




















Updated on:
‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’, ‘ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ மற்றும் தெலுங்கில் சில சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார் தமன்னா.
குறிப்பாக ‘ஆஜ் கி ராத்’ பாடல் சமூக வலைதளங்களில் பெரும் சாதனை படைத்து, சிறப்புப் பாடல்களுக்கு தமன்னாதான் சரியான தேர்வு என்பதை மீண்டும் நிரூபித்தது.
அதனால் பாலிவுட்டின் புகழ்பெற்ற பாடலான ‘சோலி கே பீச்சே’ பாடலின் மறு உருவாக்கத்தில் தமன்னாவை நடிக்க வைக்கப் பரிசீலனை செய்யப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. சஞ்சய் தத் நடித்து 1993ம் ஆண்டில் வெளியான ‘கல்நாயக்’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலில் மாதுரி தீக் ஷித் நடனமாடி இருந்தார்.
பாலிவுட்டின் மிகச் சிறந்த நடனப் பாடல்களில் ஒன்றாக இன்றளவும் இப்பாடல் கருதப்படுகிறது. ‘கல்நாயக்’ படத்தின் தொடர்ச்சியாக ‘கல்நாயக் ரிட்டர்ன்ஸ்’ உருவாவதாகச் சமீபத்தில் அறிவித்தார் சஞ்சய் தத்.
இதில் ‘சோலி கே பீச்சே’ பாடலை ரீமிக்ஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். இதில் ஆடுவதற்காக தமன்னாவை அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。