惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
博客园 - 叶小钗
雷峰网
雷峰网
小众软件
小众软件
量子位
V
Visual Studio Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
Martin Fowler
Martin Fowler
G
Google Developers Blog
博客园_首页
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

Updated on: 

மாஸ்கோ: உக்​ரைன் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​து​வோம் என்று ரஷ்யா பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. கடந்த வியாழக்​கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே அமைந்​துள்ள கச்சா எண்​ணெய் கிடங்கு மீது ஒரே நேரத்​தில் சுமார் 200-க்​கும் மேற்​பட்ட உக்​ரைன் ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்​தின. இதில் எண்​ணெய் கிடங்கு முழு​மை​யாக தீப்​பிடித்து எரிந்​தது.

இதுகுறித்து ரஷ்ய வெளி​யுறவு அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் கூறும்​போது, “மீண்​டும் ஒரு தீவிர​வாத தாக்​குதலை உக்​ரைன் நடத்தி உள்​ளது. இதற்கு பதிலடி​யாக உக்​ரைன் மீது மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்​து​வோம். இந்த தாக்​குதல்​கள் உக்​ரைன் படைகளை நிலைகுலை​யச் செய்​யும்” என்று தெரி​வித்​தார்.

ரஷ்ய ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: உக்​ரைனுக்கு எதி​ரான போரில் ரஷ்யா நிதானத்தை கடை​ப்பிடித்து வரு​கிறது. உக்​ரைனின் அத்​து​மீறல்​கள் தொடர்ந்​தால் அந்த நாட்​டின் அனைத்து உள்​கட்​டமைப்​பு​களும் தரைமட்​ட​மாக்​கப்​படும். முக்​கிய சாலைகள், ரயில் பாதைகள், பாலங்​கள், சுரங்​கப்​பாதைகள், ரயில் நிலை​யங்​கள், விமானநிலை​யங்​கள் தகர்க்​கப்​படும். அனைத்து முனை​களி​லும் போரை தீவிரப்​படுத்​து​வோம். உக்​ரைன் மீது அலை, அலை​யாக தாக்​குதல் நடத்​தப்​படும்.

இவ்​வாறு ரஷ்ய ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி கூறும்​போது, “எங்​கள் நகரங்​கள் மீது தீவிர தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்​றன. இதற்கு பதிலடி​யாகவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்​ளிட்ட நகரங்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதலை நடத்தி உள்​ளோம். எங்​களுக்கு ஆதரவு அளிக்​கும்​ ஐரோப்​பிய நாடு​களுக்​கு நன்​றி” என்​று தெரிவித்துள்ளார்.