேலுமணி தீவிரப்படுத்தியுள்ளார்.

முதல்முறையாக வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்த வேண்டும் என நினைத்து களமிறங்கியுள்ளார் திமுக வேட்பாளர் கார்த்திகேயன். இதனால் தொண்டாமுத்தூர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,41,641

  • பெண் - 1,51,577

  • 3-ம் பாலினத்​தவர் - 106

  • மொத்த வாக்​காளர்கள் - 2,93,324