惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
小众软件
小众软件
F
Fortinet All Blogs
Microsoft Security Blog
Microsoft Security Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தம்: தயாரிப்பாளர் சங்கம் தீர...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

புதிய நிர்​வாகி​கள் தேர்​வுக்​குப் பிறகு நடக்​கும் முதல் பொதுக்​குழு கூட்​டம் இது. இதில் இச்​சங்​கத்​தின் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலை​வர்​கள் ஆர்​.கே.சுரேஷ், கமலக்​ கண்​ணன், செய​லா​ளர்​கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகு​மார், பொருளாளர் என்​.சு​பாஷ் சந்​திர​போஸ் உள்பட நிர்​வாகி​கள் மற்​றும் பொதுக்​குழு உறுப்​பினர்​கள் கலந்து கொண்​டனர்.

இக்​கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட தீர்​மானங்​கள் வரு​மாறு: சிறிய முதலீட்​டில் தயாரிக்​கப்​படும் படங்​களுக்கு தமிழ்​நாடு அரசு வழங்கும் மானி​யத்​தொகை கடந்த 10 வருட​மாக நிலு​வை​யில் உள்​ளது. அதை புதி​தாக பதவி​யேற்க இருக்​கும் தமிழ்​நாடு அரசு உடனடி​யாக வழங்​கிட வழி​வகை செய்ய வேண்​டும்.

தமிழ் சினி​மா​வில் தற்​போது ஓடிடி மற்​றும் சாட்​டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்​நிலையை கருத்​தில் கொண்டு ஆந்​தி​ரா​வில் உள்​ளது போல நடிகர்​கள் மற்​றும் முன்​னணி தொழில் ​நுட்ப கலைஞர்​கள் வரு​வாய் பகிர்வு (ரெவனியூ ஷேர்) முறை​யில் தமிழ்​நாட்​டில் உள்ள தயாரிப்​பாளர்​களுக்கு மட்​டும் முன்​னுரிமை அளித்து படம் நடிக்க வேண்​டும்.

தயாரிப்​பாள்​களின் லாப- நஷ்டங்​களில் அவர்​களும் பங்குகொள்ள வேண்​டும் என்று ஏற்​கெனவே நடை​பெற்ற பொதுக் குழு​வில் முடி​வெடுத்து நடிகர் சங்​கத்​துக்​குத் தெரிவிக்கப்பட்​டது. ஆனால், அது குறித்து எந்​த​வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்​ளார்​கள். மேலும், நடிகர்கள் சம்மந்தப்பட்ட பிரச்​சினை​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் வரவில்​லை.

ஆந்​தி​ரா​வில் உள்ள தயாரிப்​பாளர்​கள் அங்​குள்ள நடிகர்​களால் பாது​காக்​கப் படு​கிறார்​கள்.‌ ஆனால், தமிழ்​நாட்​டில் தற்​போது விரல் ​விட்டு எண்​ணக்​கூடிய அளவில் இருக்​கும் தயாரிப்​பாளர்​கள் கூட இனி திரைப் படங்​கள் எடுக்க தயங்​கும் சூழ்​நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்​களில் மீடி​யம் மற்​றும் பெரிய பட்​ஜெட் திரைப்​படங்​கள் வரு​வாய் பகிர்வு என்ற முறையில் மட்​டுமே தயாரிப்​பது என்று முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், இந்த விஷ​யத்தை சினி​மாத்​துறை​யில் உள்ள அனைவரின் கவனத்​துக்​குக் கொண்டு சேர்க்​கும் வகை​யில், ஒரு​ நாள் அடை​யாள வேலை நிறுத்​தம் செய்​ய​வும், நடிகர் சங்​கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்​கு​மா​னால் தொடர் வேலை நிறுத்​தம் செய்​ய​வும் முடிவு செய்​துள்​ளோம் என்​பது உள்பட பல்வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.