惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
C
Check Point Blog
Vercel News
Vercel News
Y
Y Combinator Blog
G
Google Developers Blog
P
Proofpoint News Feed
WordPress大学
WordPress大学
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
博客园 - 【当耐特】
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
博客园_首页
B
Blog RSS Feed
The Cloudflare Blog
MyScale Blog
MyScale Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Security Blog
Microsoft Security Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“மேகேதாட்டு அணையை தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு த...
தமிழினி · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: “மேகேதாட்டுவில் அணை கட்டப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். மேகேதாட்டு அணைக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு திமுக ஆதரவு அளிக்கிறது,” என தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறும்போது, “மேகேதாட்டுவில் அணை கட்டப்படக்கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். இதை இந்த அவையில் இருக்கக்கூடிய மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். ஒரு நீண்ட நெடிய சட்ட, அரசியல் போராட்டங்களை நடத்தி தான் நாம் காவிரி மீதான உரிமையை பெற்றெடுத்தோம். ஆனால் அதைப் பறிக்கும் வகையில் கர்நாடக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி, கர்நாடகவில் ஆட்சியில் இருந்தாலும் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அணை திட்டத்திற்காக ரூ.1000 கோடி கர்நாடக அரசு ஒதுக்கியதைக் கண்டித்து, இதே அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு.

2021ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமருக்கு முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். பிறகு அதே கருத்தை வலியுறுத்தி, அதற்கு அடுத்த மாதமே ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார்.

அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களைக் கூட்டி, மேகேதாட்டு அணையை கட்ட அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றினோம். அத்தீர்மானத்தை ஒன்றிய அமைச்சரிடம் நேரில் சென்றும் வலியுறுத்தியிருக்கிறோம்.

2022 - 2023 நிதியாண்டில் மேகேதாட்டு அணைக்கு கர்நாடக அரசு ஒதுக்கிய நிதியைக் கண்டித்து, சட்டப்பேரவையில் அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்' என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். செயல்பட்டார்.

இப்படி, திமுக தமிழ்நாட்டின் தொடர் எதிர்ப்பை பதிவு செய்ததன் காரணமாகதான் இதுவரை மேகேதாட்டு அணை கட்டப்படவில்லை. மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை திமுக சார்பில் மனதார வரவேற்கிறோம்.

கர்நாடகா, மேகேதாட்டு அணை கட்டுவதை தடுக்க சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் திமுக நிச்சயம் துணை நிற்கும்.

மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்காததால், டெல்டா விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாகப் பேசி, நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒரு குழுவாக சென்று ஒன்றிய அரசிடம் இதை கொடுத்து நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதற்கு திமுக தயாராக இருக்கிறது; அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து இந்த அரசும் முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.