惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
B
Blog
U
Unit 42
B
Blog RSS Feed
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 5 மரண தண...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் சிங்​கம்​புணரி அருகே 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலா​ளிக்கு 5 மரண தண்​டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​தது.

சிங்​கம்​புணரி அருகே மரு​திபட்​டியைச் சேர்ந்த விறகு வெட்​டும் தொழிலாளி சந்​திரன் (49). இவருக்கு திரு​மண​மாகி ஒரு மகன், ஒரு மகள் உள்​ளனர். இவர், 2023-ம் ஆண்​டிலிருந்து 5 சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

இதுகுறித்து ஒரு சிறுமி​யின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருப்​பத்​தூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து சந்​திரனை 2024 பிப்​ர​வரி 13-ம் தேதி கைது செய்​தனர். பின்​னர், அவரை குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் கைது செய்து மதுரை மத்​திய சிறை​யில் அடைத்​தனர்.

இதுதொடர்​பான வழக்கு சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் தனலெட்​சுமி ஆஜராகி வாதாடி​னார். குற்​றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால்​ சந்​திரனுக்கு மரண தண்​டனை விதித்து நீதிபதிகோகுல்முருகன் நேற்று தீர்ப்​பளித்​தார்.

அந்தத் தீர்ப்​பில் நீதிபதி கூறி​யிருப்​ப​தாவது: குற்​றம்​சாட்​டப்​பட்ட சந்​திரன், ‘வீடியோ கேம்​களை’ காண்​பித்​தும், தின்பண்​டங்​கள் வாங்கிக் கொடுத்​தும், செல​வுக்கு ரூ.20 கொடுத்​தும் சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார்.

அரி​தி​லும் அரி​தான இந்த வழக்​கில் புகார் அளித்த சிறுமி​யின் தந்தை மற்​றும் நீதி​மன்​றத்​தில் தைரிய​மாக உண்​மையைக் கூறிய பாதிக்​கப்​பட்ட 5 சிறுமிகளை பாராட்​டு​கிறேன்.

குற்​றம் ​சாட்​டப்​பட்ட சந்​திரனுக்​கு, சிறுமிகளை மிரட்​டிய குற்​றத்​துக்கு 2 ஆண்​டு​கள் சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம், ஒருசிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்கு 20 ஆண்​டு​கள் சிறை, மற்ற 4 சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்கு தனித்​தனி​யாக சாகும் வரை 4 ஆயுள் தண்​டனை விதிக்​கப்​படு​கிறது.

மேலும் 12 வயதுக்​குட்​பட்ட சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த குற்​றத்​துக்​காக 5 மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. பாதிக்​கப்​பட்ட 5 சிறுமிகளுக்​கும் தலா ரூ.7 லட்​சம் இழப்​பீ​டாக தமிழக அரசு வழங்க வேண்​டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

தீர்ப்பு அளித்​து முடித்தவுடன் தீர்ப்பு எழுதிய பேனா முனையை உடைத்து வீசி யெறிந்தார். சிவகங்கை போக்சோ நீதி​மன்​றத்​தில் ஒரு வழக்கில் மரண தண்​டனை வி​திக்​கப்​படு​வது இது​வே முதல்​முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.