惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
I
InfoQ
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
云风的 BLOG
云风的 BLOG
有赞技术团队
有赞技术团队
Martin Fowler
Martin Fowler
MyScale Blog
MyScale Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
G
Google Developers Blog
WordPress大学
WordPress大学
B
Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
N
Netflix TechBlog - Medium
Last Week in AI
Last Week in AI
博客园 - 聂微东
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மெலோனிக்கு முகா பட்டு சால்வை, யுஏஇ தலைவருக்கு மாம்பழங்கள்...
2026-05-22 · via hindutamil

நெதர்லாந்து மன்னருக்கு வழங்கப்பட்ட ஜெய்ப்பூர் கலைப்பொருட்கள், மெலோனிக்கு வழங்கப் பட்ட முகா பட்டு சால்வை.

Updated on

2 min read

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்​லாந்​து, சுவீடன், நார்​வே, இத்​தாலி ஆகிய 5 நாடு​களுக்​கான பயணத்தை பிரதமர் நரேந்​திர மோடி நிறைவு செய்​துள்​ளார்.

இந்​தப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பாரம்​பரி​யம், வேளாண்​மை, மற்​றும் கலாச்​சார முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பல்​வேறு பரிசுப் பொருட்​களை உலகத் தலை​வர்​களுக்கு அவர் வழங்​கி​னார்.

இத்​தாலி​யின் ரோம் நகருக்கு சென்​ற​போது, அந்​நாட்டு பிரதமர் ஜார்​ஜியா மெலோனிக்​கு, பிரத்​யேக​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2 பட்டு சால்​வை​களை (முகா பட்டு சால்​வை, ஷிருய் லில்லி பட்டு சால்​வை) மோடி பரி​சாக வழங்​கி​னார்.

அசாமின் ‘தங்​கப் பட்​டு' என்று அழைக்​கப்​படும் முகா பட்​டு, பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் அரிய வகை கைத்​தறி ஜவுளி​யாகும். செயற்கை சாயங்​கள் ஏது​மின்​றி, அதன் இயற்​கை​யான தங்க நிறம், நீடித்து உழைக்​கும் தன்​மை, சூழலுக்கு பாதிப்​பில்லா தயாரிப்பு ஆகிய​வற்​றுக்​காக இது மிக​வும் மதிக்​கப்​படு​கிறது.

இத்​தாலிய அதிபர் செர்​ஜியோ மட்​டரெல்​லா​வுக்​கு, பாரம்​பரிய பளிங்கு வேலைப்​பாடு கொண்ட பெட்​டி​யுடன் இந்​திய இசை மேதைகளான பண்​டிட் பீம்​சென் ஜோஷி, எம்​.எஸ்​.சுப்​புலட்​சுமி ஆகியோரின் இசை குறுந்​தகடு​களை​யும் பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

ஐ.நா. சபை​யின் உணவு மற்​றும் வேளாண்மை அமைப்​பின் இயக்​குநர் ஜெனரல் கியூ டோங்​யு​விடம் இந்​தி​யா​வின் மிகச்​சிறந்த தானி​யங்​களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்​கி​னார்.

இதில் கேரளா​ வின் பாலக்​காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்​கத்​தின் கோவிந்​தோ​போக் அரிசி, இந்​தோ-கங்கை சமவெளி​யின் பாஸ்​மதி அரிசி, அசாம் பிரம்​மபுத்ரா பள்​ளத்​தாக்​கின் ஜோஹா அரிசி, உ.பி.​யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்​பெற்​றிருந்​தன.

<div class="paragraphs"><p>நார்வே பட்டத்து இளவரசருக்கு வழங்கப்பட்ட கலம்காரி ஓவியம், ஐ.நா. அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறுதானிய பிஸ்கட்.</p></div>

நார்வே பட்டத்து இளவரசருக்கு வழங்கப்பட்ட கலம்காரி ஓவியம், ஐ.நா. அதிகாரிக்கு வழங்கப்பட்ட சிறுதானிய பிஸ்கட்.

