




















வியட்நாமுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் ரூ.5,800 கோடி என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடற்கரைப் பாதுகாப்புக்கான ஏவுகணை, பேட்டரிகள், அவற்றை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் தளவாட உதவிகளை இந்தியா வழங்கவுள்ளது. மேலும், பிற்காலத்தில் போர் விமானங்களில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகளையும் வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் சுமார் 375 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, முதன்முதலாக இந்த ஏவுகணையைப் பெற்ற வெளிநாடு என்ற பெருமையைப்பெற்றது. இந்த நிலையில் தற்போது வியட்நாமைத் தொடர்ந்து இந்தோனேசியாவும் இந்த வரிசையில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கும், அதன் அண்டை நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையே கடல் எல்லைப் பகிர்வு தொடர்பாக நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவின் ஏவுகணைகளை இந்த நாடுகள் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。