惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Help Net Security
C
Check Point Blog
博客园 - 聂微东
云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
WordPress大学
WordPress大学
B
Blog
Last Week in AI
Last Week in AI
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
G
Google Developers Blog
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி: 2,639 ...
2026-05-09 · via hindutamil

Updated on

3 min read

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய 7.92 லட்​சம் மாணவ, மாணவி​களில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். வழக்​கம்​போல, மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர்.

489 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 2,639 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் இந்த ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்​களில் நடை​பெற்​றது. பதிவு செய்த 7 லட்​சத்து 99,528 மாணவ, மாணவி​களில் 7 லட்​சத்து 91,654 பேர் தேர்வு எழு​தினர். 7,874 பேர் (0.98%) பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளி​யிட்​டார். தொடர்ந்​து, தேர்​வுத் துறை இணை​யதளத்​தி​லும் முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. மாணவர்​களின் செல்​போன் எண்ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக​வும் (எஸ்​எம்​எஸ்), பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சலிலும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு விவரங்​கள் அனுப்​பப்​பட்​டன. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூல​மாக​வும் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழு​தி​ய​தில் 7 லட்​சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (95.03%) இது 0.17 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 97 சதவீத​மும், மாணவர்​கள் 93.19 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை​விட மாணவி​கள் 3.81 சதவீதம் அதி​கம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்​தில் மாணவி​களே முன்​னிலை வகிக்​கின்​றனர்.

அரசுப் பள்ளி மாணவர்​கள் 1,695 பேர் உட்பட மொத்​தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்​தில் 100 மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றுள்​ளனர். மாவட்ட அளவி​லான தேர்ச்​சி​யில் 98.87 சதவீதத்​துடன் ஈரோடு முதலிடம் பெற்​றுள்​ளது. சிவகங்கை (98.05%), கன்​னி​யாகுமரி (97.63%) மாவட்​டங்​கள் அடுத்த 2 இடங்​களில் உள்​ளன. கடைசி இடத்​தில் விழுப்​புரம் (85.92%) உள்​ளது. தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்​ளது. அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் ஈரோடு (98.24%) மாவட்​டம் முதலிடத்​தில் உள்​ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்​கடுத்த 2 இடங்​களைப் பிடித்​துள்​ளன. விழுப்​புரம் (82.10%) மாவட்​டம் கடைசி இடத்​தில் உள்​ளது. இத்​தேர்​வில் 7,536 பள்​ளி​களைச் சேர்ந்த மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். இதில் 489 அரசுப் பள்​ளி​கள் உட்பட 2,639 பள்​ளி​கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

தனி​யார் பள்​ளி​களின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலை​யில் தற்​போது 98.72% ஆக குறைந்​துள்​ளது. அதே​நேரம், அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்​டை​விட சற்று உயர்ந்​துள்​ளது.

25,521 தனித் தேர்​வர்​களில் 6,171 பேர் (24%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றனர். 8,855 மாற்​றுத்திறன் மாணவர்​களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதி​களில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்ளனர். பிளஸ் 1 வகுப்​பில் தனித் தேர்​வர்​களாக 20,444 பேர் தேர்வு எழு​தி​ய​தில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்​வுத் துறை இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) தற்​காலிக மதிப்​பெண் பட்​டியல் மே 13-ம் தேதி வெளி​யிடப்​படு​கிறது. மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் வாயி​லாக​வும், தனித் தேர்​வர்​கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் மூல​மாக​வும் மதிப்​பெண் பட்​டியலை பெற்​றுக் கொள்​ளலாம். அசல் மதிப்​பெண் சான்​றிதழ் ஜூன் மாதம் வழங்​கப்​படும். விடைத்​தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஜூனில் துணைத் தேர்வு: பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை தவற​விட்​ட​வர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியைத் தொடர ஏது​வாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். மறும​திப்​பீடு, மறுகூட்​டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தேர்​வுத் துறை தெரி​வித்​துள்​ளது.

கட்​ஆஃப் குறை​யும்: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்கு பிர​தான​மான கணிதம், இயற்​பியல், வேதி​யியல் பாடங்​களில் மாணவர்​களின் தேர்ச்சி கடந்த ஆண்​டை​விட சற்று குறைந்​துள்​ளது. தவிர, முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்​துள்​ளது. கடந்த 2025-ல் வேதி​யியல் 3,181, கணிதம் 3,022, இயற்​பியல் 1,125 பேர் என ‘சென்​டம்’ பெற்ற நிலை​யில், தற்​போது வேதி​யியல் 632, கணிதம் 732, இயற்​பியல் 105 பேர் என குறைந்​துள்​ளது.

