惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
P
Proofpoint News Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
F
Future of Privacy Forum
The Register - Security
The Register - Security
MyScale Blog
MyScale Blog
P
Privacy & Cybersecurity Law Blog
V
Visual Studio Blog
T
Tenable Blog
F
Fortinet All Blogs
D
Docker
V
Vulnerabilities – Threatpost
Cyberwarzone
Cyberwarzone
A
Arctic Wolf
T
Threat Research - Cisco Blogs
I
Intezer
T
Tor Project blog
大猫的无限游戏
大猫的无限游戏
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 司徒正美
AWS News Blog
AWS News Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
GRAHAM CLULEY
T
Threatpost
美团技术团队
K
Kaspersky official blog
F
Fox-IT International blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Vercel News
Vercel News
P
Palo Alto Networks Blog
Google DeepMind News
Google DeepMind News
T
The Blog of Author Tim Ferriss
S
Schneier on Security
腾讯CDC
Cisco Talos Blog
Cisco Talos Blog
C
Check Point Blog
博客园 - 叶小钗
I
InfoQ
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
Blog — PlanetScale
Blog — PlanetScale
F
Full Disclosure
T
True Tiger Recordings
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
E
Exploit-DB.com RSS Feed
L
LINUX DO - 热门话题
J
Java Code Geeks
C
CERT Recently Published Vulnerability Notes

hindutamil

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி ஆக அருண் ஐபிஎஸ் நியமனம் புதிய படங்களுக்கு முதல் வாரம் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி - முதல்வர் விஜய் உத்தரவு குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு நீட் தேர்வு முறையில் அடுத்த ஆண்டு முதல் என்னென்ன மாற்றங்களுக்கு வாய்ப்பு? “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமைக்கான போராட்டத்தில் காங். உறுதி...” - மாணிக்கம் தாகூர் எம்.பி “குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” - தவெக மீது ஸ்டாலின் தாக்கு “தமிழகத்தில் கீழ்த்தரமான குதிரை பேர கலாச்சாரம்...” - தவெக மீது பழனிசாமி காட்டம் லிவ்-இன் உறவாளர்கள் கலக்கம் ஏன்? - அசாமில் பொது சிவில் சட்டம் அறிமுகமும் எதிர்வினையும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் “தூத்துக்குடி பள்ளி மாணவி வழக்கில் மிகத் துரிதமாக நீதி...” - முதல்வர் விஜய் வரவேற்பு மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் வலியுறுத்தல் தவெக அமைச்சர்கள் அணுகுமுறை எப்படி? - விமர்சனமும் வரவேற்பும் | ஒரு விரைவுப் பார்வை ‘100% குதிரை பேரம்’ - 3 எம்எல்ஏக்களின் தவெக தாவலுக்கு திமுக, அதிமுக எதிர்வினை ‘த்ரில்’ அனுபவம் தந்ததா ‘த்ரிஷ்யம் 3’? - விமர்சன வீடியோ வானிலை முன்னறிவிப்பு: கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு வாகன சோதனை விதிகள்: பொது மக்களை காவல் துறை அதிகாரிகள் எவ்வாறு நடத்த வேண்டும்? ரீல்ஸ் மோகம்: புல்லாவெளி அருவிக்கு சென்று ஆபத்தை விலைக்கு வாங்கும் இளைஞர்கள் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் ஐக்கியம் கோவையில் தயாராகி வரும் சர்வதேச விளையாட்டு போட்டி அரங்குகள் விரைவில் திறப்பு மேகேதாட்டு அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு ரங்கசாமி - விஜய் இடையேயான நட்பு வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்சினை - காரணம் என்ன? உடன் பிறவா உடன் பிறப்பு - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 33 கேரள திரைப்பட அகாடமி தலை​வர் பதவியி​ல் இருந்து ரசூல் பூக்​குட்டி வில​கல் “15 நாட்களில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்... என்ன செய்யப் போகிறீர்கள் முதல்வரே?” - உதயநிதி ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்: கணவன், மனைவி உயிரிழப்பு தீ​பாவளிக்கு முன்பே வெளியாகிறது ‘ராமாயணம்’? தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை 10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல் “மேகேதாட்டு திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலையிட்டு தடுத்து நிறுத்தும்” - கனிமொழி நம்பிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை தவெகவினர் அதிகார வெறியாட்டம் பற்றி முதல்வர் விஜய் பேசுவாரா? - இபிஎஸ் கேள்வி திமுக - அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? - மாணிக்கம் தாகூரை சாடிய தமிழிசை வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள் “பாலியல் குற்றத்துக்கான தண்டனைகள் அதை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் அறிவுறுத்தல் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு: பங்குச் சந்தை நிலவரம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் படுகொலை “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம் சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு “ஜனநாயகம் வென்றது” - ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து கேப்டன்சி திறமை இல்லை: ரிஷப் பண்ட்டை குறிவைக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை கிசிச்சை “என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு போட்டியாக புதிய ‘ஆகி ஜனதா கட்சி’ தொடக்கம் மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன? சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டி தற்கொலை சபரிமலை கோயில் தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம் சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் சென்னை: பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தில் பழங்குடியினர் தயாரிப்பு விற்பனை மையம் திறப்பு கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு சென்னை: மழைநீரை சேகரிக்க மாநகராட்சி சார்பில் ரூ.6.88 கோடியில் 4 குளங்கள் சீரமைப்பு பணி வண்டலூர் | நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை மசூதிக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி மத குருவுக்கு ஆயுள் தண்டனை நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை: குரிந்தர்வீருக்கு பஞ்சாப் முதல்வர் பாராட்டு ஐபிஎல் போட்​டி​யின் சேஸிங்​கில் சதம் விளாசிய 4-வது கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பு உலக சேலஞ்ச் கோப்பை: இந்திய வீராங்கனை பிரணதிக்கு வெள்ளி விசிகவில் இருந்து விலகியது ஏன்? - முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விவரிப்பு கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏ ஏமாற்றம் | உள்குத்து உளவாளி பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்டி: அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்னேற்றம் வெள்ளை மாளிகை மீது இளைஞர் துப்பாக்கிச் சூடு: அதிபர் ட்ரம்ப் கண்டனம் எளிமையும் தரமும் சம அளவில் - யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் “எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி விடாமுயற்சி, தளராத நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: மாணவர்களுக்கு வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் அறிவுறுத்தல் சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீர் அனுமதி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: அமைச்சரை சந்தித்து மருத்துவர்கள் மனு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இரண்டு வாரங்களில் 4-வது முறை நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி முதல்வராக விஜய் பதவியேற்ற 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 மே 2026 ஜோதிட நாள்காட்டி 25.05.2026 | வைகாசி 11 - திங்கள்கிழமை சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸில் 5 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’ வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி பாகிஸ்தானில் ராணுவத்தினர் சென்ற ரயில் மீது கார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு கொல்கத்தாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் சுருட்டிய டெல்லி “தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் அச்சத்தில் உறைந்துள்ளனர்” - கனிமொழி எம்.பி “ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும்” - ட்ரம்ப் திட்டவட்டம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் அணி - மும்பையை 30 ரன்களில் வீழ்த்தி அசத்தல்! மேற்கு வங்க இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அமோக வெற்றி “திருமாவளவன் தடம்மாற தயாராகிவிட்டார்” - விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு கோவை சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?
2026-05-25 · via hindutamil

