惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
雷峰网
雷峰网
U
Unit 42
Y
Y Combinator Blog
I
InfoQ
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
量子位
Microsoft Security Blog
Microsoft Security Blog
B
Blog
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
Google DeepMind News
Google DeepMind News
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
罗磊的独立博客
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர்: தண்ணீரை பீய...
2026-05-02 · via hindutamil

மதுரை சித்​திரைத் திரு​விழா​வில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசிக்க திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. உள்படம்: சித்​திரைத் திரு​விழா​வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on

2 min read

மதுரை: மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் உச்ச நிகழ்ச்​சி​யான கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் வைபவம் நேற்று அதி​காலை 5.48 மணி​யள​வில் நடை​பெற்​றது. கள்​ளழகர் பச்​சைப் பட்டு உடுத்தி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். அப்​போது திரண்​டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்​தர்​கள் விண்​ண​திர ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ என முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.

மதுரை அழகர்​கோ​வில் சுந்​த​ரராஜப் பெரு​மாள் கோயில் சித்​திரைத் திரு​விழா கடந்த ஏப்​.27-ல் தொடங்​கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில்

சுந்​தர​ராஜப் பெரு​மாள் திருக்​கல்​யாண மண்​டபத்​தில் தோளுக்​கினி​யான் பல்​லக்​கில் சுவாமி எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாள் (ஏப்​.29) சுந்​தர​ராஜப் பெரு​மாள், மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்​ப​தற்​காக கள்​ளர் திருக்​கோலத்​தில் கள்​ளழக​ராக தங்​கப் பல்​லக்​கில் மதுரைக்கு புறப்​பட்​டார். வழிநெடு​கிலும் பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார்.

நான்​காம் நாள் (ஏப்​.30) மதுரை மாநகர எல்​லை​யான மூன்​று​மாவடி​யில் அதி​காலை 5.30 மணி​யள​வில் கள்​ளழகருக்கு எதிர்​சேவை நடை​பெற்​றது. பின்​னர் புதூர் மாரி​யம்​மன் கோயில், ரிசர்வ் லைன் மாரி​யம்​மன் கோயில், அவுட்​போஸ்ட் மாரி​யம்​மன் கோயில், அம்​பல​காரர் மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார். அன்​றிரவு 8.30 மணி​யள​வில் தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயி​லில் எழுந்​தருளி​னார். அங்கு திரு​மஞ்​சன​மாகி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி, ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் நாச்​சி​யார் சூடிக்​கொடுத்த பிரம்​மாண்ட மாலையை சூடிக்​கொண்​டார்.

ஐந்​தாம் நாளான நேற்று (மே 1) அதி​காலை கோயி​லிலிருந்து புறப்​பா​டாகி, தல்​லாகுளம் கருப்​பண​சாமி கோயில் முன் 2.30 மணி​யள​வில் ஆயிரம் பொன் சப்​பரத்​தில் எழுந்​தருளி​னார். அங்​கிருந்து ஆழ்​வார்​புரம் வைகை ஆறு நோக்கி தங்​கக் குதிரை வாக​னத்​தில் புறப்​பட்​டார். முன்​ன​தாக கள்​ளழகரை வரவேற்​கும் வகை​யில் எழுத்​தாணிக்​காரத்​தெரு வீர​ராகவ பெரு​மாள் வெள்​ளிக் குதிரை வாக​னத்​தில் வைகை ஆற்​றில் 4 மணி​யள​வில் எழுந்​தருளி​னார். ஆழ்​வார்​புரம் மண்​டகப்​படிகளில் கள்​ளழகர் அதி​காலை 4.42 மணிக்கு வந்​தடைந்​தார்.

அங்கு பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி வைகை ஆற்​றுக்கு அதி​காலை 5.40 மணிக்கு வந்​தார். கோயில் நிர்​வாகம் சார்​பில் மனோரஞ்​சிதம், நாண​யங்​களு​டன் கூடிய 7 அடி நீள மாலை சாற்​றப்​பட்​டது. அப்​போது ஆற்​றுக்​குள் அவரை வீர​ராகவப் பெரு​மாள் எதிர்​கொண்டு வரவேற்க அதி​காலை 5.48 மணிக்கு கள்​ளழகர் பச்​சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்​றில் இறங்​கி​னார். அங்கு திரண்​டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்​தர்​கள் ‘கோ​விந்​தா.. கோவிந்​தா’ என விண்​ண​திர முழக்​கமிட்டு அழகரை தரிசித்​தனர்.

இந்​நிகழ்​வில் உயர் நீதி​மன்ற நீதிபதி புகழேந்​தி, அமைச்​சர் பி. மூர்த்​தி,அறநிலை​யத் துறை ஆணை​யர் தர், மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, மாநகர் காவல் ஆணை​யர் அபிஷேக் தீக்​சித், திண்​டுக்​கல் மாவட்ட ஆட்​சி​யர் சரவணன், சு.வெங்​கடேசன் எம்​.பி., எம்​எல்​ஏக்​கள் ராஜன்​ செல்​லப்​பா, அய்​யப்​பன் ஆகியோர் பங்​கேற்​றனர்.பின்​னர் வைகை ஆற்​றி​லிருந்து கள்​ளழகர் 7.35 மணி​யள​வில் ராம​ராயர் மண்​டகப்​படிக்​குப் புறப்​பட்​டார். அங்கு நேர்த்​திக்​கடன் செலுத்த ஏராள​மான பக்​தர்​கள் நாலாபுற​மும் துருத்​தி​யில் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்​வித்​தனர். இரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கி​னார்.

இன்று (2-ம் தேதி) தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்​கிறார். இரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும். நாளை ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபம் செல்​கிறார். மறு​நாள் அங்​கிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார்.

தொடர்ந்து கருப்​பண​சாமி கோயில், தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மலைக்​குத் திரும்​பு​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் கோயிலை அடைகிறார். மே 6-ம் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

பச்​சைப் பட்​டின் மகிமை: ஆண்​டு​தோறும் கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும்​போது எந்த நிறத்​தில் பட்டு உடுத்தி இறங்​கு​கிறார் என மக்​கள் எதிர்​பார்ப்​போடு இருப்​பார்​கள். கடந்த சில ஆண்​டு​களாகவே கள்​ளழகர்பச்​சைப் பட்டு உடுத்தி இறங்​கு​வதைப்​போல் இந்​தாண்​டும் பச்​சைப் பட்டு உடுத்தி இறங்​கி​னார். இதனால் நடப்​பாண்​டும் நல்ல மழைப் பொழிந்து பயிர்​கள் விளைந்து விவ​சா​யம் செழிக்​கும் என்​பது பக்​தர்​களின் நம்​பிக்​கை​யாக உள்​ளது.