惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
雷峰网
雷峰网
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
The Cloudflare Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
V
V2EX
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
爱范儿
爱范儿
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாகனப் பதிவில் சிறப்பு எண் பெற கட்டணத்தை உயர்த்த முடிவு: ...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: ​வாகனப் பதி​வில் சிறப்பு எண் பெறு​வதற்​கான கட்​ட​ணத்தை உயர்த்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான வரைவு அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது.

புதி​தாக வாக​னம் வாங்​கு​வோர் அதை அவர்​களின் முகவரிக்கு உட்​பட்ட வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கத்​தில் பதிவு செய்ய வேண்​டும். புதிய வாக​னங்​களை பதிவு செய்​யும்​போது அந்த வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம் அந்த வாக​னத்​துக்கு என பதிவு எண் ஒன்றை வழங்​கும்.

இந்த பதிவு நடை​முறை​யில் பதிவுக் கட்​ட​ணம் மற்​றும் சேவைக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும். ஆனால் வாக​னப் பதிவு எண்​ணாக வட்​டார போக்​கு​வரத்து அலு​வல​கம் ஒதுக்​கும் எண்ணே கிடைக்​கும்.

வாகன உரிமை​யாளர்​கள் தங்​களுக்​குப் பிடித்த எண் வேண்​டும் என்​றால் அதற்​கான கூடு​தல் கட்​ட​ணம் செலுத்தி ‘பேன்சி எண்’ என கூறப்​படும் அந்த சிறப்பு எண்​களை பெற்​றுக்​கொள்​ளலாம்.

இந்த சிறப்பு பதிவு எண்​களை பெறு​வதற்​கான கட்​ட​ணங்​களை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதற்​கான வரைவு அறிக்கை அரசிதழில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி அரசால் ஒதுக்​கப்​படும் முன்​ப​திவு, பதிவு எண்​களுக்​கு, தற்​போதைய வரிசை மற்​றும் அடுத்த மூன்று வரிசைகளுக்​கு, ரூ.40 ஆயிரம் கட்​ட​ணம் இருக்​கும் நிலை​யில், வரைவு அறிக்​கை​யில் ரூ.80 ஆயிர​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல 5 முதல் 8-வது வரிசைக்கு ரூ.60 ஆயிரத்​தில் இருந்து ரூ.1.20 லட்​சம் என இரு மடங்கு உயர்த்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும் 13 மற்​றும் 14-வது வரிசைக்​கான சிறப்பு எண்​களை பெற ரூ.8 லட்​சம் வரை கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இருசக்கர மற்​றும் மூன்று சக்கர வாக​னங்​களுக்​கு, வாக​னத்​தின் மதிப்பை அடிப்​படை​யாக வைத்து ரூ.2,000 முதல் ரூ.1 லட்​சம் வரை கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

ரூ.50 ஆயிரம் மதிப்​புடைய வாக​னத்​துக்கு ரூ.2 ஆயிர​மும், ரூ.30 லட்​சம் மதிப்​புடைய வாக​னங்​களுக்கு ரூ.1 லட்​ச​மும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இறக்​குமதி செய்​யப்​பட்ட கார் மற்​றும் பிற வாக​னங்​களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்​சம் வரை கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்​துகளை ஜூலை 3-ம் தேதிக்​குள் உள்​துறை செய​லா​ள​ருக்கு அனுப்​ப வேண்​டும்​ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.