Updated on

2 min read

இந்தியாவில் சாலை விபத்துகளின் போது காவல்துறையின் விசாரணை மற்றும் நீதிமன்ற அலைச்சலுக்குப் பயந்து, பொதுமக்கள் விபத்தில் சிக்கியோருக்கு உதவ முன்வராமல் ஒதுங்கிச் செல்வதே பெரிய பிரச்சினையாக இருந்தது.

விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரமான ‘கோல்டன் ஹவர்' எனப்படும் உயிர் காக்கும் நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தால் 80 சதவீத உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், பொதுமக்களின் பயத்தைப் போக்கி அவர்களை உதவச் செய்வதே இச்சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

சட்டத்தின் பின்னணி

பொதுநல வழக்கு ஒன்றில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவி செய்பவர்கள், நல்வழியாளர்கள் (Good Samaritan) என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் சந்திக்கும் சட்ட ரீதியான விளைவுகள் மற்றும் காவல் நிலைய அலைச்சல்களைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் (Good Samaritan Law) அமலுக்கு வந்தது. மேலும் 2020ஆம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, நல்வழியாளர்கள் மீது எவ்வித சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகளும் பாயாமல் தடுக்க சட்டப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தும் முறைகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அருணின் உதாரணம்

இச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அருண் என்பவரின் உதாரணம் மூலம் அறியலாம். சாலையில் கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒருவரை அருண் மீட்டு ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கிறார்.

அங்குள்ள ஊழியர்கள் அவரது பெயர், முகவரி மற்றும் சிகிச்சைக் கட்டணத்தைக் கேட்கும் போது, 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, நல்வழியாளரான அருண் தனது தனிப்பட்ட விவரங்களைத் தரவேண்டிய கட்டாயமில்லை என்ற தனியுரிமை அவருக்குக் கேடயமாக நிற்கிறது.

இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட முடிகிறது, மருத்துவர்களும் பணத்தைக் கோராமல் சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

விலக்குகளும் விதிகளும்

விபத்து குறித்து காவல்துறையினர் அருணிடம் விசாரணை நடத்த விரும்பினாலும், அவரை நேரில் காவல் நிலையத்திற்கு வரும்படி வற்புறுத்த முடியாது. அவர் சாட்சியம் அளிக்கச் சம்மதித்தால் மட்டுமே, அவரது இருப்பிடத்திற்கே வந்து ஒரே ஒருமுறை விசாரணை நடத்த வேண்டும்; நீதிமன்ற வாக்குமூலத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்யலாம்.

ஒருவேளை விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்தால் கூட, காப்பாற்ற முயன்ற அருண் மீது எந்த வழக்கும் தொடர முடியாது. மேலும், மருத்துவச் செலவுப் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டியதில்லை.

இவற்றுடன், நல்வழியாளர்களின் இந்த உரிமைகள் குறித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் வளாகங்களில் பொது மக்கள் கண்ணில் படும் இடங்களிலும், இணையதளங்களிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் விழிப்புணர்வு சாசனமாகப் பதிப்பித்து வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.