惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
博客园_首页
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
腾讯CDC
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 【当耐特】
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
U
Unit 42
aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, ப...
2026-05-11 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர், கர்​நாட​கா, தெலுங்​கானா மாநில முதல்​வர்​கள் உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்துச் செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பிரதமர் மோடி: தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்​துகள். அவரது பதவிக்​காலம் சிறப்​பான​தாக அமைய நல்​வாழ்த்​துகள். மக்​களின் வாழ்க்​கையை மேம்​படுத்த மத்​திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணி​யாற்​றும்.

காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே: தமிழக முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்ள ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்​து​கள். சுயமரி​யாதை, சமூகநீதி, அதி​காரம், பகுத்​தறிவு சிந்​தனை ஆகிய​வற்​றின் நீடித்த வலிமையை இந்த அரசு உறு​திப்​படுத்​துகிறது.

காங்​கிரஸ் மக்களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல்​ காந்​தி: தமிழகம் தேர்ந்​தெடுத்​து​ விட்​டது ஒரு புதிய தலை​முறையை. ஒரு புதிய குரலை. முதல்​வ​ராக பொறுப்​பேற்று இருக்​கும் விஜய்க்கு எனது நல்​வாழ்த்​துகள்.

தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி: தமிழகத்​தின் முதல்​வ​ராக பதவி​யேற்ற விஜய், ஏழை எளியோ​ருக்​கான நலத்​திட்​டங்​களை​யும், சமமான நீதி​யை​யும் வழங்​கி, தமிழகத்தை வளர்ச்​சி​யின் அடுத்த கட்​டத்​துக்கு எடுத்​துச் செல்​வார் என நம்​பு​கிறேன்.

கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா: இரு மாநிலங்​களுக்கு இடையி​லான உறவை வலுப்​படுத்​த​வும், மதச்​சார்​பின்​மை, அரசி​யலமைப்பு விழு​மி​யங்​களை காக்கவும், பிளவுபடுத்​தும் சக்​தி​களுக்கு எதி​ரான கூட்டு போராட்​டத்தை முன்​னெடுத்​துச் செல்​ல​வும் முதல்​வர் ஜோசப் விஜய்​யுடன் இணைந்து பணி​யாற்ற ஆவலுடன் காத்​திருக்​கிறேன்.

ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்​யாண்: தமிழகத்​தில் அமைய​விருக்​கும் புதிய அரசு, மக்​களின் விருப்​பங்​களை நிறைவேற்​றி, வெளிப்​படை​யான மற்​றும் முற்​போக்​கான ஆட்​சியை வழங்​கி, தமிழகத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்​தும் என்று நம்​பு​கிறேன். முதல்​வ​ராக பதவி​யேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்​துகள்.

கேரள முன்​னாள் முதல்​வர் பின​ராயி விஜயன்: தமிழக மக்​கள் ஜோசப் விஜய் மீது வைத்​துள்ள நம்​பிக்​கை, சமூக நீதி, மதச்​சார்​பின்மை மற்​றும் பொது நலன் ஆகிய விழு​மி​யங்​களை நிலைநிறுத்​தும் ஓர் ஆட்சி மாதிரி​யாக மாறும் என்​று நம்​பு​கிறேன்.

மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: தமிழக மக்​களின் நலனை​யும், மாநிலத்​தின் வளர்ச்​சி​யை​யும் முன்​னிறுத்​தி, முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள ஜோசப் விஜய் சிறப்​பாக செய​லாற்ற வாழ்த்​துகிறேன்.

ஈஷா நிறு​வனர் சத்​குரு: தமிழகத்​தின் முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள ஜோசப் விஜய்க்​கும், மாநில மக்​களின் அபிலாஷைகளை நிறைவேற்​று​வ​தில், வரவிருக்​கும் புதிய ஆட்​சிக்​கும் எங்​களது மனமார்ந்த நல்​வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறோம்​.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: மக்​களின் நலனை​யும், மாநிலத்​தின் முன்​னேற்​றத்​தை​யும் முதன்​மை​யாக கொண்​டு, நலத்​திட்​டங்​களை செயல்​படுத்​தி, சிறந்த ஆட்​சியை வழங்க வாழ்த்​து​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: ஜோசப் விஜய் தலை​மையி​லான புதிய அரசு, தமிழக மக்​களின் நலனை​யும், சமூக நீதி​யை​யும், வளர்ச்​சி​யை​யும் முன்​னிறுத்தி சிறப்​பான ஆட்​சியை வழங்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது.

