惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
J
Java Code Geeks
有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
T
The Blog of Author Tim Ferriss
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
量子位
D
Docker
V
Visual Studio Blog
博客园 - 司徒正美
Martin Fowler
Martin Fowler
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学
U
Unit 42
M
MIT News - Artificial intelligence
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
雷峰网
雷峰网
Vercel News
Vercel News
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தனித்துப் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்போம்” - ஸ்டாலி...
குள.சண்முகசுந்தரம் · 2026-06-26 · via hindutamil

Updated on: 

“யாரை​யும் நம்பி திமுக இல்​லை... தனித்தே போட்​டி​யிடு​வோம். முடி​வெடுங்​கள் தலை​வரே”.. நேற்​றைய தினம் திரு​வாரூரில் நடை​பெற்ற ஒரு திருமண விழா​வில் திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் ஆ.ராசா தெரி​வித்த இந்​தக் கருத்​துக்​கு, “தனித்​துப் போட்​டி​யிடு​வது குறித்​தும் பரிசீலிப்​போம்” என்று பதில் சொல்லி இருக்​கிறார் திமுக தலை​வர் ஸ்டா​லின்.

கூட்​ட​ணி​களே வெற்றி தோல்வி​களை தீர்​மானிக்​கும் நிலைமை வந்த பிறகு திமுக தனித்​துப் போட்​டி​யிட்​ட​தாக வரலாறு இல்​லை. ஆனால், நீண்ட இடைவெளிக்​குப் பிறகு 2014 மக்​கள​வைத் தேர்​தலில் கிட்​டத்​தட்ட அப்​படி​யான ஒரு பரீட்​சைக்​கும் தயா​ரானது திமுக. அப்​போது திமுக தலை​மை​யில் தமிழகத்​தில் உதித்த ‘ஜன​நாயக முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் விசிக, புதிய தமிழகம், மனிதநேய மக்​கள் கட்​சி, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகள் மட்​டுமே இருந்​தன. இதில், திமுக தவிர பிற கட்​சிகளின் அன்​றைய வளர்ச்​சி​யைக் கணக்​கில் எடுத்​துக் கொண்​டால் கிட்​டத்​தட்ட திமுக அந்​தத் தேர்​தலை தனித்தே எதிர்​கொண்​டதற்​குச் சமம் தான்.

அந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு 23.6 சதவீத வாக்​கு​கள் கிடைத்​தா​லும் ஓரிடத்​தில் கூட அந்த அணி​யால் வெற்​றி​பெற முடிய​வில்​லை. அதேசம​யம் யாரை​யும் கூட்டு சேர்க்​காமல் தனித்தே தைரிய​மாக களமிறங்​கிய அதி​முக, 44.3 சதவீத வாக்​கு​களைப் பெற்று 37 தொகு​தி​களை வென்​றது. அப்​போது தமிழகத்​தில் ஆட்​சிக் கட்​டிலில் இருந்த அதி​முக, ஓட்​டுக்கு தலா ரூ.200 வீதம் அனைத்​துத் தொகு​தி​களி​லும் நீக்​கமற பட்​டு​வா​டாவை முடித்​ததே இந்த வெற்​றி​யின் பிர​தான சூத்​திர​மாக அப்​போது பேசப்​பட்​டது. அந்​தத் தேர்​தலில் பாமக-​வும் பாஜக-​வும் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்டு தலா ஒரு தொகு​தியை வென்​றன.

பாமக-வுக்கு 4.4 சதவீத​மும் பாஜக-வுக்கு 5.5 சதவீத​மும் வாக்​கு​கள் கிடைத்​தன. தனித்து விடப்​பட்ட காங்​கிரஸ் கட்​சி​யால் 4.3 சதவீத வாக்​கு​களை மட்​டுமே பெற​முடிந்​தது. கம்​யூனிஸ்ட் இயக்​கங்​கள் தங்​களுக்​குள் ஒரு கூட்​ட​ணியை உரு​வாக்கி களம் கண்​டன. அதன்​படி, சிபிஎம் 9 இடங்​களி​லும் சிபிஐ 8 இடங்​களி​லும் போட்​டி​யிட்டு தலா 0.5 சதவீத வாக்​கு​களைப் பெற்​றன.

