惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
C
Check Point Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
美团技术团队
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘விஜய் பதவியேற்பு விழாவில் தமிழை பின்னுக்கு தள்ளியிருப்பத...
2026-05-11 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ​முதல்​வர் விஜய்​யின் பதவி​யேற்பு விழா​வில், தமிழை பின்​னுக்கு தள்​ளி​யிருப்​பது ஏற்​புடையது அல்ல என திமுக, விசிக, கம்​யூனிஸ்ட் உள்ளிட்ட கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறியிருப்பதாவது:

தி​முக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி: மாற்​றம் என்று கூறிக்​கொண்டு தமிழுக்கு முக்​கி​யத்​து​வம் தராமல் இருப்​பது அழிவுப் பாதைக்கு கொண்டு செல்​லும்.

முன்​னாள் முதல்வர்கள் எம்​ஜிஆர், ஜெயலலி​தா, கருணாநிதி காலத்​தி​லும்​கூட இவ்​வாறான செயல் நடை​பெற​வில்​லை. தற்​போதைய ஆட்​சி​யின் மூலம் தமிழ்​மொழி பின்​னுக்கு தள்​ளப்​பட்​டு, தமிழ்த்​தாய் வாழ்த்து போன்று தமிழக​மும் மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​படும்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முதல்​வர் பதவி​யேற்பு நிகழ்​வில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்​கி, தமிழ்த்​தாய் வாழ்த்து பாடலை மூன்​றாம் நிலை​யில் வைத்​தது மரபு மீறிய செய​லாகும். இந்த தவறுக்கு காரண​மானவர்​கள் யாராக இருந்​தா​லும் கண்​டனத்​துக்​குரியது. இந்த தவறு மீண்​டும் தொடரக்​கூ​டாது.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: முதல்​வர் விஜய்​யின் பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில் முதலில் வந்தே மாதரம் பாடப்​பட்​டது, பெரும்​பாலான மக்​களால் புரிந்​து​கொள்ள முடி​யாமல் இருந்​தது.

மேலும், இரண்​டாவ​தாக தேசிய கீத​மும், மூன்​றாவ​தாக தமிழ்த்​தாய் வாழ்த்​தும் பாடப்​பட்​டது. இது ஏற்​புடையதல்ல. எனவே, அரசு நிகழ்ச்​சிகளில் ஏற்​கெனவே கடைபிடிக்​கப்​பட்டு வரும் நடை​முறை​கள் பின்​பற்​றப்​படு​வதை தமிழக அரசு உத்​தர​வாதப்​படுத்த வேண்​டும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்டியன்: தமிழக அரசு விழாக்​களில் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடு​வது தான் இது​வரை கடைபிடித்து வரும் மரபு.

ஆனால் முதல்​வரின் பதவி​யேற்பு விழா​வில், வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்​கி, தமிழை மூன்​றாம் நிலை​யில் வைத்​தது மரபை மீறிய செய​லாகும். இந்த தவறுக்கு காரண​மானவர்​கள் யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும்.

திக தலை​வர் கி.வீரமணி: முதல்​வர் பதவி​யேற்பு விழா​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டிருப்​பதை பார்த்​து, தமிழ் உணர்​வாளர்​களின் நெஞ்சு கொ​திக்​கிறது. இது​போன்ற அவலங்​கள் மீண்​டும் தொட​ராது இருக்க முதல்​வர் வழி​வகை காண வேண்​டும்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: பதவி​யேற்பு விழா​வில் நீண்​ட​கால மரபு மீறப்​பட்​டுள்​ளது அதிர்ச்​சி​அளிக்​கிறது. ‘வந்தே மாதரம்’ பாடலை முதலா​வ​தாக​வும், தேசிய கீதத்தை இரண்​டாவ​தாக​வும் இசைத்த பின்​னரே தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டுள்​ளது. இது அதி​காரி​களின் கவனக்​குறை​வா அல்​லது ஆளுநரை மகிழ்விக்​கச் செய்​யப்​பட்​ட​தா என்​ப​தற்கு முதல்​வர் விளக்​கமளிக்க வேண்​டும்​.

தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன்: முதல்​வரின் பதவி​யேற்பு நிகழ்ச்​சி​யில், தமிழ்த்​தாய் வாழ்த்து மூன்​றாவது இடத்​துக்கு தள்​ளப்​பட்ட சம்​பவம், ஒட்​டுமொத்த தமிழர் உணர்​வு​களை​யும் காயப்​படுத்​தி​யுள்​ளது. அரசு நிகழ்​வு​களில் தமிழுக்கு முதலிடம் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

தமிழ்த்​தாய் வாழ்த்து கடைசி​யாக பாடப்​பட்​ட​தில் உடன்​பாடு இல்லை: அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விளக்கம்

தமி்ழ்த்​தாய் வாழ்த்து கடைசி​யாக பாடப்​பட்​ட​தில் தவெக​வுக்​கும் உடன்​பாடு இல்லை என்​றும், இனி வரும் காலங்​களில் இது​போல நடை​பெறாது என்​றும் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக முதல்​வர் பதவி​யேற்பு விழா​வில் வந்தே மாதரம் முதலா​வ​தாக​வும், தேசிய கீதம் இரண்​டாவ​தாக​வும், தமிழ்த்​தாய் வாழ்த்து மூன்​றாவ​தாக​வும் பாடப்​பட்​டது பெரும் சர்ச்​சைக்​குள்​ளானது.

இதுதொடர்​பாக புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா விளக்​கம் அளித்​துள்​ளார். இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: முதல்​வர் பதவி​யேற்பு விழா​வில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடல் மூன்​றாவ​தாக இசைக் ​கப்​பட்​ட​தில் தவெக தலை​மை​யில் அமைந்​துள்ள தமிழக அரசுக்​கும் உடன்​பாடு இல்​லை.

தாய்த்​தமிழ்​நாட்​டில் அரசு விழாக்​களில் தமிழ்த்​தாய் வாழ்த்தை முதலா​வ​தாக பாடு​வது என்​பது நீண்ட கால மரபு. நாங்​கள் இதுதொடர்​பாக ஆளுநர் தரப்​பிடம் வலி​யுறுத்​தி​ய​போது மத்​திய அரசின் புதிய சுற்​றறிக்​கைப்​படி செயல்பட வேண்​டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்​ப​தாக தெரிவிக்​கப்​பட்​டது.

தவிர்க்க முடி​யாத சூழலில், தமிழ்த்​தாய் வாழ்த்​துப்​பாடல் மூன்​றாவ​தாக ஒலிக்​கப்​பட்​டது. இனிவரும் காலங்​களில் இந்த புதிய நடை​முறை பின்​பற்​றப்​ப​டாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.