惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
博客园_首页
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
小众软件
小众软件
F
Fortinet All Blogs
Microsoft Security Blog
Microsoft Security Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Google DeepMind News
Google DeepMind News
Jina AI
Jina AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
宝玉的分享
宝玉的分享
有赞技术团队
有赞技术团队
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவைக்கு வெளியே உதயநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டு, சட்டப்பேரவைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள். படம்: ம.பிரபு

Updated on: 

சென்னை: உதயநிதி ஸ்டா​லின் தலை​மை​யில் திமுக எம்​எல்​ஏக்​கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து சட்​டப்​பேர​வைக்கு வந்​தனர். அரசுக்கு எதி​ராக கோஷமிட்டு பேர​வைக்கு வெளியே ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

ஆளுநர் உரை​யுடன் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கியது. இதையொட்டி பேர​வைக்கு வந்த எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் மற்​றும் திமுக எம்​எல்​ஏக்​கள், ‘வாயைத் திறங்க சிஎம்’ என்ற வாசகத்​துடன் கூடிய கருப்பு பேட்ஜ் அணிந்​திருந்​தனர். பேர​வைக்​குள் செல்​வதற்கு முன்பு ‘தற்​குறி ஆட்​சிக்கு தமிழ்​நாடே சாட்​சி’, ‘தூய சக்தி அல்ல துயர சக்​தி’, ‘திரை​யில் நாயகன் தரை​யில் வில்​லன்’, ‘கதறல் கேட்​குதா சிஎம்’ என்​பது போன்ற வாசகங்​கள் எழுதப்​பட்ட பதாகைகளை ஏந்​தி​யபடி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினை​கள், பெண்​கள் பாது​காப்​பு, விவ​சா​யிகள் போராட்​டம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதி​ராக கோஷமிட்​டனர்​. பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, தலை​மைச் செயலக வளாகத்​தில் உதயநிதி ஸ்டாலின் கூறிய​தாவது: திமுக அரசு ஆட்​சி​யில் இருக்​கும்​போது, அரசு தயாரித்து கொடுக்​கக்​கூடிய எந்த உரையை​யும் ஆளுநர் முழு​மை​யாகப் படித்​தது கிடை​யாது. அதில் பல திருத்​தங்​களை ஆளுநர் செய்​வார். ஆனால், இந்த முறை ஆளுநர், இந்த அரசு என்ன தயாரித்​துக் கொடுத்​திருக்​கிறதோ, அதை ஒரு எழுத்து மாற்​றாமல் அப்​படியே வாசித்​திருக்​கிறார்.

அதே​போல் திமுக ஆட்​சி​யில் தமிழ்த்​தாய் வாழ்த்து மட்​டும்​தான் முதலில் வாசிக்​கப்​படும். முடி​யும்​போது தேசிய கீதம் ஒலிபரப்​பப்​படும். ஆனால் 2 முறை தேசிய கீதத்தை ஒலிபரப்பி இருக்​கிறார்​கள். இதிலிருந்தே இந்த அரசுக்​கும், மத்​திய ஆளுங்​கட்​சி​யான பாஜக​வுக்​கும் ஒரு இணக்​க​மான சூழ்​நிலை ஏற்​பட்​டு​விட்​டதோ என்​கிற எண்​ணம் அனை​வருக்​குமே ஏற்​பட்​டிருக்​கிறது.

முதல்​வர் தன்​னைப் பற்​றி​யும், தன் கட்​சியை பற்​றி​யும் சுய தம்​பட்​டம் அடித்து கொள்​ளும் உரை​யாகவே இது உள்ளது. இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்​கர் அரசாகத்​தான் செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. கடந்த ஒரு மாதத்​தில் மட்​டும் 175 பாலியல்வன்​கொடுமை​கள், 65 கொலைகள், 4 சாதிய படு​கொலைகள் தமிழகத்​தில் நடந்​திருக்​கின்​றன. பிரச்​சினை​களைப் பற்றி என்​றைக்கு நம் முதல்​வர் வாயை திறப்​பார்? என்று கேட்​ப​தற்​காகத்​தான், இன்​றைக்கு திமுக எம்​எல்​ஏக்​கள் எல்​லாம் கருப்பு பேட்ஜை அணிந்து வந்​தோம்.

திமுக அரசு கொண்​டு​வந்த ‘நான் முதல்​வன்’ திட்​டத்​தின் பெயரை குறுகிய எண்​ணத்​தோடு மாற்றி இருக்​கிறார்​கள். ‘பீரோ புல்​லிங்’ மாதிரி இன்​றைக்கு நம் முதல்​வர், தன் ஆட்​சி​யைக் காப்​பாற்​றிக் கொள்ள அதி​முக​வின் எம்​எல்​ஏக்​களை எல்​லாம் ‘எம்​எல்ஏ புல்​லிங்’ செய்து கொண்​டிருக்​கிறார். மாற்​றம் மாற்​றம் என்று கூறி​னார்​கள். ஆனால் ‘மாற்​றம் இல்​லை; நாம் எல்​லாம் சேர்ந்து இவர்​களிடம் மாட்​டிக்​கொண்​டோம்’ என்​று மக்​களை புலம்​ப வைத்​திருக்​கிறது இந்​த அரசு. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.