惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
宝玉的分享
宝玉的分享
G
Google Developers Blog
T
Tailwind CSS Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX
V
Visual Studio Blog
博客园 - Franky
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
The Cloudflare Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
C
Check Point Blog
月光博客
月光博客
P
Proofpoint News Feed
T
The Blog of Author Tim Ferriss
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நான் பார்த்த திலகங்கள்​... - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்....
2026-04-20 · via hindutamil

Updated on

2 min read

எனக்கு பத்​து, பதினோறு வயதிருக்​கும் அப்​போது. ஐந்​தாவதோ, ஆறாவதோ படித்​துக்​கொண்​டிருந்​தேன். மக்​கள்​தில​கம் எம்​.ஜி.ஆர் எங்​கள் ஊரான நாகப்​பட்​டினத்​துக்கு வரு​கிறார் என்று ஒரு வார​மாகவே பேச்​சாக இருந்​தது.

ஊரில் எங்கு சென்​றாலும் அது​தான் பேச்​சு. அவர் அப்​படி இருப்​பார், இப்​படி இருப்​பார் என்று ஒவ்​வொரு​வரும் அவரைப்​பற்றி கற்​பனை​யாக சொல்​லிக்​கொண்​டிருப்​பார்​கள். அவருடைய கட்​டுமஸ்​தான உடல், கவர்ச்​சி​யான தோற்​றம் என எல்​லா​வற்​றை​யும் படங்​களில் பார்த்​திருக்​கிறோம்.

அதனால் நேரில் பார்க்க எல்​லோரும் துடித்​துக்​கொண்டு இருந்​தோம்! ‘சொன்ன தேதி​யன்று வந்து விட்​டார் மக்​கள் தில​கம் எம்​.ஜி.ஆர். நாகப்​பட்​டினத்​தில் அப்​போது அவுரித்​திடல் என்ற ஒன்று உண்​டு. இப்​போது அது பேருந்து நிறுத்​த​மாக மாறி இருக்​கிறது. மொத்​த​மாக அடித்து பிடித்து கூட்​டம் கூடி​விட்​டது அந்த இடத்​தில்.

எங்​கும் மனித தலைகள். அப்​படி ஒரு கூட்​டத்தை அதற்கு முன் நான் பார்த்​த​தில்​லை. எம்​.ஜி.ஆரை பார்க்​கும் ஆர்​வத்​தில் நானும் நெரிசலில் முண்​டி​யத்து மேடைக்கு அரு​கில் செல்ல முயன்​றேன். முடிய​வில்​லை. பிறகு ஒரு ஓரத்​தில் நின்​று​கொண்​டேன்.

அவர் பளிச்​சென தெரிந்​தார். பார்த்​துக்​கொண்டே இருக்​கலாம் என்​ப​தான தோற்​றம். தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக வந்​திருந்த அவர், மேடை​யில் ஏறி​னார். வெள்ளை வேஷ்டி, டைட்​டான சட்​டை, வெள்ளை தொப்​பி, கருப்​புக் கண்​ணாடி என புகைப்​படங்​களில் பார்த்த எம்​.ஜி.ஆர் நேரிலும் அப்​படியே இருந்​தார்.

அவரைப் பார்த்​ததுமே ஏதோ விவரிக்க முடி​யாத உணர்வு ஒன்று உடலுக்​குள் ஊடுரு​வுவதை உணர்ந்​தேன். அது ஒரு சிலிர்ப்​பான அனுபவம். அப்​போது 25 வயது இளைஞர் ஒரு​வர் பேசு​வார் என்று அறி​வித்​ததும் எம்​.ஜி.ஆரின் முன் அந்த இளைஞர் மைக்கை பிடித்​தார்.

அவரால் பேச முடிய​வில்​லை. எம்​.ஜி.ஆரை அரு​கில் கண்ட ஆனந்​தத்​தில் அவருக்​குப் பேச்சே வரவில்​லை. எம்​.ஜி.ஆர் அதை ரசித்​த​படி சிரித்​துக்​கொண்டே இருந்​தார். பிறகு அவரைத் தட்​டிக்​கொடுத்து விட்டு பேசி​னார். என்ன பேசி​னார் என்று ஞாபகமில்​லை. பேசி முடித்து விட்டு கிளம்​பி​விட்​டார். அவர் கார் பின்​னாலேயே பெரும் கூட்​டம் ஓடியது.

அவரை பார்த்த பிரமை​யிலேயே எல்​லோரும் இருந்​தோம். எம்​.ஜி.ஆரை பார்த்து விட்​டோம் என்​பதே எங்​களுக்கு பெரும் மகிழ்ச்​சி​யாக இருந்​தது.

அதில் இருந்து மீள்​வதற்​குள் மறு​நாள் அதே மேடை​யில் நடிகர் தில​கம் சிவாஜி வரு​கிறார் என்று தகவல்.

