






















முதல்வர் கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வந்தார்
Updated on
:
1 min read
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மதியம் (ஏப்.25) வந்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாட்கள் கொடைக்கானலில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப்.25) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்துடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பகல் 2.30 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார்.
வழிநெடுகிலும் சாலையோரம் முதல்வரை வரவேற்க நின்றிருந்த தொண்டர்கள், பொதுமக்களுக்கு காரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் கையசைத்தபடி சென்றார். சில இடங்களில் அவரை வரவேற்க காத்திருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் புத்தகங்களை அன்பளிப்பாக பெற்றார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் ஓய்வெடுக்கிறார்.
விடுதியில் கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வருகையை முன்னிட்டு, கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 29-ம் தேதி வரை ஓய்வெடுக்கும் முதல்வர் ஏப்ரல் 30-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர். எனவே, ஏப்ரல் 30 வரை கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன் கேமரா) பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம், சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024-ல் மக்களவை தேர்தல் முடிவடைந்ததும் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்க வந்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。