惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
N
Netflix TechBlog - Medium
V
Visual Studio Blog
博客园 - Franky
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 三生石上(FineUI控件)
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
The Cloudflare Blog
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
雷峰网
雷峰网
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
IT之家
IT之家
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பராமரிப்பின்றி காணப்படும...
2026-04-29 · via hindutamil

வண்டலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட உறிஞ்சிக்குழி பராமரிப்பின்றி உள்ளது.

Updated on

2 min read

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் கிராமப்​பகு​தி​களில் வெளி​யேறும் கழி​வுநீரை சுத்​தி​கரித்து வெளி​யேற்​றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்​பின்றி பாழானதோடு, புதர்​மண்​டி​ உள்ளது. சரி​யாக பராமரிக்​காமல் விட்​ட​தால் அவை அமைத்​ததன் நோக்​கம் சிதைந்து வரு​கிறது.

மாவட்ட ஆட்​சி​யர் இவ்விவகாரத்தில் தலை​யிட்டு தீர்வு காண கோரிக்கை எழுந்​துள்​ளது. 2021-22ம் நிதி​யாண்​டில் அனைத்து கிராமங்​களை​யும் சுகா​தா​ரத்​தில் முன்​மா​திரி​யாக மாற்ற 15வது நிதிக்​குழு​மத்​தில் 30 சதவீத நிதி சுகா​தா​ரத்​திற்​காகவே ஒதுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் தமிழகம் முழு​வதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊராட்​சிகளில் கால்​வாய் மூலம் வெளி​யேறும் கழி​வுநீரை சுத்​தி​கரிக்க உறிஞ்​சிக்​குழி அமைத்து நன்​னீ​ராக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதன்​படி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் பல்​வேறு ஊராட்​சிகளில் உறிஞ்சிக்குழிகள் அமைக்​கப்​பட்​டன.

பார்ப்​ப​தற்கு கால்​நடை குடிநீர் தொட்​டிகளைப் போன்று இருக்​கும் இவை, ஊரின் எல்​லை​யிலோ அல்​லது தெரு​வின் கடைசி பகு​தி​யிலோ அமைக்​கப்​பட்​டிருக்​கும்.

இந்த கிடைமட்ட உறிஞ்​சிக்​குழி​யில் முதல் அடுக்​கில் ஜல்லி கற்​கள், 2-வது அடுக்​கில் கிராவல், மூன்​றாவது அடுக்​கில் கரி, 4-வது அடுக்​கில் மணல், மீண்​டும் அடுக்​கில் அமைத்து போல் ஜல்லி அமைக்க வேண்​டும்.

இந்த சுத்​தி​கரிப்பு முறை​யால் முதல் அடுக்​கில் நுழை​யும் கழி​வுநீர் மண் துகள்​கள் பிரித்​தெடுக்​கப்​படு​கிறது. 2-வது அடுக்​கான கிராவலில் இருந்து வெளி​யேறும் போது கருமை நிறம் குறை​கிறது.

3-வது அடுக்​கான கரி​யில் இருந்து சுத்​தி​கரிக்​கப்​படு​வ​தால் நீர் தூய்மை அடைகிறது. இறு​தி​யாக வெளி​யேறும் போது தெளிந்த நீராகும். இத்​திட்​டம் செங்கை மாவட்​டத்​தில் பல்​வேறு ஊராட்​சிகளில் தற்​போது செயல்​ப​டா​மல் முடங்கி கிடக்​கிறது.

அமைத்த நாள் முதல் இதை பராமரிக்க உள்​ளாட்​சிகள் கண்டு கொள்​ளவே இல்​லை. கால்​வாய்​கள் உறிஞ்​சிக்​குழியோடு இணை​யுமிடத்தை வாரம் ஒரு முறை சுத்​தம் செயய வேண்​டும்.

அதை​யும் செய்​ய​வில்​லை. இதனால் அமைக்​கப்​பட்ட உறிஞ்​சிக்​குழிகள் செயல்​ப​டா​மல் புதர்​மண்டி கிடக்​கின்​றன. இத்​திட்​டம் மண்​வளம், நீர்​வளத்தை பாது​காக்​கும் என கூறப்​பட்ட நிலை​யில், தற்​போது மக்​கள் வரிப்​பணத்தை வீணாக்​கி, சிதில​மாகி வரு​கிறது.

ஆனால் சீரமைப்பு செய்​வ​தாக சிறிய தொகை செலவு செய்து பெரிய தொகையை செலவு செய்​தது போல் கணக்கு காண்​பிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​றுள்​ள​தாக சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

வண்​டலூரை சேர்ந்த சமூக ஆர்​வலர் குமரன் கூறியது: கிராமங்​களில் வீடு​களில் இருந்து வெளி​யேறும் கழிவு நேரடி​யாக ஏரி​யில் கலப்பதை தடுப்​ப​தற்​காக உறிஞ்சி குழிகள் அமைக்​கப்​பட்​டது. சிறப்​பான திட்​டம் என்​றாலும் ஊராட்சி நிர்​வாகங்​கள் இதனை சரிவர பராமரிக்​க​வில்​லை.

இதனை பராமரிக்​க​ யாருக்​கும் பயிற்சி இல்​லாத​தால் இதனை கண்டு கொள்​ள​வும் இல்​லை. ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை பராமரிப்​ப​தாக கணக்கு மட்​டும் காண்​பித்து மக்​கள் வரிப்​பணத்தை வீணாக்குகிறார்​கள்.

பெரும்​பாலான ஊராட்​சிகளில் சமு​தாய உறிஞ்சி குழி கழிவு நீர் வரும் பாதையை விட உயரத்​தில் அமைந்​துள்​ள​தால் கழிவு நீர் உறிஞ்சு குழி வழி​யாக செல்​லாமல் தொட்​டிக்கு முன்​ன​தாகவே தேங்கி சுகா​தா​ரக்​கேடு ஏற்​படுத்தியுள்​ளது.

மாவட்ட நிர்​வாகம் இதில் தலை​யிட்டு உறிஞ்சி குழிகளை சீரமைத்து கழி​வுநீர் சுத்​தி​கரிப்பு பணியை துரிதப்​படுத்த வேண்​டும். இதில்​ மாவட்​ட ஆட்​சி​யர்​ தலை​யிட வேண்​டும்​ என வலி​யுறு​த்​துகிறோம்​ என்​றார்​.