惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
The GitHub Blog
The GitHub Blog
F
Fortinet All Blogs
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
爱范儿
爱范儿
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
宝玉的分享
宝玉的分享
GbyAI
GbyAI
H
Help Net Security
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
D
Docker
博客园 - Franky
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஜம்ப் கட்: தடையற்ற ஓட்டத்துக்கு ஒரு எடிட்டிங் புரட்சி | ஒ...
2026-05-06 · via hindutamil
சி.ஜெ.ராஜ்குமார்

Updated on

3 min read

சினிமா எடிட்​டிங்​கில் இது​வரை பார்த்த ‘இன் விசிபிள் கட்’ அல்​லது ‘கட் ஆன் ஆக் ஷன்’ போன்ற நுட்​பங்​கள் அனைத்தும் ஒரு காட்​சி​யைத் தடை​யின்​றி (சீம்​லெஸ்) காட்​டு​வதையே நோக்​க​மாகக் கொண்​ட​வை.

ஆனால், அந்த விதி​களை உடைத்​து, எடிட்​டிங் செய்​யப்​பட்​டுள்​ளது என்​ப​தைப் பார்​வை​யாள​ருக்​குத் தெள்​ளத்​தெளி​வாகக் காட்​டும் நுட்​பம்​தான் ‘ஜம்ப் கட்’ (Jump Cut). ஒரு தொடர்ச்​சி​யான ஷாட்​டில், இடை​யில் இருக்​கும் சில வினாடிகளை வெட்டி எடுத்​து​விட்​டு, மீத​முள்ள பகு​தியை இணைக்​கும்​போது உரு​வாகும் அந்த ‘கு​திப்​பு’ (ஜம்ப்), சினி​மா​வின் இலக்​கணத்​தையே மாற்​றியமைத்​தது.

ஜீன்​-லூக் கோடார்ட்: ஜம்ப் கட்​டின் பிதாமகன்

1960-களில் உரு​வான ‘பிரெஞ்சு நியூவேவ்’ இயக்​கத்​தின் நாயகன் ஜீன்​-லூக் கோடார்ட், தனது முதல் படமான ‘பிரத்​லெஸ்’ (Breathless / bout de souffle) மூலம் ஜம்ப் கட் நுட்​பத்தை உலகுக்கு அறி​முகப்​படுத்தினார்.

ஏன் ஜம்ப் கட்?

அந்​தக்​காலத்​தில் ஒரு படம் நீள​மாக இருந்​தால், தேவையற்ற காட்​சிகளை நீக்​கு​வார்​கள். ஆனால் கோடார்ட், ஒரு நீண்ட ஷாட்​டுக்​குள்​ளேயே தேவையற்ற வினாடிகளை வெட்டி எறிந்​தார்.

விளைவு: ஒரு கதா​பாத்​திரம் காரில் பயணிக்​கும்​போது, பின்​னணி மட்​டும் திடீர் திடீரென மாறும், ஆனால் கதா​பாத்​திரம் அதே நிலை​யில் இருப்​பார். இது அந்த கதா​பாத்​திரத்​தின் ஒரு​வித​மான ‘அந்​நியப்​படு​தல்’ உணர்​வை​யும் பார்​வை​யாள​ருக்​குக் கடத்​தி​யது. “எடிட்​டிங் என்​பது மறைத்து வைக்​கப்பட வேண்​டியது அல்ல; அது ஒரு கலை என்​ப​தைப்பார்​வை​யாளர் உணர வேண்​டும்” என்பது கோடார்ட்​டின் தத்​து​வம்.

இசைப் படங்​கள்: நடனத்​தின் வேகம்

இசைப் படங்​களில் ஜம்ப் கட் ஒரு வரப்​பிர​சாதம். ஒரு பாடலில் உணர்ச்​சிகள் உச்​சத்​தில் இருக்​கும்​போது, காலத்​தைக் கடத்த இது பயன்​படு​கிறது.

நடன அசைவு​கள்: நடனக் கலைஞர் ஒரு சுழற்​சி​யைத் தொடங்​கும்​போது ஒரு கோணத்​தி​லும், அந்​தச் சுழற்​சி​யின் நடு​வில் அடுத்த கோணத்​துக்​கும் ஜம்ப் கட் செய்​யும்​போது, அந்த நடனத்​தின் வேகம் அதீத​மாகத் தெரி​யும்.