பாமக தலை​வர் அன்​புமணி: போதை இல்​லாத, பெண்​களும், குழந்​தைகளும் பாது​காப்​பாக வாழக்​கூடிய, அடித்​தட்டு மக்​களின் வாழ்க்​கையை மேம்​படுத்​தக் கூடிய அரசு அமைய வேண்​டும் என்ற மக்​களின் எதிர்​பார்ப்​பு​களை நிறைவேற்ற புதிய அரசு தீவிர​மாக முயற்சி செய்ய வேண்​டும்.

தி​முக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி: தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்​றிருக்​கும் ஜோசப் விஜய்க்​கும், பொறுப்​பேற்றுள்ள அமைச்​சர்​களுக்​கும் வாழ்த்​து​கள்.

விசிக தலை​வர் திரு​மாவளவன்: தமிழக முதல்​வ​ராக பதவி ஏற்​கும் தவெக தலை​வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்​து​கள்.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த்: முதல்​வ​ராக பதவி​யேற்​கும் எங்க வீட்டு பையன், தம்பி விஜய்க்கு மனப்பூர்​வ​மான வாழ்த்​து​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

திக தலை​வர் கி.வீரமணி: முதல்​வ​ராக பதவி​யேற்ற விஜய்க்கு வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: மார்க்​சிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட், விசிக, இந்​திய யூனியன் முஸ்​லீம் லீக் ஆதர​வுடன் முதல்​வர் பொறுப்​பேற்று இருக்​கும் தவெக தலை​வர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்​து​கள்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: மதச்​சார்​பற்ற, வேற்​றுமை​யில் ஒற்​றுமை பேணும் கொள்கை வழி​யில் நின்​று, ஜோசப் விஜய்​யின் சீரிய தலை​மை, அதன் தேர்​தல் கால வாக்​குறு​தி​களை​யும், முந்​தைய அரசின் நலத்​திட்​டங்​களை​யும் முன்​னெடுத்து செல்​வ​தில் வெற்​றி​பெறட்​டும்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: காம​ராஜர், மூப்​ப​னார் ஆகியோரது தாரக மந்​திர​மான வளமான தமிழகம், வலிமை​யான பாரதம் என்​ப​தற்கு ஏற்ப ஜோசப் விஜய்​யின் ஆட்சி நடை​பெறட்​டும்.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: முதல்​வர் விஜய்​யின் தலை​மைத்​து​வத்​தில், தமிழகம் சிறக்​கட்​டும். புதிய உயரங்​களை அடையட்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழகத்​தில் பொறுப்​பேற்​றிருக்​கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: திமுக - அதி​முக அல்​லாத ஒரு கட்சி பல்​லாண்​டு​கள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்​ப​தில் மகிழ்​கிறேன்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: தமிழகத்​தில் வரலாற்று சாதனையை படைத்​து, ஆட்​சியை அமைத்​திருக்​கும் ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்​து​கள்.

இவர்​களு​டன் தமிழக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை, புரட்சி அண்ணா திமுக நிறு​வனர் வா.பு​கழேந்​தி, முக்​குலத்​தோர் புலிப்​படைத்​தலை​வர் சேது.கருணாஸ், எஸ்​டிபிஐ கட்​சி​யின் மாநிலத் தலை​வர் முகம்​மது முபாரக், இந்​திய தவ்​ஹீத் ஜமாஅத் பொதுச்​செய​லா​ளர் முஹம்​மது ஷிப்லி உள்​ளிட்​டோரும் வாழ்​த்து தெரிவித்​துள்​ளனர்.