惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
G
Google Developers Blog
Vercel News
Vercel News
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 三生石上(FineUI控件)
Engineering at Meta
Engineering at Meta
Martin Fowler
Martin Fowler
V
V2EX
爱范儿
爱范儿
Hugging Face - Blog
Hugging Face - Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
B
Blog
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
J
Java Code Geeks
Stack Overflow Blog
Stack Overflow Blog
P
Proofpoint News Feed
云风的 BLOG
云风的 BLOG
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சாலைப் பணிகளை செய்யாமலே ரூ.3.23 கோடி பெற்றதாக புகார்: எ.வ...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சொந்த கிராமமான தண்டராம்பட்டு வட்டம் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

Updated on: 

சென்னை: தமிழகத்​தில் நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ளாமலே ஒப்​பந்​த​தா​ரர்​கள் ரூ.3.23 கோடி பெற்​ற​தாக எழுந்த புகார் தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு, அரசு அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். வேலு மற்​றும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம் முழு​வதும் 20 இடங்​களில் நேற்று தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது.

தமிழக லஞ்ச ஒழிப்பு காவல் துறை​யில் கடந்த 2022 ஏப்​.20-ம் தேதி ஒரு புகார் அளிக்​கப்​பட்​டது. அதில், ‘கடந்த 2022 மார்ச் மாதத்​தில் தமிழ்​நாடு மாநில நெடுஞ்​சாலைத் துறை​யின் பல பிரிவு​களில், பணி​கள் மேற்​கொள்​ளப்​ப​டாத நிலை​யிலேயே ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு பல கோடி ரூபாய் வழங்​கப்​பட்​டுள்ளது.

நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​கள், ஒப்​பந்​த​தா​ரர்​களின் கூட்​டுச் செய​லால் இந்த மோசடி நடந்​துள்​ளது. இதுத​விர, மாநில நெடுஞ்​சாலைப் பணி​களை மேற்​கொள்​ள​வும், சீரமைக்​க​வும் ஆண்​டு​தோறும் வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் கோடி நிதி​யிலும் ஊழல், முறை​கேடு நடக்கிறது. எனவே, சம்​பந்​தப்​பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்​டும்’ என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதை தொடர்ந்​து, இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் சமீபத்​தில் விசா​ரணை​யைத் தொடங்​கினர். இதில் பல முக்​கிய தகவல்​கள் தெரிய​வந்​தன. கடந்த 2022-ல் மாநில நெடுஞ்​சாலைகளில் பராமரிப்பு பணி​களை மேற்​கொள்ள தனி​யார் நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, வாராணசி - கன்​னி​யாகுமரி சாலை, மண்​மங்​கலம், நன்​னியூர் சாலை ஆகிய​வற்​றின் தரத்தை மேம்​படுத்​த​வும், நெரூர் - தளவாய்​பாளை​யம் சாலை, கரூர் விரி​யம்​பட்டி சாலை ஆகிய​வற்றை அகலப்​படுத்​தும் பணி​களை மேற்​கொள்ள இந்த ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டது.

இந்த 4 சாலைகளுக்​கும் அனு​ம​திக்​கப்​பட்ட தொகை ரூ.4.19 கோடி. இந்த சாலைகளில் கடந்த 2022 மார்ச் வரை எந்த பணி​யும் நடை​பெற​வில்​லை. ஆனால், மேற்​கண்ட சாலைகளுக்​கான தொகை​யில் 77 சதவீதம், அதாவது ரூ.3.23 கோடி அளவுக்கு பணம் கடந்த 2022 மார்ச் 25 மற்​றும் 28-ம் தேதி​களில் 2 தவணை​களாக ஒப்பந்த நிறுவனத்துக்கு செலுத்​தப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக 4 அதி​காரி​கள் பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். இதன்​மூலம் ஒப்​பந்​த​தா​ரர் நியாயமற்ற முறை​யில் ஆதாயமடைந்து இருப்​பதும் தெரிய​வந்​தது.

7 பிரிவுகளில் வழக்கு: இதுதொடர்​பாக முதல்​கட்ட ஆதா​ரங்​கள் கிடைத்​ததன் அடிப்​படை​யில், தமிழக நெடுஞ்​சாலைத் துறை மற்​றும் சிறு துறை​முகங்​கள் துறை அமைச்​ச​ராக இருந்த எ.வ.வேலு, நெடுஞ்​சாலைத் துறை அதி​காரி​களாக இருந்த கண்​ணன், பூபாலன் சிங், பெரிய​சாமி, சத்​தி​ய​பா​மா, நிதிலன், ரஃபீக் முகமது, தீபி​கா, கார்த்​திக், சத்யா மற்​றும் சங்​கர் ஆனந்த் இன்ஃப்ரா (ஒப்​பந்​த​தா​ரர்) ஆகிய 11 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. குற்​றச் சதி, நம்​பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரிப்​பு, கூட்டு சதி, ஊழல் தடுப்பு என 7 பிரிவு​களின்​கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக, சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு வீடு, திரு​வண்​ணா​மலை அடுத்த தென்​மாத்​தூர் பகு​தி​யில் அருணை பொறி​யியல் கல்​லூரி வளாகத்​தில் உள்ள அவரது வீடு, அலு​வல​கம், அருணை மருத்​து​வக் கல்​லூரி, பொறி​யியல் கல்​லூரி, கம்​பன் மகளிர் கலைக் கல்​லூரி, ஜீவா வேலு சிபிஎஸ்இ பள்ளி ஆகிய இடங்​களில் சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீ​ஸார் 30-க்​கும் மேற்​பட்​டோர் 7 குழுக்​களாகப் பிரிந்து சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

அதேபோல, எ.வ.வேலு​வின் சொந்த கிராம​மான தண்​ட​ராம்​பட்டு அடுத்த சே.கூடலூரில் உள்ள அவரது வீடு, திரு​வண்​ணா​மலை சட்​ட​நாயக்​கன் தெரு​வில் உள்ள திமுக தலைமை செயற்​குழு உறுப்​பினர் இரா.ஸ்ரீதரன் வீடு, கரூர் பழனியப்பா தெரு​வில் வசிக்​கும் ஒப்​பந்​த​தா​ரரும், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் நண்​பரு​மான எம்​.சி.சங்​கர் ஆனந்​தின் வீடு, அலுவலகம் உட்பட 11 பேர் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

ரூ.40 லட்​சம் பறி​முதல்: இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: சென்​னை​யில் 4 இடங்​கள், திரு​வண்​ணா​மலை - 4, கரூர் - 7, திண்​டுக்​கல் - 2, கோவை - 2, திருப்​பூர் - 1 என மொத்​தம் 20 இடங்​களில் சோதனை நடந்​தது. சோதனை​யின் போது, நெடுஞ்​சாலைத் துறை தொடர்​பான முக்​கிய ஆவணங்​கள், டிஜிட்​டல் சான்​றுகள், சொத்து மதிப்பு மற்​றும் முறை​கேட்டை உறு​திப்​படுத்​தும் பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் கணக்​கில் வராத ரூ.40 லட்​சம் பறி​முதல்​ செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக மேல்​ வி​சா​ரணை தீவிர​மாக நடந்​து வரு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

‘சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ - இதற்கிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, ‘‘அரசியல் உள்நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செயல்பட்டுள்ளனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.