























காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ள திரைப்படம், ‘தி இந்தியா ஸ்டோரி’. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சேட்டன் டிகே இயக்கியுள்ள இதை சாகர் பி ஷிண்டே எழுதித் தயாரித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, எம்ஐஜி புரொடக் ஷன் இணைந்து தயாரித்துள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பற்றி இயக்குநர் சேட்டன் டிகே கூறும்போது, “சமூக பொறுப்புணர்வைத் தூண்டும் இந்தப் படம், சினிமாவைத் தாண்டி விவாதங்களை உருவாக்கும் என்று நம்புகிறேன். ஒரு குடும்பத்தின் கதையாக மட்டுமே சொல்லாமல், பொது மக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் பிரச்சினைகளை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஜூலை 24ம் தேதி வெளியாகிறது” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。