





















தமிழக முதல்வராக கடந்த மே.9-ம் தேதி விஜய் பதவியேற்றார். அன்றையதினம் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் பதவியேற்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கான இலாகாகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று அமைச்சர்களாக, 1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி எம்எல்ஏ, 2. எஸ்.கமலி - அவிநாசி, 3. சி.விஜயலக்ஷமி - குமாரபாளையம், 4. ஆர்.வி.ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம், 5. வினோத் - கும்பகோணம், 6. ராஜீவி - திருவாடானை, 7. பி.ராஜ்குமார் - கடலூர், 8. வி.காந்திராஜ் - அரக்கோணம், 9. மதன்ராஜ்.பி - ஒட்டப்பிடாரம், 10. ஜெகதீஸ்வரி.கே - ராஜபாளையம், 11. ராஜேஷ்குமார்.எஸ் - கிள்ளியூர், 12. விஜய்பாலாஜி.எம் - ஈரோடு கிழக்கு, 13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி - ராசிபுரம், 14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ - சேலம் தெற்கு, 15. ரமேஷ் - ஸ்ரீரங்கம், 16. பி.விஸ்வநாதன் - மேலூர், 17. குமார்.ஆர் - வேளச்சேரி, 18. தென்னரசு.கே - ஸ்ரீபெரும்புதூர், 19. சம்பத்குமார்.வி - கோவை வடக்கு, 20. முகமது ஃபர்வாஸ்.ஜே - அறந்தாங்கி, 21. டி,சரத்குமார் - தாம்பரம், 22. மரிய வில்சன் - ராதாகிருஷ்ணன் நகர், 23. விக்னேஷ்.கே - கிணத்துக்கடவு ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இத்துடன் தமிழக அமைச்சரவையில் பலம் 33 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்த 25 எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினால் ஆதரவை பரிசீலனை செய்வோம் என்று இடதுசாரிகள் எச்சரித்திருந்த நிலையில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。