惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
L
LangChain Blog
美团技术团队
N
Netflix TechBlog - Medium
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
D
DataBreaches.Net
月光博客
月光博客
U
Unit 42
B
Blog RSS Feed
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
MongoDB | Blog
MongoDB | Blog
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை” - இஸ்ரேல் தூதர் வெளிப்படை
வேட்டையன் · 2026-06-16 · via hindutamil

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார்

Updated on: 

புதுடெல்லி: நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில் இந்த ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தாக உள்ளது. இதற்கு முன்னதாக இருதரப்பு இணையவழியில் விர்ச்சுவலாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானை நம்புவதில்லை என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் ஏற்கெனவே எனது பல்வேறு நேர்காணலில் இதை சொல்லி உள்ளேன். எங்களுக்கு பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தானியர்கள் மீது நம்பிக்கை என்பது இல்லை.

பாகிஸ்தானின் அணுகுமுறை, யூதர்களுக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் என அவர்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை என்று கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப், இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இஸ்ரேல் மனிதகுலத்தின் சாபம் என்று அவர் தெரிவித்திருந்தார். அதற்கு இஸ்ரேல் அப்போது எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், ருவன் அசார் இந்த கருத்தை இப்போது சொல்லியுள்ளார்.

பாகிஸ்தான் மத்தியஸ்தம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்தார். அதேபோல மேற்காசிய போர் இடைநிறுத்தம், அதை தொடர்ந்து ஈரான் - அமெரிக்க தலைவர்கள் இஸ்லாமாபாத்தில் நடத்திய பேச்சுவார்த்தை உள்ளிட்டவை இதற்கான உதாரணமாக இருக்கிறது.

மேலும், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். அப்போது இந்த பணியில் உறுதுணையாக இருந்ததாக கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பெயரை ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.