惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

T
Tailwind CSS Blog
博客园 - 【当耐特】
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
The Cloudflare Blog
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உண்மையான ஆல்ரவுண்டர்! - பீல்டிங், பேட்டிங் கலக்கலில் ரிங்...
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தின் மோசமான சிந்தனையினால் வீணாக்கப்பட்ட ரிங்கு சிங் கடந்த 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததோடு மொத்தமாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த இன்னிங்ஸிற்கு முன்பாக 94 பந்துகளில் 98 ரன்களையே எடுத்திருந்தார்.

நேற்று அணியில் தன் இன்றியமையாமையை நிரூபித்தார். பந்து வீச்சு, பீல்டிங் பேட்டிங் என்று ஆடினால்தான் ஆல்ரவுண்டர் என்று பொருளல்ல, நேற்று ரிங்கு சிங் 5 கேட்ச்களுடன் அபார பேட்டிங்கையும் நெருக்கடியில் வெளிப்படுத்தியதால் உண்மையான ஆல்ரவுண்டர் தான் என்பதை காட்டினார்.

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா சூப்பர் ஓவரில் வெற்றி பெற இருவர்தான் காரணம் முதலில் சுனில் நரைனின் அற்புதமான 2 விக்கெட் ஓவர். ரிங்கு சிங்கின் கேட்சிங். ஆட்டம் முழுவதுமே ரிங்கு சிங் நேற்று பங்களிப்பு செய்தார். அதுவும் 19 ஓவர்களில் கொல்கத்தா அணி 129/7 என்றுஇருந்தது. அப்போதுதான் ரிங்கு சிங் எழுச்சி பெற்றார்.

திக்வேஷ் ராத்தியின் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசி அந்த ஓவரில் 26 ரன்களைக் குவித்து ஸ்கோரை 155 என்ற நிலைக்கு உயர்த்தினார். ரிங்கு சிங் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று 83 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மாறாக லக்னோ அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது கிரீசில் ஹிம்மத் சிங்கும், ஷமியும் இருந்தனர்.

அடுத்தடுத்து கார்த்திக் தியாகி நோ-பால்களை வீசினாலும் பவுண்டரி ஒன்றைக் கொடுத்தாலும் ஹிம்மத் விக்கெட்டைக் காலி செய்ததோடு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஷமி தன் பேட்டிங் திறமையைக் காட்டி லாங் ஆஃபில் சிக்ஸ் விளாசி போட்டியை டை ஆக்கி சூப்பர் ஓவருக்கு நகர்த்தினார். சூப்பர் ஓவர் முதல் ஓவரிலேயே நரைன் கலக்க உப்புச் சப்பின்றி 2 விக்கெட்டுகள் விழ 1 ரன்னையே எடுத்தது லக்னோ. அதுவும் நிகலஸ் பூரனுக்கு நரைன் வீசிய அற்புதமான பந்தில் ஆஃப் ஸ்டம்ப் பெயர்ந்தது.

ரிஷப் பண்ட் ஒரு சிங்கிள் எடுக்க அய்டன் மார்க்ரம் பந்தை தூக்கி அடித்தார். ரோவ்மென் போவெல் பந்தை பிடித்தார், ஆனால் பவுண்டரியைக் கடந்து விடுவோம் என்று பந்தை விளையாட்டு எல்லைக்குள் தட்டி விட ரிங்கு சிங் அதைப் பிடித்தார் மார்க்ரம் அவுட். இது இந்தப் போட்டியில் ரிங்கு சிங்கின் 5-வது கேட்ச். பிறகு சூப்பர் ஓவரில் ஓப்பனிங்கில் இறங்கிய ரிங்கு சிங் பவுண்டரி விளாசி கொல்கத்தாவை வெற்றிக்கு இட்டுச் சென்று ஆட்ட நாயகன் பரிசை வென்றார்.

ரிங்கு சிங் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஓவர்களில் 73/6 என்றும் பிறகு ரமந்தீப் சிங் ஆட்டமிழக்க ஸ்கோர் 93/7 என்று ஆனது. இன்னொரு தோல்விதான் என்ற நிலையில் ரிங்கு சிங் அணியை மீட்டார். ரிங்கு சிங் முதலில் நிதானமாக ஆடி 40 பந்துகளில் 43 ரன்களையே எடுத்திருந்தார், ஆனால் இது ஒரு முக்கியமான இன்னிங்சின் அங்கம் என்று அப்போது எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

19 வது ஓவரை ஷமி வீச ரிங்கு அவரை 6.4, 4 என்று விளாசினார். பிறகு 20வது ஓவரில் திக்வேஷ் ராத்தியை பின்னி எடுத்து 4 சிக்சர்களுடன் 26 ரன்கள் அந்த ஓவரில் வர கொல்கத்தா 155 ரன்களை எட்டியது பிறகு இதுவே வெற்றி ஸ்கோராக மாறியது. பவுலிங் போடாவிட்டால் என்ன ரிங்கு சிங் தன் பீல்டிங் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார், அதோடு நெருக்கடியான தருணங்களில் மேட்ச் வின்னிங்ஸ் இன்னிங்சையும் ஆடிக்கொடுக்கிறார். நிச்சயம் ரிங்கு சிங் ஓர் ஆல்ரவுண்டர்தான்.