பாடல் காட்​சிகள்: 3 நிமிடப் பாடலுக்​குள் பல மாதங்​கள் அல்​லது பல இடங்​களைக் காட்ட வேண்​டி​யிருக்​கும்​போது, ஜம்ப் கட் ஒரு பால​மாகச் செயல்​படு​கிறது. ஓர் உடை​யில் இருக்​கும் கதா​பாத்​திரம், அடுத்த மைக்ரோ செகண்​டில் மற்​றொரு உடை​யில் அதே அசை​வைத் தொடர்​வது ‘மேட்ச் கட்’ கலந்த ஜம்ப் கட் ஆகும்.

‘அபூர்வ சகோ​தரர்​கள்’ இந்​திய சினி​மா​வில் ஜம்ப் கட் நுட்​பம் மிக​வும் ஆக்​கப்​பூர்​வ​மாகக் கையாளப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, கமல்​ஹாசன் - சிங்​கீதம் சீனி​வாச ராவ் கூட்​ட​ணி​யில் வெளி​யான ‘அபூர்வ சகோ​தரர்​கள்’ ஒரு சிறந்த உதா​ரணம்.

அப்​பு​வின் அசைவு​கள்: குள்​ள​மான அப்பு கதா​பாத்​திரத்​தின் அசைவு​களில் விசித்​திர​மான வேகம் இருக்​கும். அவர் ஒரு மேஜையிலிருந்து இன்​னொரு இடத்​துக்​குத் தாவும்​போதும், சண்​டை​யிடும் போதும் ஜம்ப் கட் நுட்​பம் அந்த கதா​பாத்​திரத்​தின் சுறுசுறுப்பை அதி​கப்​படுத்​தப் பயன்​படுத்​தப்​பட்​டது.

கமல்​ஹாசன் தனது பல படங்​களில், (உதா​ரண​மாக ‘ஹே ராம்’, ‘விரு​மாண்​டி’) ஜம்ப் கட்​டு​களை கதா​பாத்​திரத்​தின் குழப்​ப​மான மனநிலை​யைக் காட்​டப் பயன்​படுத்​தி​யிருப்​பார். ஒரு நபர் ஒரே இடத்​தில் அமர்ந்து யோசிக்​கும்​போது, அவர் வெவ்​வேறு கோணங்​களில் திடீர் திடீரெனத் தோன்​று​வது அவரது மனவோட்​டத்​தின் வேகத்​தைக் குறிக்​கும்.

ஜம்ப் கட்​டின் உளவியல் தாக்​கம்:

சாதா​ரண​மாக எடிட்​டிங் என்​பது கண்​ணுக்​குத் தெரி​யாத​வாறு இருக்க வேண்​டும் என்று நாம் பார்த்​தோம். ஆனால் ஜம்ப் கட் ஏன் பயன்​படுத்​தப்​படு​கிறது? பதற்​றம்: ஒரு த்ரில்​லர் காட்​சி​யில்​, க​தா​பாத்​திரம் பயந்து கொண்​டிருக்​கும்​போது, ஜம்ப் கட்​டு​கள் அந்​தப் பயத்தை அதி​கப் படுத்​தும். காட்சி நிலைபெறாமல் ‘கு​திப்​பது’ பார்​வை​யாள​ருக்கு ஒரு​வித அசவு​கரி​யத்​தைத் தரும்.

காலத்​தைச் சுருக்​குதல்: ஒரு நபர் மிக நீண்ட தூரத்தை நடந்து கடப்​ப​தைக்காட்ட 5 நிமிடங்​கள் தேவை​யில்​லை. 10 வினாடிகளுக்​குள் 5 ஜம்ப் கட்​டு​களைப் பயன்​படுத்​தி​னால், அவர் வெகுதூரம் கடந்​து​விட்​டார் என்​ப​தைப் பார்​வை​யாளர் புரிந்து கொள்​வர்.

ஆற்​றல்: வேக​மான ஆக் ஷன் அல்​லது இசை காட்​சிகளில் இது ஒரு துடிப்​பான உணர்​வைத் தரும்.

