惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
Y
Y Combinator Blog
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
美团技术团队
S
SegmentFault 最新的问题
T
The Blog of Author Tim Ferriss
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
N
Netflix TechBlog - Medium
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
量子位
博客园 - 【当耐特】
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்த அமைந்த அரசு: சட்டப்பேரவைய...
செய்திப்பிரிவு · 2026-05-14 · via hindutamil

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதல்வர் விஜய்.

Updated on: 

சென்னை: “இது பதவிக்​காக, அதி​காரத்​துக்​காக அமைந்த அரசு அல்ல. நம்​பிய மக்​களுக்கு நன்​றிக் கடன் செலுத்​து​வதற்​காக அமைந்த அரசு” என்று சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்றி பெற்ற பின் முதல்​வர் விஜய் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசின் பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் நம்​பிக்கை வாக்​கெடுப்பு நேற்று நடை​பெற்​றது. இதில் வெற்றி பெற்ற பிறகு, முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்த அணி​யும் இல்​லாமல் தனி அணி​யாக, தனி சிறப்​புமிக்க அணி​யாக, மக்​கள், மக்​களை விரும்​பும் அணி​யாக, மக்​கள் விரும்​பும் அணி​யாக களம் கண்​டோம்.

கட்சி ஆரம்​பித்த மூன்றே ஆண்​டு​களுக்​குள் 34.92 சதவீதத்​துடன் 1.72 கோடி வாக்​கு​களை மக்​கள் தந்​தனர். தவெகவை தனிப்​பெரும் கட்​சி​யாக சட்​டப் பேர​வைக்கு அனுப்பி வைத்​தனர். மிக மிகச் சிறிய அளவில், ஒரு நூலிழை​யில் தனிப்​பெரும்​பான்மை கொஞ்​சம் தள்​ளிப் போயிருக்​கிறது.

அதனால், இந்த அரசை சிறு​பான்மை அரசு போல யாரும் நினைத்​தால், அதி​லும் மகிழ்ச்​சி​யே. இது சிறு​பான்மை அரசு​தான். சிறு​பான்மை மக்​களுக்​கான பாது​காப்பை உண்​மை​யாக நிலை​நாட்​டும் அரசு​தான்.

அது​மட்​டுமல்ல, பெண்​கள், குழந்​தைகள், முதி​யோர், இளைஞர்​கள், அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், உழைக்​கும் வர்க்​கத்​தினர் என அனைத்து மக்​களுக்​கு​மாக அமைந்த அரசு​தான் இந்த அரசு. அந்த நம்​பிக்கை அனை​வருக்​கும் ஏற்​பட்​ட​தால்​தான் இந்த நம்​பிக்கை தீர்​மானத்​தில் அது நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நேரத்​தில், அரசு சார்​பாக சில உத்​தர​வாதங்​களை தர விரும்​பு​கிறேன். இந்த அரசு மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிச்​ச​யம் தரும். சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்​புடன் உண்​மை​யான உறு​தி​யான ஜனநாயகத்​துடன் மதச்​சார்​பற்ற சமூக நீதி கொள்​கைகளு​டன் இந்த அரசு நடக்​கும்.

எம்​மத​மும் நம் மதமே. எல்லா மக்​களும் நம் மக்​களே. இதில் வாக்​களித்​தவர்​கள், வாக்​களிக்​காதவர்​கள் என்ற பாகு​பாடே இருக்​காது. இது எல்​லோருக்​கு​மான, சாமானியர்களுக்​கான, சாதி, மத எல்​லைகளைக் கடந்த, பண்​பாடு காக்​கும், பண்​பட்ட அரசு.

அரசி​யல் காரணங்​களுக்​காக யாரை​யும், எதற்​காக​வும் புண்​படுத்​தாத அரசு. இதை எல்​லாம் போகப்​போக புரிந்து கொள்​வார்​கள். இது பதவிக்​காக, அதி​காரத்​துக்​காக அமைந்த அரசு அல்ல.

நம்​பிய மக்​களுக்கு நன்​றிக் கடன் செலுத்​து​வதற்​காக அமைந்த அரசு. அதி​காரம் காட்டி மிரட்​டும் அரசு அல்ல. அனை​வரை​யும் அரவணைக்​கும் அரசு. எவர் மீதும் வெறுப்பு காட்​டும் அரசு அல்ல. எல்​லோரை​யும் விரும்​பும் அரசு. மக்​களே முக்​கி​யம்.

மக்​கள் நலன் மட்​டுமே முக்​கி​யம். அதுவே எங்​கள் ஒரே நிலைப்​பாடு. எனவே, மனசாட்சி உள்ள மக்​களாட்​சிக்கு ஆதர​வளித்த அனை​வருக்​கும்​ நன்​றி. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.