惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
J
Java Code Geeks
小众软件
小众软件
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமோனியா வாயு கசி​வால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 ல...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

சென்னை: அமோனியா வாயு கசி​வால் உயி​ரிழந்த 2 பெண்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.2 லட்​சம் நிதி​யுதவி வழங்​க​வும், விபத்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்​கல் செய்ய 3 பேர் குழு​வை​யும் அமைத்து முதல்​வர் விஜய் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்​தில் தனி​யார் மீன் உணவு ஏற்​றுமதி தொழிற்​சாலை​யின் உற்​பத்தி பிரி​வில் எதிர்​பா​ராத​வித​மாக அமோனியா வாயு கசிவு ஏற்​பட்​ட​தில், அங்கு பணி​யில் இருந்தவர்கள் பாதிக்​கப்​பட்​டனர். இந்த விபத்​தில் துர​திர்​ஷ்ட​வச​மாக 2 பெண்​கள் உயி​ரிழந்​து​விட்​டனர். 15 பேர் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிர கண்​காணிப்​பிலும், 23 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​விலும் உள்​ளனர். 24 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு கண்​காணிப்​பில் உள்​ளனர்.

இந்த விபத்து குறித்து தொழில​கப் பாது​காப்பு மற்​றும் சுகா​தா​ரத் துறை இயக்​குநர், பொது சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர், தமிழ்​நாடு மாசுக் கட்​டுப்​பாட்டு வாரிய உறுப்​பினர் - செயலர் தலை​மை​யில் ஆய்வு மேற்​கொண்டு முதல்​கட்ட விசா​ரணை அறிக்​கையை 24 மணி நேரத்​துக்கு உள்​ளாக​வும், முழு விசா​ரணை அறிக்​கையை 3 நாட்​களுக்கு உள்​ளாக​வும் சமர்ப்​பிக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.

இந்த சம்​பவத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர் என்ற செய்​தி​யைக் கேட்டு மிக​வும் அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவர்​களது குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​வதோடு, முதல்​வர் பொது நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் வழங்​க​வும் உத்​தர​விட்​டுள்​ளேன். அவர்​களது உடலை சொந்த மாநிலத்​துக்கு அனுப்பி நல்​லடக்​கம் செய்ய அரசு செல​வில் நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

மருத்​து​வ​மனை​யில் உள்​ளவர்​களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்​க​வும், உயி​ரிழந்த மற்​றும் பாதிப்​படைந்த தொழிலா​ளர்​களுக்​கு, தொழிலா​ளர் மாநில ஈட்​டுறுதி காப்​பீட்டு (இஎஸ்ஐ) திட்​டம், வேலை​யாள் இழப்​பீடு சட்​டத்​தின்​கீழ் உரிய இழப்​பீடு வழங்க நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

வருங்​காலங்​களில் இது​போன்ற விபத்​துகளை தவிர்க்​கும் நோக்​கில், பேர​பாய தொழிற்​சாலைகளில் உடனடி​யாக ஆய்​வு​கள் மேற்​கொள்​ள​வும் உத்​தர​விட்​டுள்​ளேன்.

தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர், எம்​எல்ஏ, மாவட்​டக் கண்​காணிப்பு அலு​வலர், மூத்த ஐஏஎஸ் அதி​காரி, மாவட்ட ஆட்​சி​யர் இணைந்து சம்பவ இடத்​தில் நேரடி​யாக ஆய்வு செய்து தக்க மேல்​ நட​வடிக்​கை​ எடுக்குமாறு அறி​வுறுத்​தி​யுள்​ளேன்​. இவ்​வாறு முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் உறு​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாநில தொழிலா​ளர் நலத் துறை அமைச்​சர் ஜெ.​முகமது பர்​வேஸ் தெரி​வித்​துள்​ளார். இந்த சம்​பவத்​தில் 7 பேர் உயி​ரிழந்​த​தாக முதலில் தகவல் வெளி​யான நிலை​யில், 2 பேர் மட்​டுமே உயி​ரிழந்​த​தாக பின்​னர் அதி​காரப்​பூர்​வ​மாக தெரிவிக்​கப்​பட்​டது.