தனித்​துப் போட்டி என்ற முடிவை அன்​றைக்கு திமுக தலைமை எடுத்​தது. ஆனால் இப்​போது, தொண்​டர்​களே திமுக-வை அந்த நிலைக்​குத் தள்​ளிக் கொண்​டிருக்​கிறார்​கள். திமுக தோல்வி குறித்து கள ஆய்வு செய்​வதற்​காகச் சென்ற குழு​வினரிடம், “கூட்​ட​ணிக் கட்​சிகள் தரப்​பில் இருந்து நமக்கு எந்த ஒத்​துழைப்​பும் இல்​லை. நம்​மால் வெற்றி பெற்​றவர்​கள் இப்​போது நன்றி மறந்​து​விட்டு ஏதேதோ பேசுவதைக் கேட்​கும் போது நெஞ்சு கொதிக்​கிறது. இனிமேல் நமக்கு எந்​தக் கூட்​ட​ணி​யும் வேண்​டாம்; தனித்தே தேர்​தலைச் சந்​திப்​போம்” என்ற ரீதி​யில் தங்​களது ஆதங்​கத்​தைக் கொட்டி இருக்​கிறார்​கள் கீழ்​மட்ட நிர்​வாகி​கள். இதை​யும் உள்​வாங்கி இருப்​ப​தாலேயே “தனித்​துப் போட்​டி​யிடு​வது குறித்து பரிசீலிப்​போம்” என்று ஸ்டா​லின் பொது​வெளி​யில் பேசி இருக்​கிறார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தென் மண்டல திமுக வழக்​கறிஞரணி நிர்​வாகி ஒரு​வர், “இந்​தத் தேர்​தலில் யார் யாரோ பேச்​சைக் கேட்​டுக் கொண்​டு, களத்​தில் நிற்​கும் தொண்​டனை கண்​டு​கொள்​ளாமல் விட்​டு​விட்​டது திமுக தலை​மை. ஆனால், கட்சி தோற்​று​விட்​டது என்​றதும் அந்​தத் தொண்​டன் தன்​னெழுச்​சி​யாக களத்​துக்கு வந்து நிற்​கிறான். கட்சி தோற்​ற​தாக நினைக்​க​வில்​லை... ஏதோ தானே தோற்​றதைப் போன்ற உணர்​வுடன் டீக்​கடைக்கு வந்து கார​சா​ர​மாகக் கருத்​துச் சொல்ல ஆரம்​பித்​திருக்​கிறான். அதி​லும் குறிப்​பாக, காங்​கிரஸ் உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சிகள் செய்த நம்​பிக்​கைத் துரோகத்தை அவர்​களால் ஜீரணித்​துக் கொள்​ளவே முடிய​வில்​லை.

இந்​தத் தேர்​தலில் தென் மாவட்​டத்​தின் பிரபல​மான தொகுதி ஒன்​றில் போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் வாக்கு எண்​ணிக்கை அன்று காலை​யில் எங்​களோடு பேசிக் கொண்​டிருந்த போது, ‘நீங்க ஜெயிச்​சிரு​வீங்க. அதி​முக ரெண்​டாவது இடம் வந்​து​விடும். ஒரு முப்​ப​தா​யிரம் வாக்​கு​களை​யா​வது வாங்​கி​னால் தான் தலை​மைக் கழக நிர்​வாகி​யாக இருக்​கும் என்னை மதிப்​பார்​கள்’ என்று பரி​தாப​மாகச் சொல்​லிக் கொண்டு இருந்​தார். ஆனால், தேர்​தல் முடிவு​கள் வெளி​யான போது சுமார் 42 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்ற அவர், இப்​போது அமைச்​ச​ராக​வும் ஆகி​விட்​டார். இந்​தத் தேர்​தல் முடிவு​களைப் பொறுத்​தவரை தவெக-​வினரே எதிர்​பார்க்​காத ஒன்று தான் நடந்​திருக்​கிறது.

