惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
博客园_首页
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
D
DataBreaches.Net
Jina AI
Jina AI
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
V
V2EX
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
人人都是产品经理
人人都是产品经理
H
Help Net Security
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இயற்கை அழகை ரசித்தபடி கொடைக்கானலில் நடைப்பயிற்சி மேற்கொண்...
2026-04-27 · via hindutamil

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சுற்றுலாப் பயணி.

Updated on

1 min read

கொடைக்கானல்: ​கொடைக்​கானல் வந்​துள்ள முதல்​வர் ஸ்டா​லின் தனது குடும்​பத்​தினருடன் நேற்று காலை நட்​சத்​திர ஏரியைச் சுற்றி நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார். அவருடன் செல்ஃபி எடுத்து சுற்​றுலாப் பயணி​கள், பொது​மக்​கள் மகிழ்ந்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு முடிவடைந்​துள்ள நிலை​யில், கொடைக்​கானலில் 5 நாட்​கள் தங்கி ஓய்​வெடுப்​ப​தற்​காக குடும்​பத்​தினருடன் முதல்​வர் மு.க. ஸ்​டா​லின் நேற்று முன்​தினம் வந்​தார். வழிநெடு​கிலும் தொண்​டர்​கள், பொது​மக்​கள் உற்​சாகத்​துடன் முதல்​வரை வரவேற்​றனர்.

கொடைக்​கானல் பாம்​பார்​புரம் பகு​தி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் குடும்​பத்​தினருடன் முதல்​வர் தங்​கி​யுள்​ளார். நேற்று முன்​தினம் மாலை அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, அர.சக்​கர​பாணி ஆகியோர் முதல்​வரை சந்​தித்துப் பேசினர்.

முதல்​வர் வரு​கை​யையொட்டி கொடைக்கானலில் ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் நேற்று காலை மனைவி துர்கா மற்​றும் குடும்​பத்​ தினருடன், கொடைக்​கானல் நட்​சத்​திர ஏரி பகு​தி​யில் இயற்​கைக் காட்​சிகளை ரசித்​த​படி முதல்​வர் ஸ்டா​லின் நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​டார்.

அப்​போது, பொது​மக்​கள், சுற்​றுலாப் பயணி​களிடம் முதல்​வர் நலம் விசா​ரித்​தார். அவருடன் பலர் கைக்​குலுக்​கி, ‘செல்ஃபி’ எடுத்​து மகிழ்ந்தனர். ஏரிப் பகு​தி​யில் சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களிடம் கலந்​துரை​யாடிய முதல்​வர், அவர்​களிடம் குறை​களைக் கேட்​டறிந்​தார்.

ஒரு மணி நேரம் நடைப்​ப​யிற்​சிக்​குப் பிறகு முதல்​வர் மீண்​டும் தங்​கும் விடு​திக்கு திரும்​பி​னார். நேற்று முழு​வதும் அறை​யில் தங்கி ஓய்​வெடுத்​தார். அப்​போது, அவரை அமைச்​சர் சேகர்​பாபு, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை ஆகியோ​ரும் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தினர்.

இதற்​கிடையே கொடைக்​கானல் குறிஞ்​சி​யாண்​ட​வர் கோயி​லில் முதல்​வர் ஸ்டா​லினின் மனைவி துர்கா தனது குடும்​பத்​தினருடன் சுவாமி தரிசனம் செய்​தார். அப்​போது, முதல்​வர் உட்பட குடும்​பத்​தினர் அனை​வரின் பெயரிலும் அர்ச்​சனை செய்து வழிபட்​டார்.

அவருக்கு கோயில் நிர்​வாகம் சார்​பில் முரு​கன் படம், பிர​சாதம் வழங்​கப்​பட்​டது. கோயிலுக்கு வந்​திருந்த பக்​தர்​கள், சுற்​றுலாப் பயணி​கள் துர்கா ஸ்டா​லினுடன் செல்போனில் ‘செல்ஃபி’ எடுத்​துக் கொண்​டனர்.

அமைச்​சர் உறுதி

இதனிடையே அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தனது குடும்​பத்​தினருடன் பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லில் நேற்று சுவாமி தரிசனம் செய்​தார். போகர் சந்​நி​தி, கைலாச​நாதர், ஆனந்த விநாயகர் சந்​நி​தி​யில் வழிபட்​டார்.

பின்​னர், கிரி வீதி​யில் உள்ள வன துர்க்கை அம்​மன், மகிஷாசுரமர்த்​தினி அம்​மன் கோயில்​களில் தரிசனம் செய்​தார்.

அதன் பின்பு கொடைக்​கானலுக்கு குடும்​பத்​துடன் காரில் புறப்​பட்​டுச் சென்​றார். முன்​ன​தாக செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறும்​போது, மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கைக்​குப் பிறகு ஸ்டா​லின் என்ற பெயர்​தான்​ ஆளுநர்​ மாளி​கை​யில்​ மீண்​டும்​ ஒலிக்​கும்​ என்​றார்​.