惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
博客园 - 司徒正美
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வேட்பாளர்களின் வேட்புமனு ...
2026-04-25 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு வேட்பாளர்களின் வேட்​புமனுக்​களில் கூறப்​பட்​டுள்ள அனைத்து விவரங்களும் சரி​பார்க்​கப்​படும் என வரு​மான வரித்​துறை உயர் நீதி​மன்றத்​தில் பதில்​ மனு தாக்​கல் செய்​துள்​ளது.

சென்னை சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் திமுக வேட்​பாள​ராக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் போட்டியிடுகிறார். இந்​நிலை​யில் அவர் தாக்​கல் செய்​துள்ள வேட்புமனுவுக்கும், கடந்த 2021-ம் ஆண்டு தாக்​கல் செய்​திருந்த வேட்புமனுவுக்கும் ஏராள​மான முரண்​பாடு​கள் உள்​ள​தாகக் கூறி அத்​தொகுதி வாக்​காள​ரான குமார​வேல் என்​பவர், சென்னை உயர் நீதி​மன்​றத்தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், “உதயநிதி ஸ்டா​லின் கடந்த 2021-ல் தாக்​கல் செய்​திருந்த வேட்​புமனு​வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக தெரி​வித்​திருந்​தார். ஆனால் தற்​போது தாக்​கல் செய்​துள்ள வேட்​புமனு​வில் அந்த விவரம் மறைக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் அவரது மனைவி அதே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறு​வனத்​தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2021-ல் ஸ்னோ ஹவுசிங் நிறு​வனத்​துக்கு ரூ.11.06 கோடி கடன் கொடுத்​துள்​ள​தாக குறிப்​பிட்​டுள்ள உதயநி​தி, தற்​போது கடன் தொகை ரூ.10 கோடி என குறிப்​பிட்​டுள்​ளார். எஞ்​சிய ரூ.1.06 கோடி திருப்பி செலுத்​தப்​பட்டு விட்​டதா என்​பது குறித்​தும் தெரிவிக்​க​வில்​லை.

கடந்த 2020-ல் தனது வரு​மானம் ரூ.2 கோடி எனக் குறிப்​பிட்​டுள்ள உதயநிதி தற்​போது ரூ.10.98 கோடி வரு​மானம் உள்​ள​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். வரு​மானம் மற்​றும் சொத்து அதி​கரிப்பு குறித்து வேட்​புமனு​வில் உரிய விளக்​கங்​கள் தெரிவிக்​கப்​பட​வில்​லை. எனவே இதுதொடர்​பாக வரு​மான வரித்​துறை மற்​றும் கம்​பெனி விவ​காரத்​துறை விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி அமர்​வு, இதுதொடர்​பாக வரு​மான வரித்​துறை பதிலளிக்க உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில், வரு​மான வரித்​துறை புல​னாய்வு தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யின் துணை இயக்​குந​ரான ஜி.சுதர்​சன் தாக்​கல் செய்​துள்ள பதில்​ மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது:

நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களின்​போது வேட்​பாளர்​கள் தாக்​கல் செய்​யும் சொத்து விவரங்​களில் கூறப்​பட்​டுள்ள விவரங்​களை சரி​பார்க்க நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை நேரடி வரி​கள் வாரி​யம் கடந்த 2019-ம் ஆண்டு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதும் வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்​களில் கூறப்​பட்​டுள்ள அனைத்து விவரங்​களும் தாமாக முன்​வந்து சரி​பார்க்​கப்​படும்.

இந்த பணி​களை 150 நாட்​களுக்​குள் முடிக்க வேண்​டும் என்​றும் நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களில் காலக்​கெடு விதிக்​கப்​பட்​டுள்​ளது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லி்ன் மற்​றும் அவரது மனைவி கிருத்​திகா தொடர்​பான கடந்த 5 ஆண்​டு​கால வரு​மான வரி தாக்​கல் தொடர்​பான விவரங்​களை​யும், சொத்து விவரங்​களை​யும் விரி​வான ஆய்வு மேற்​கொள்​ளாமல் தற்​போது எந்த ஒப்​பீடும் செய்ய முடி​யாது.

தற்​சம​யம் அதுதொடர்​பான ஆவணங்​கள் எங்​கள் கைவசம் இல்லை என்​ப​தால் அவற்றை ஆய்வு செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது. அதையடுத்து, நீதிப​தி​கள் இந்த வழக்கு விசா​ரணையை ஜூன் மாதத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளனர்​.