惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
Y
Y Combinator Blog
Engineering at Meta
Engineering at Meta
D
Docker
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
大猫的无限游戏
大猫的无限游戏
腾讯CDC
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Stack Overflow Blog
Stack Overflow Blog
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
L
LangChain Blog
MyScale Blog
MyScale Blog
博客园 - 三生石上(FineUI控件)
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரை பறிமுதல்...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: வெளி​நாடு​களுக்கு கடத்த முயன்ற 55 ஆயிரம் போதை மாத்​திரைகளை பறி​முதல் செய்த போலீ​ஸார் ஜவுளி வியா​பாரி​கள் போல் நடித்து கடத்​திய 3 பேரை கைது செய்​துள்​ளனர்.

டெல்​லியி​லிருந்து போதை மாத்​திரைகள் வாங்​கப்​பட்டு கூரியர் மூலம் சென்​னைக்கு அனுப்​பப்​பட்​டு, பின்​னர் அவை வெளி​நாடு​களுக்கு விமானம் மூலம் கடத்​தப்​படு​வ​தாக சென்னை காவல் துறை​யின் போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் தீவிர கண்​காணிப்பு மற்​றும் விசா​ரணை​யில் ஈடு​பட்​டனர். விசா​ரணை​யில் டெல்​லியி​லிருந்து அனுப்​பப்​பட்ட பார்​சல் வியாசர்​பாடிக்கு வந்​து, அங்​கிருந்து திரு​வல்​லிக்​கேணி​யில் உள்ள ஒரு முகவரிக்கு டெலிவரி செய்​யப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸார், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸாருடன் இணைந்து திரு​வல்​லிக்​கேணி பச்​சையப்​பன் தெரு​வில் கண்​காணிப்​பு பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் வந்த 3 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.

பின்னர், அவர்​களிடம் இருந்த பையை சோதனை​யிட்​டனர். அதில் போதை மாத்திரைகள் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. விசா​ரணை​யில் அவர்​கள் வியாசர்​பாடி காந்​திஜி நகர் 2-வது தெரு​வைச் சேர்ந்த சையது அபு​தாஹிர் (50), சேப்​பாக்​கத்​தைச் சேர்ந்த முகமது ரத்​தீஸ் (44), திரு​வல்​லிக்​கேணி முத்​தருன்​னிஸா பேகம் தெரு​வைச் சேர்ந்த முஜாஹிதீன் (31) என்​பது தெரிய​வந்​தது.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், மூவரும் டெல்​லியி​லிருந்து போதை மாத்​திரைகளை வாங்கி வந்​து, ஜவுளி வியா​பாரி​கள் போல் நடித்து வெளி​நாடு​களுக்கு அனுப்​பப்​படும் துணி மூட்​டைகளுக்​குள் மறைத்து கடத்தி வந்​ததும், அங்​குள்ள சட்​ட​விரோத கும்​பலுக்கு அதிக விலைக்கு விற்​பனை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது.

இதையடுத்து அவர்​களு​டன் தொடர்​புடைய இடங்​களில் போலீ​ஸார் சோதனை நடத்​தி, மொத்​தம் 55,280 போதை மாத்திரைகளை பறி​முதல் செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரிட​மும் தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த கடத்​தலில் மேலும் யாரேனும் தொடர்​பில் உள்​ளார்​களா என்​பது குறித்​தும்​ போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரிக்கின்​றனர்​.