惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
博客园 - Franky
IT之家
IT之家
V
Visual Studio Blog
博客园 - 【当耐特】
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
罗磊的独立博客
小众软件
小众软件
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
லக்னோவில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ வி...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர். அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்கள். படம்: பிடிஐ

Updated on: 

லக்னோ: உத்​தரப் பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்​தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்​தில் 15 மாணவர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். உயிர் பிழைப்​ப​தற்​காக முதல் தளத்​தில் இருந்து கீழே குதித்த 4 மாணவர்​கள் காயமடைந்​தனர். விபத்​தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் கருணைத்​ தொகை வழங்​கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

உத்​தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்​ளது அலிகஞ்ச் பகு​தி. இங்​குள்ள வணிக வளாகத்​தில் விளை​யாட்டு மையம், செல்​லப் பிராணி​களுக்​குத் தேவை​யான பொருட்​கள் விற்​பனை மையம், கிளினிக் மற்​றும் பல்​வேறு கடைகள் உள்​ளன. இதன் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்​பட்டு வந்​தது. 15 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பல மாணவர்​கள் இங்கு பயிற்சி பெற்று வந்​தனர்.

இந்​நிலை​யில், இந்த வணிக வளாகத்​தின் 3-வது தளத்​தில் நேற்று மதி​யம் திடீரென தீப்​பிடித்​தது. சிறிது நேரத்​தில், அடுத்​தடுத்த தளங்​களுக்​கும் தீ மளமளவென பரவியது. இதில், முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையத்​தில் இருந்த மாணவர்​கள் சிக்​கிக் கொண்​டனர். நுழைவு​வா​யில் வழி​யாகவோ, முன்​பகுதி வழி​யாகவோ அவர்​களால் தப்​பித்து வெளி​யேற முடிய​வில்​லை.

ஜன்னலை உடைத்து குதித்தனர்: இதனால், பயிற்சி மையத்​தின் ஜன்​னல்​களை மாணவர்​கள் உடைத்​தனர். அதன் வழி​யாக 7 மாணவர்​கள் கீழே குதித்​தனர். அதில் ஒரு மாணவன் சுற்​றுச் சுவரில் விழுந்​த​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. அவர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். ஜன்​னல் வழி​யாக குதித்த மாணவர்​களைக் காப்​பாற்ற அக்​கம் பக்​கத்​தினர் உதவினர். மாணவர்​கள் முதல் மாடி​யில் இருந்து குதிப்​பது மற்​றும் ஜன்​னலில் தொங்​கிக் கொண்​டிருந்த காட்​சிகள் வலை​தளங்​களில் பரவி காண்​போரை பதற​வைத்​தது.

பயிற்சி மையத்​துக்​குள் மரத்​தால் செய்​யப்​பட்ட மேஜை, நாற்​காலிகள் அதி​கம் இருந்​த​தால், தீ வேக​மாகப் பரவியது. சுமார் ஒரு மணி நேர​மாகப் பற்​றியெரிந்த தீயை தீயணைப்பு படை​யினர் போராடி அணைத்​தனர். தேசிய பேரிடர் மீட்​புக் குழு​வினரும் விரைந்து வந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். அனிமேஷன் மையத்​தின் பக்​க​வாட்டு சுவரை உடைத்து மாணவர்​கள் மீட்​கும் முயற்​சிகளும் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்​டன. தீ முழு​வது​மாக அணைக்​கப்​பட்ட பிறகு, பயிற்சி மையத்​தில் இருந்து 15 மாணவர்​களின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன.

விபத்து நடந்த இடத்தை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், துணை முதல்​வர் பிரஜேஷ் பதக் ஆகியோர் பார்​வை​யிட்​டனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் துணை முதல்​வர் பதக் கூறிய​தாவது: தீ விபத்​தில் 15 குழந்​தைகள் உயி​ரிழந்​தனர். 4 பேர் காயம் அடைந்​தனர். அவர்​கள் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இச்​சம்​பவம் குறித்து உயர்​நிலை விசா​ரணைக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. காயமடைந்​தவர்​களுக்கு சிறப்​பான சிகிச்சை அளிக்​கப்​படும். விசா​ரணை அறிக்​கைக்​குப் பிறகே தீ விபத்​துக்​கான காரணம் தெரிய​வரும்.

விபத்து நடந்த இடத்​தில் தீ முழு​மை​யாக அணைக்​கப்​பட்​டு, தேடும் பணி முடிந்​து​விட்​டது. வேறு குழந்​தைகள் யாரும் உள்ளே சிக்​க​வில்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டு​விட்​டது. விபத்​துக்கு யாராவது காரணம் என தெரிய​வந்​தால், அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர் மற்​றும் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை செய்​யு​மாறு அதி​காரி​களுக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். விபத்​தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், ‘லக்னோ தீ விபத்து சம்​பவத்​தில் பலர் உயி​ரிழந்​தது மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தினருக்கு எனது இரங்​கல்​கள். காயமடைந்​தோர் விரை​வில் குணமடையப் பிரார்த்​திக்​கிறேன்’என்று தெரி​வித்​துள்​ளார்.

ரூ.2 லட்​சம் நிவாரணம்: பிரதமர் மோடி தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில், ‘லக்னோ தீ விபத்​தில் பலர் உயி​ரிழந்​தது வேதனை அளிக்​கிறது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு எனது இரங்​கல்​கள். காயமடைந்​தோர் விரை​வில் குணமடையப் பிரார்த்​திக்​கிறேன். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம்​ கருணைத்​ தொகை வழங்​கப்​படும்​. காயமடைந்​தோருக்​கு தலா ரூ.50,000 வழங்​கப்​படும்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.