ஸ்கூலை முடித்​து​விட்டு அவரைப் பார்க்க ஓடி வந்​து​விட்​டேன். அவரும் காங்​கிரஸ் கட்சி பிரச்​சா​ரத்​துக்​காக வந்​திருந்​தார். அவரைப் பார்க்​க​வும் சரி​யான கூட்​டம். கூட்​டத்​தில் முண்​டியடித்து நானும் போய் நின்​றேன். அவர் பேச்​சைக் கேட்​டோம். எல்​லோருக்​கும் சுற்றி கை காட்​டிக்​கொண்டே சென்​றார்.

அவரை​யும் பார்த்​து​விட்​டேன். இதற்கு பிறகு எம்​.ஜி.ஆரை நெருக்​கத்​தில் பார்த்​தது, சென்​னை​யில் டி.கே.சண்​முகம் அண்​ணாச்​சி​யின் மணி​விழா​வில். அந்த விழா​வில் மிக​வும் நெருக்​கத்​தில் எம்​.ஜி.ஆரைப் பார்த்​தேன். அதற்கு பிறகும் சில முறை நெருக்​க​மாகப் பார்த்​திருக்​கிறேன்.

அப்​போது அவர் முதலமைச்​ச​ராக இருந்​தார். சின்​ன​போரூரில் நாங்​கள் குடி​யிருந்​த​போது, ஒரு பிரச்​சினைக்​காக ராமாவரம் தோட்​டத்​தில் அவரைச் சந்​தித்து ஒரு மனு கொடுக்க எல்​லோரும் சென்ற போது நானும் சென்று பார்த்​தேன்.

பிறகு நான் ஒரு பற்​பசை நிறு​வனத்​தில் வேலை பார்த்​த​போது அவரை சாலை​யில் பார்க்​கும் வாய்ப்பு கிடைக்​கும். அவர் கார் போகும்​போது எல்​லோரும் அவர் காருக்கு கை அசைப்​பார்​கள். அவர் காரின் கருப்​புக் கண்​ணாடியை​யும் மீறி உள்​ளிருந்து அவர் கை காட்​டு​வது வெளியே தெரி​யும்.

அப்​படிப் பார்த்​திருக்​கிறேன். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு இப்​பிறப்​பில் எனக்கு கிடைக்​க​வில்​லை. சிவாஜி அப்​பாவை, ஸ்ரீதரின் ‘வைர நெஞ்​சம்’ படத்​தின் படப்​பிடிப்​பில் பார்த்​தேன். அதில் அசிஸ்​டென்ட் டைரக்​ட​ராக வேலை பார்த்த ஒரு​வர் படப்​பிடிப்​புக்கு அழைத்​துச் சென்​றார். அப்​போது பார்த்​தேன் என்​றாலும் பேச முடிய​வில்​லை. அவரிடம் பேசிப் புகைப்​படம் எடுத்​துக்​கொண்​டது, ‘தேவர் மகன்’ படத்​தின் டப்​பிங்​கில்​தான்.

இப்​படி இரண்டு தில​கங்​களை​யும் தரிசித்​து​விட்​டேன். அடுத்​த​தாக நான் சந்​தித்து தரிசித்து அவர்​கள் கையாலேயே உணவு பரி​மாறி சாப்​பிட வைத்த இன்​னொரு தில​கம், நடிகையர் தில​கம் சாவித்​திரி அம்​மா! அப்​போது அவர் ஒரு நாடகம் போட்​டார். அதன் பெயர் இப்​போது நினை​வில்​லை. அதில் என் சகோ​தரி ஹேம​மாலினி நடித்​தார்.

அபிபுல்லா சாலை​யில் உள்ள எஸ்​.ஜி.எஸ் சபா அரு​கில்​தான் அவர் வீடு இருந்​தது. அக்கா​வுடன் நான் செல்​லும் போது, “டேய் பாஸ்​க​ரா” என்று வாஞ்​சை​யாகக் கூப்​பிடு​வார். அப்​போது என்னை உட்​கார வைத்​து, “சாப்​பிடுறா, நல்லா சாப்​பிடுறா...” என்று பரி​மாறி இருக்​கிறார். நான் அவர் கையால் சாப்​பிட்​டிருக்​கிறேன்.

அந்​தளவுக்கு இந்த மூன்று தில​கங்​களைச் சந்​தித்த பாக்​கி​யம் இந்​தப் பிறப்​பில் எனக்கு கிடைத்​ததை பெரு​மை​யாக உணர்​கிறேன். இன்​றைக்​கும் படப்​பிடிப்​பு​களுக்கு தாமத​மாகச் செல்​லாமல் தொழிலை சரி​யாக செய்ய வேண்​டும் என்று அவர்​களைத் தொழுது​தான் பின்​பற்​றுகிறேன்.

(திங்​கள் தோறும் பேசுவோம்​)