பாரம்​பரிய தானி​யங்​களு​டன் சேர்த்​து, ஆரோக்​கிய​மான சிறு​தானிய ஸ்நாக்​ஸ்​களை கியூ டோங்​யுவுக்கு பிரதமர் மோடி வழங்​கி​னார். ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்​யானுக்கு குஜ​ராத்​தின் அரிய ஜவுளி பாரம்​பரிய​மான, ‘வாழ்​வின் மரம்' வடிவத்தை கொண்ட ரோகன் ஓவி​யம் வழங்​கப்​பட்​டது.

மேலும், புவி​சார் குறி​யீடு பெற்ற கேசர் மாம்​பழங்​கள், மேகாலயா அன்​னாசிப் பழங்​கள் உள்​ளிட்ட பாரம்​பரிய இந்​திய விளைபொருட்​களும் வழங்​கப்​பட்​டன.

சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்​டெர்​சனுக்கு கைவினைப் பொருளான சாந்​தி​நிகேதன் தூது​வர் பை மற்​றும் ரவீந்​திர​நாத் தாகூரின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட படைப்​பு​களை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

மேலும் மணிப்​பூரின் லோக்​டாக் தேநீரை​யும் அவர் வழங்​கி​னார். ரசாயனங்​கள் இல்​லாத தோட்​டங்​களில் பயி​ரிடப்​படும் இந்த தேநீர், வடகிழக்கு இந்​தி​யா​வின் தனித்​து​வ​மான சுற்​றுச்​சூழல் அமைப்​போடு நெருங்​கிய தொடர்​புடைய​வை.

சுவீடன் பிரதமருக்கு கலாச்​சார பரி​மாற்​றத்​தின் ஒரு பகு​தி​யாக 'பஷ்மி​னா' என்று அழைக்​கப்​படும் லடாக் தூய கம்​பளி சால்​வையை​யும் பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார்.

இமயமலை​யின் கடுமை​யான சூழ்​நிலைகளைத் தாங்கி வாழும் சாங்​தாங்கி ஆடு​களிட​மிருந்து இந்த கம்​பளி பெறப்​படு​கிறது. நார்வே இளவரசர் ஹாகோனுக்கு சூரியன் மற்​றும் சந்​திரன் வடிவங்​கள் கொண்ட கலம்​காரி ஓவி​யத்தை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார். இது ஆந்​திரப் பிரதேசத்​தின் பழமை​யான ஜவுளி கலை வடிவ​மாகும்.

நார்வே ராணி சோன்​ஜாவுக்கு ஒடி​சா​வின் பழமை​யான கலை வடிவங்​களில் ஒன்​றான பனை ஓலை பட்​டசித்ரா வழங்​கப்​பட்​டது. நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோருக்கு சிக்​கிம் மாநிலத்​தின் ஆர்க்​கிட் ஓவி​யங்​கள் மற்​றும் ஆர்க்​கிட் பேப்​பர் வெயிட்​டு​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டன.

நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​ட​னுக்கு மீன் வடிவத்​தைக் கொண்ட மது​பானி ஓவி​யத்தை பிரதமர் மோடி பரி​சாக வழங்​கி​னார். நெதர்​லாந்து மன்​னர் வில்​லெம்​-அலெக்​சாண்​டருக்கு ஜெய்ப்​பூரின் நீல மண்​பாண்​டத்தை பரி​சாக வழங்​கி​னார்.

இது குவார்ட்ஸ் தூள், கண்​ணாடி ஆகிய​வற்​றி​லிருந்து தயாரிக்​கப்​படும் தனித்​து​வ​மான வடிவ​மைப்​பு​களுக்கு பெயர் பெற்ற ஒரு புவி​சார் குறி​யீடு பெற்ற கைவினைப் பொருளாகும். நெதர்​லாந்து ராணி மாக்​சி​மாவுக்கு ராஜஸ்​தானின் மீனா​காரி மற்​றும் குந்​தன் வேலைப்​பாடு கொண்ட கம்​மல்​கள் பரி​சாக வழங்​கப்​பட்​டன.