惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
A
About on SuperTechFans
Y
Y Combinator Blog
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
阮一峰的网络日志
阮一峰的网络日志
H
Help Net Security
小众软件
小众软件
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
G
Google Developers Blog
J
Java Code Geeks
博客园 - 三生石上(FineUI控件)
IT之家
IT之家
N
Netflix TechBlog - Medium
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொறியியல் தரவரிசை பட்டியல் ஜூலை 1-ல் வெளியீடு: உயர் கல்வி...
ஜெ.கு.லிஸ்பன் குமார் · 2026-06-23 · via hindutamil

உயர்​கல்வி அமைச்சர் ​விஸ்வநாதன்

Updated on: 

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் அறிவித்துள்ளார். முன்னதாக, தரவரிசை பட்டியல் ஜூன் 29-ம் தேதி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள் என 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் பி.இ, பி.டெக் படிப்புகளில் ஏற்ததாழ ஒரு லட்சத்து 8 ஆயிரம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இவை ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வை தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) அரசு ஒதுக்கீட்டு பிஇ, பிடெக் இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 3-ம் தேதி தொடங்கி ஜூன் 5-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2.23 லட்சம் மாணவ - மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி ஜூன் 8-ம் தேதி தொடங்கி தொர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த பணி வருகிற 29-ம் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முன்பு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள் ஜூலை 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் ஜூன் 21 முதல் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜூன் 29-ம் தேதி அன்று வெளியிட இருந்த பொறியியல் தரவரிசை பட்டியல் ஜூலை 1-ம் தேதி அன்று வெளியிடப்படும். அன்றைய தினம், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகளும் அறிவிக்கப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றை சரிசெயவ்தற்கு ஜூலை 1 முதல் 5 வரை காலஅவகாசம் அளிக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (TFC) நேரில் அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.