惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
小众软件
小众软件
美团技术团队
Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
B
Blog
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“விசிக தவிர்க்க முடியாத கட்சியாக இருப்பதற்கு திமுகவும், க...
2026-04-20 · via hindutamil

Updated on

2 min read

கும்பகோணம்: “தவிர்க்கமுடியாத அரசியல் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம், வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றார்கள். ஆகவே, திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நடிகரின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றார்கள் என அண்மையில் சில வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சினிமா மயக்கம் இல்லாதவர்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள் நீங்கள் என்பது எனக்கு உறுதியாக தெரியும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக அங்கீரிகபட்டதற்கு வாக்கு ஒரு காரணமாக இருந்தாலும், கூட்டணி கட்சிகளும் காரணம். நாடு சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளில் தென் இந்தியாவிலேயே அங்கீகாரம் பெற்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

தவிர்க்கமுடியாத கட்சியாக விடுதலை சிறுத்தைகள் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் திமுகவும், கூட்டணி கட்சிகளும்தான். தமிழகத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் நாம், வெற்றி பெற வேண்டும் என கூட்டணி கட்சிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றார்கள். ஆகவே, திமுக தோழமைக் கட்சி வேட்பாளர்களை நாம் வெற்றி பெற வைக்க வேண்டும்.

அதிமுக தற்போது அமித்ஷா அதிமுகவாக மாறி விட்டது. பாஜக-அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை அடிப்படையில் உறவு இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். ஆனால் அவர் காலமாகி விட்டார் என்ற துணிச்சலில் பாஜகவுடன், பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார். இது ஜெயலலிதாவிற்கு செய்த துரோகமாகும்.

திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என பாஜக திட்டமிட்டு, நண்பர் விஜயை களம் இறக்கி விட்டுள்ளார்கள். அவருடன் ஆர்எஸ்எஸ் உறவில் இருக்கின்றது என்றால் பாஜகவுடன் உறவு என்பது அர்த்தம். நண்பர் விஜய், கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில் இதுவரை அவர் பேசியது, திமுக வெறுப்பு, திமுக பற்றி தான் பேசியுள்ளார். ஆனால் விஜய், மோடி, அமித்ஷா ஆகியோரையும், சமத்துவம், சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை பற்றி பேசவில்லை. அவர் பாஜக கொள்கை எதிரி என்ற ஒரு வார்த்தை தவிர வேறு எதுவும் பேசமாட்டார்.

அதிமுக - பாஜக கூட்டணியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் நோக்கமாகும். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வாக்கு திமுக கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என களம் இறக்கி விடப்பட்டவர் விஜய். அவருக்கு வாக்கு செலுத்தினால், பாஜகவிற்கு செலுத்துவதாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகமூடி அணிந்து வருகிறார்கள். எனவே, கும்பகோணம் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.