ஒளிப்​ப​தி​வாளரின் நிபுணத்​து​வம்

ஒரு ஜம்ப் கட் சிறப்​பாக அமைய ஒளிப்​ப​தி​வாளர் சில விஷ​யங்​களைக் கவனிக்க வேண்​டும்:

30-டிகிரி விதி: ஒரு ஷாட்​டுக்​கும் அடுத்த ஷாட்​டுக்​கும் இடையே கேமரா கோணம் 30 டிகிரிக்​கும் குறை​வாக மாறி​னால், அது தற்​செய​லான ஜம்ப் கட் போலத் தெரி​யும் (பிழை போலத் தெரி​யும்). ஆனால் வேண்​டுமென்றே ஜம்ப் கட் செய்​யும்​போது, அதே கோணத்​தில் நின்​று​கொண்டு காலத்தை மட்​டும் வெட்​டு​வது ஒரு பாணி​யாகப் பின்​பற்​றப்​படு​கிறது.

லுக் ரூம்: ஜம்ப் கட் செய்​யும்​போது கதா​பாத்​திரத்​தின் பார்​வைத் திசை மாறாமல் இருப்​பது அவசி​யம். இல்​லை​யெனில், பார்​வை​யாளர் திசை தெரி​யாமல் குழம்​பி​விடு​வர். பின்​னணி மாற்​றம்: கதா​பாத்​திரத்​தின் அசைவை விட பின்​னணி​யில் ஏற்​படும் மாற்​றமே ஜம்ப் கட்டை அழகாக்கும்.

உலக சினி​மா​வில் நவீன உதா​ரணங்​கள்

இன்று ஜம்ப் கட் என்​பது ஒரு பொது​வான நுட்​ப​மாக மாறி​விட்​டது. பிரேசிலிய படமான ‘சிட்டி ஆஃப் காட்​’-ல், போதைப்​பொருள் கும்​பல்​களின் வாழ்க்​கையை விவரிக்க ஜம்ப் கட் அதீத​மாகப் பயன்​படுத்​தப்​பட்​டது. இது அவர்​கள் வாழ்வின் நிச்சயமற்ற தன்​மை​யைக் காட்டியது.

யூ-டியூப் மற்​றும் சமூக ஊடகங்​கள்: இன்று சிறிய வீடியோக்​கள் முதல் பெரிய படங்​கள் வரை, பேச்​சில் இருக்​கும் இடைவெளி​களை நீக்கி வேகத்​தைக் கூட்ட ஜம்ப் கட் அடிப்​படைத் தேவை​யாகி​விட்​டது.

விதி​களின் மீறலே கலை

சினிமா விதி​களால் ஆனது; ஆனால் அந்த விதி​களை எப்​போது மீற வேண்​டும் என்று தெரிந்​து​கொண்ட பிறகு செயல்​படுத்​து​வதே சிறந்த கலைஞனின் அடை​யாளம். ‘இன்​விசிபிள் கட்’ அமை​தி​யைக் கொடுத்​தால், ‘ஜம்ப் கட்’ அதிர்ச்​சி​யைத் தரு​கிறது. கோடார்ட் ஒரு விபத்​தைப் போலத் தொடங்​கிய இந்த நுட்​பம், இன்று சினி​மா​வின் மிக வலிமை​யான மொழிகளில் ஒன்​றாகத் திகழ்​கிறது.

புரொஃபைல் ஷாட்​கள், மீடி​யம் லாங் ஷாட்​கள், ஸ்மாஷ் கட்​டு​கள் மற்​றும் பெர்க்​மேன் ஷாட்​கள் என நாம் விவா​தித்த அனைத்​தும் ஒரு கோர்​வை​யாக இணை​யும்​போது, ஜம்ப் கட் என்​பது அந்த மாலை​யில் கோர்க்​கப்​பட்ட ஒரு வைரக்​கல்​லாக ஜொலிக்​கிறது. இது ஒரு கலை மட்​டுமல்ல; மாறாக, காலத்தை நம் விருப்​பப்​படி வளைக்​கும் ஒரு மந்திரக்​கோல்.

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்​)

- cjrdop@gmail.com