ஆளும் கட்​சி​யால் அனை​வரை​யும் திருப்​திப்​படுத்​தி​விட முடி​யாது என்​பது அண்​ணாவே சொன்​னது. எனவே, என்​ன​தான் தவெக தலைகீழாக நின்​றாலும் ஆட்​சிக்கு எதி​ரான அலை என்​பது இயல்​பாகவே 10 சதவீதம் வந்​து​விடும். இது அதி​காரத்​தில் இருக்​கும் அனைத்​துக் கட்​சிகளுக்​குமே பொருந்​தும். 2014-ல் திமுக தனித்து நின்​ற​போது ஜெயலலிதா என்ற சக்தி இருந்​தது.

ஆனால், இப்​போது ஜெயலலிதா இல்​லாத அதி​முக அக்​குச் சுக்​காய் சிதறிக் கிடக்​கிறது. அப்​படியே அவர்​கள் மீண்டு வந்​தா​லும் பாஜக-வுடன் கைகோத்தே களத்​துக்கு வரு​வார்​கள். இப்​போது தங்​களை ஆதரிக்​கிறவர்​களு​டன் சேர்ந்து விஜய் களத்​துக்கு வரு​வார். அப்​படி​யான சூழலில் மக்​கள​வைத் தேர்​தலில் திமுக தனித்து நின்​றால் 25 முதல் 28 சதவீத வாக்​கு​களை எடுக்​கும் என்​பது எங்​களின் கணிப்​பு. அந்​தளவுக்கு வாக்​கு​களைப் பெற்​றாலே 75 சதவீத இடங்​களை கைப்​பற்​றி​விட முடி​யும். அந்த வெற்​றியை வைத்து அடுத்த சட்​டமன்​றத் தேர்​தலுக்​கும் திமுக தன்னை தயார்​படுத்​திக் கொள்​ளும்” என்​றார்.

திமுக-​வின் இன்​னொரு தரப்​பினரோ, “தனித்​துப் போட்டி என்​ப​தெல்​லாம் இனி வரும் காலத்​துக்கு சரிப்​பட்டு வராது. அதேசம​யம், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்​கப் போன விசிக மற்​றும் கம்​யூனிஸ்ட் தோழர்​களுக்கு இப்​போது அந்த அணி கசக்க ஆரம்​பித்​திருக்​கிறது. தங்​களால் ராஜி​னாமா செய்​ய​வைக்​கப்​பட்ட அதி​முக எம்​எல்​ஏ-க்​களை மீண்​டும் தேர்​தலில் ஜெயிக்​க​வைத்து தனது சுயபலத்தை பெருக்​கிக் கொள்​ளவே நினைக்​கிறது தவெக. அப்​படி​யான நிலை வந்​தால் விசிக மற்​றும் தோழர்​களின் தயவு அந்​தக் கட்​சிக்கு தேவை இருக்​காது.

இதைப் புரிந்து கொண்டு தான் முதல்​வர் விஜய்​யின் ஸ்டா​லின் விரோத நடவடிக்​கைகளை அந்​தக் கட்​சிகள் கண்​டிக்க ஆரம்​பித்​திருக்​கின்​றன. இது உரசலாக மாறும் பட்​சத்​தில் அந்​தக் கட்​சிகள் மீண்​டும் திமுக பக்​கம் வரலாம். அவர்​களை மீண்​டும் கட்​டுச் சோற்​றுக்​குள் வைத்​துக் கட்​டு​வதை​விட மமக மற்​றும் தேமு​தி​க-வை தக்​க​வைத்​துக் கொண்டு பாமக-வை​யும் நாதக-வை​யும் தங்​கள் பக்​கம் கொண்டு வரும்​ வேலை​யை தி​முக தலை​மை செய்​ய வேண்​டும்​” என்​றும்​ சொல்​கிறார்​கள்​.தி​முக தலை​வர்​ ஸ்டா​லின்​ என்​ன முடிவெடுக்​கிறார்​ என்​று ​பார்​க்​கலாம்​.