惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Martin Fowler
Martin Fowler
The GitHub Blog
The GitHub Blog
B
Blog RSS Feed
U
Unit 42
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园_首页
IT之家
IT之家
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
D
Docker
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சதம் விளாசிய கோலி: கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது ஆர்...
2026-05-14 · via hindutamil

ஆர்சிபி வீரர் விராட் கோலி

Updated on

1 min read

ராய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தார் விராட் கோலி.

இந்த சீசனின் 57-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படாமல் இரவு 8.45 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியது. இதில் ஆர்சிபி டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அங்கிரிஷ் ரகுவன்ஷி 71, ரிங்கு சிங் 49, கேமரூன் கிரீன் 32 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், ராஷிக் சலாம் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

193 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது. பெத்தெல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். தன பின்னர் வந்த தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. கார்த்திக் தியாக வீசிய பந்தில் படிக்கல் ஆட்டமிழந்தார். 27 பந்துகளில் 39 ரன்களை அவர் எடுத்திருந்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி நான்கு ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணியின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. 17-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. அடுத்த ஓவரில் 9 ரன்கள் எடுத்தது. இருப்பினும் டிம் டேவிட் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் சதம் விளாசினார் விராட் கோலி. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவருக்கு 9-வது சதமாக அமைந்தது.

19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது. கோலி 105, ஜிதேஷ் 8 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது ஆர்சிபி. 12 ஆட்டங்களில் 8 வெற்றி உடன் 16 புள்ளிகளை அந்த பெற்றுள்ளது. நெட் ரன் ரேட் அடிப்படையில் குஜராத் டைட்டன்ஸை முந்தியுள்ளது ஆர்சிபி.