இதனால், கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது கட்​ஆஃப் 180-200 பிரி​வில் 2 முதல் 4 வரை​யும், 160-179 பிரி​வில் 6 முதல் 8 வரை​யும் மதிப்​பெண் குறை​யும். இதுத​விர, நீட் தேர்வு தேவைப்​ப​டாத கால்​நடை மருத்​து​வம் போன்ற இதர மருத்​து​வப் படிப்​பு​களுக்​கும் கட்​ஆஃப் மதிப்​பெண் கணிச​மாக குறை​யும் என்று கூறப்​படு​கிறது.

மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

கணிதத்தில் 732 மாணவர்கள் 100-க்கு 100: பாட​வாரி​யாக 100-க்கு 100 பெற்​றவர்​களின் எண்​ணிக்கை:

  • தமிழ் - 83

  • ஆங்​கிலம் - 21

  • இயற்​பியல் - 105

  • வேதி​யியல் - 632

  • உயி​ரியல் - 784

  • கணிதம் - 732

  • தாவர​வியல் -31

  • விலங்​கியல் - 18

  • கணினி அறி​வியல் - 6,945

  • வணி​க​வியல் - 683

  • கணக்​குப் பதி​வியல் - 1,946

  • பொருளா​தா​ரம் - 440

  • வரலாறு - 282

  • புவி​யியல் - 42

  • கணினி பயன்​பாடு​கள் - 2,099

  • வணி​க கணிதம்​ மற்றும்

  • புள்​ளி​யியல் - 463

  • புள்​ளி​யியல் - 17

  • மனை​யியல் - 6

கணினி அறிவியலில் தேர்ச்சி வீதம் அதிகம்: பிளஸ் 2 தேர்​வில் கணினி அறி​வியல் பாடத்​தில் தேர்ச்சி வீதம் அதி​க​மாக​வும், பொருளா​தார பாடத்​தில் குறை​வாக​வும் காணப்​படு​கிறது. தேர்ச்சி வீதம் வரு​மாறு:

  • மொழிப்​பாடம் - 98.96%

  • ஆங்​கிலம் - 98.74%

  • இயற்​பியல் - 98.87%

  • வேதி​யியல் - 98.82%

  • உயி​ரியல் - 99.49%

  • கணிதம் - 99.12%

  • தாவர​வியல் - 98.62%

  • விலங்​கியல் - 98.69%

  • கணினி அறி​வியல் - 99.84%

  • வணி​க​வியல் - 97.55%

  • கணக்​குப் பதி​வியல் - 98.94%

  • வரலாறு - 97.90%

  • புவி​யியல் - 99.32%

  • புள்​ளி​யியல் - 99.58

  • பொருளா​தா​ரம் - 97.54%

  • மனை​யியல் - 96.89%

பாடப் பிரிவு​கள் (குரூப்) வாரி​யாக தேர்ச்சி வீதம்:

  • அறி​வியல் பிரிவு - 96.90%

  • வணி​க​வியல் - 92.67%

  • கலை - 85.19%

  • தொழிற்​பாடம் - 85.97%​

மாவட்ட வாரியாக ஒட்டுமொத்த தேர்ச்சி (%)

  • ஈரோடு 98.87

  • சிவகங்கை 98.05

  • கன்னியாகுமரி 97.63

  • திருநெல்வேலி 97.54

  • திருச்சி 97.50

  • தூத்துக்குடி 97.24

  • தஞ்சாவூர் 97.19

  • தென்காசி 97.18

  • விருதுநகர் 97.17

  • நாமக்கல் 97.04

  • திருப்பூர் 97.03

  • ராமநாதபுரம் 96.70

  • கோவை 96.66

  • சேலம் 96.61

  • கரூர் 96.20

  • மதுரை 96.13

  • திண்டுக்கல் 95.92

  • புதுக்கோட்டை 95.88

  • கடலூர் 95.57

  • சென்னை 95.43

  • காஞ்சிபுரம் 95.31

  • தேனி 95.27

  • பெரம்பலூர் 94.53

  • நாகப்பட்டினம் 94.38

  • கள்ளக்குறிச்சி 94.26

  • நீலகிரி 94.13

  • திருவள்ளூர் 94.11

  • திருப்பத்தூர் 93.68

  • மயிலாடுதுறை 93.51

  • தருமபுரி 93.49

  • செங்கல்பட்டு 93.25

  • தி.மலை 92.87

  • அரியலூர் 91.70

  • கிருஷ்ணகிரி 91.31

  • திருவாரூர் 91.00

  • வேலூர் 90.73

  • ராணிப்பேட்டை 88.20

  • விழுப்புரம் 85.92