惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
D
Docker
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
H
Help Net Security
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
M
MIT News - Artificial intelligence
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
P
Proofpoint News Feed
博客园 - 叶小钗
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
Microsoft Security Blog
Microsoft Security Blog
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராம்சார் தளங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்ட...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: கடந்த 1971, பிப்​ர​வரி 2-ல் ஈரானின் ராம்​சார் நகரில் ஒரு சர்​வ​தேச மாநாடு நடை​பெற்​றது. உலகம் முழு​வதும் உள்ள ஈர நிலங்​களைப் பாது​காக்க நடத்​தப்​பட்ட இந்த மாநாட்​டில் சுமார் 170 நாடு​கள் பங்​கேற்று ஒப்​பந்​தம் கையெழுத்​திட்​டன. இது 1975, டிசம்​பர் 21-ல் நடை​முறைக்கு வந்​தது.

இந்த மாநாட்​டின்​படி, நீரோட்​டம் கொண்ட, பறவை​கள் மற்​றும் விலங்​கு​களுக்கு இயற்​கை​யான வாழ்​விடங்​களை வழங்​கு​கின்ற மற்​றும் பல்​லு​யிர் பெருக்​கத்​துக்​கான சாத்​தி​யக்​ கூறுகளை கொண்ட ஈர நிலங்​கள் ராம்​சார் பட்​டியலுக்கு தேர்வு செய்யப்படுகின்​றன. இந்​தி​யா​வின் ராம்​சார் தளங்​கள் பட்​டியலில் தமிழ்​நாடு 20 தளங்​களு​டன் முதலிடத்​தில் உள்​ளது. இதையடுத்து 12 தளங்​களு​டன் உ.பி. 2-ம் இடத்​தில் உள்​ளது.

இந்​நிலை​யில் ராம்​சார் தளங்​கள் எண்​ணிக்​கை​யில் தமிழ்​நாட்டை மிஞ்சி முதலிடம் பிடிப்​பதை உ.பி. நோக்​க​மாகக் கொண்டுள்​ளது. இதற்கு சாத்​தி​ய​மான ஈரநிலங்​களை கண்டறியும் ஒரு பிரச்​சா​ரத்தை முதல்​வர் யோகி ஆதித்​ய ​நாத் தொடங்கி வைத்​துள்​ளார்.

இந்த மாநிலத்​தின் பெரிய குளங்​களும் ஏரி​களும் உலகளா​விய அங்​கீ​காரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஈரநிலப் பாது​காப்​புப் போட்​டி​யில் தற்​போது ஒரு பெரிய உந்​துதலைப் பெற உ.பி. தயா​ராகி வரு​கிறது.

உ.பி.​யின் அலிகரில் உள்ள ஷேகா ஏரி சமீபத்​தில் ராம்​சார் பட்டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதையடுத்து உ.பி.​யின் பலி​யா​வில் உள்ள சுர்​ஹ​தால் பறவை​கள் சரணால​யம் விரை​வில் ராம்​சார் பட்டியலில் சேர்க்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும் பல மாவட்​டங்​களின் முன்​மொழி​வு​களும் ராம்​சார் பட்​டியலில் சேர்ப்​ப​தற்​காக தயார் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. உ.பி.​யின் புவியியல் அமைப்​பும், கங்​கை- ய​முனா தோவாப் பகு​தி​யில் உள்ள பரந்த ஈர நிலங்​களும் இத்​துறை​யில் மாநிலத்தை ஒரு முன்னோடி​யாக மாற்​றக்​கூடும் என்று நிபுணர்​கள் நம்​பு​கின்​றனர்.

தற்​போது, இந்​தி​யா​வில் 99 ராம்​சார் தளங்​கள் உள்​ளன. தமிழ்​நாடு, உ.பி.க்கு பிறகு பஞ்​சாப், ஒடிசா மற்​றும் பிஹாரில் தலா 6 ராம்​சார் தளங்​கள் உள்​ளன.

நான்​காவது இடத்​தில் தலா 5 தளங்​களு​டன் குஜ​ராத், ராஜஸ்​தான், ம.பி. மற்​றும் ஜம்மு காஷ்மீர் உள்​ளன. ராம்சார் தளம் பல்​லு​யிர் பாது​காப்பை வலுப்​படுத்​து​வதோடு வலசை செல்​லும் பறவை​களுக்கு பாது​காப்​பான வாழ்விடத்தையும் உறுதி செய்​கிறது.