惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志
G
Google Developers Blog
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
Vercel News
Vercel News
L
LangChain Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Stack Overflow Blog
Stack Overflow Blog
P
Proofpoint News Feed
腾讯CDC
博客园_首页
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
M
MIT News - Artificial intelligence
WordPress大学
WordPress大学
D
DataBreaches.Net
Microsoft Security Blog
Microsoft Security Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சமூக வலைதளங்களில் வைரலாகும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: போலி சான்​றிதழ் தொடர்​பான ஒரு வழக்கை அண்மை​யில் விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்​போது, “வேலை இல்​லாமல் எந்த தொழிலும் செய்ய தகு​தி​யற்ற சில இளைஞர்​கள் கரப்​பான்​பூச்​சிகளை போல, ஒட்​டுண்​ணி​களைப் போல சமூக வலை​தளங்​களில் எல்லோரையும் தாக்​கத் தொடங்​கு​கிறார்​கள்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்​பாக பின்​னர் விளக்​கம் அளித்த நீதிபதி சூர்​ய​காந்த், “போலி சான்​றிதழ் வைத்​திருப்​பவர்​களை மட்​டுமே குறிப்​பிட்​டேன். ஒட்​டுமொத்த இளைஞர்​களை அல்ல” என்று தெரி​வித்​தார். இந்த சூழலில் அமெரிக்​கா​வின் பாஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் பயிலும் இந்​திய மாணவர் அப்​ஜித் தீப்கே என்​பவர் கடந்த 16ம் தேதி இன்​ஸ்டாகி​ராமில், “காக் ரோச் ஜனதா கட்​சி” (கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி) என்ற பக்​கத்தை தொடங்​கி​னார். எக்​ஸ், பேஸ்​புக் உள்​ளிட்ட இதர சமூக வலை​தளங்​களி​லும் இதே பெயரில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டன.

கரப்​பான் பூச்சி கட்​சி​யில் இணைய வேலை ​வாய்ப்​பற்​றவ​ராக இருக்க வேண்​டும். சோம்​பேறி​யாக இருக்க வேண்​டும். ஆன்லைனுக்கு அடிமை​யாக இருக்க வேண்​டும். கோபத்தை அழகாக வெளிப்​படுத்த தெரிந்​தவ​ராக இருக்க வேண்​டும் என்று அப்​ஜித் கூறியுள்ளார்.

மேலும், ஒரு கட்​சி​யில் இருந்து தேர்வு செய்​யப்​பட்ட எம்.​பி., எம்எல்ஏக்​கள் தேர்​தலுக்​குப் பிறகு அணி மாறி​னால் அடுத்த 20 ஆண்​டு​கள் அவர்​கள் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்​கப்​படும் என்பது உட்பட அப்​ஜித் 5 வாக்​குறுதி அளித்​துள்​ளார்.

கரப்​பான் பூச்சி கட்​சி​யின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தை 1.5 கோடி பேர் பின்​ தொடர்​கின்​றனர். எக்​ஸ், பேஸ்​புக் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களி​லும் கரப்​பான்​பூச்சி கட்சி பக்​கங்​களை பின்​தொடர்​வோரின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​கிறது. இந்நிலையில், அந்தக் கட்​சி​யின் எக்ஸ் சமூக வலைதள பக்​கம் நேற்று இந்தியாவில் முடக்​கப்​பட்​டது.

அடுத்த சில மணி நேரங்​களில் கரப்​பான்​பூச்​சிகள் ஒரு​போதும் உயி​ரிழப்​பது இல்லை என்ற வாசகத்​துடன் காக்​ரோச் இஸ் பேக் (கரப்​பான் பூச்சி திரும்பி விட்​டது) என்ற பெயரில் எக்ஸ் தளத்​தில் புதிய பக்​கம் தொடங்​கப்​பட்​டது. இதனிடையே கரப்​பான்​பூச்சி கட்சியை போன்று ஜென் ஸி இளைஞர்​கள் சார்​பில் தேசிய ஒட்டுண்ணி முன்​னணி என்ற பெயரில் புதிய ஆன்​லைன் கட்சி தொடங்​கப்​பட்டு உள்​ளது.