惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
A
About on SuperTechFans
J
Java Code Geeks
G
Google Developers Blog
L
LangChain Blog
小众软件
小众软件
宝玉的分享
宝玉的分享
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
IT之家
IT之家
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - Franky
博客园_首页
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
Vercel News
Vercel News
B
Blog
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அவசரம் வேண்டாம் என வைகோவிடம் முறையிட்டு கண்ணீர்: ராஜேந்தி...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

தென்காசி: ​“கட்​சி, சாதி, மதம் கடந்து வெற்றிபெறச் செய்த கடையநல்​லூர் தொகுதி மக்​கள் நாள்​தோறும் என்​னிடம் வெளிப்​படுத்தி வரும் உணர்வை மதித்​தும், வைகோ மீதோ, என் மீதோ களங்​கம் படர்​வதைத் தவிர்க்கும் பொருட்​டும் பதவி வில​கல் என்ற முடிவை மேற்​கொள்ள வேண்​டாம் என்று வைகோவிடம் தெரி​வித்​தேன்” என கடைய நல்​லூர் எம்​எல்ஏ தி.​மு.​ராஜேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​வ​தாக சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற மதி​முக பொதுக்​குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், தென்​காசி மாவட்​டம், கடையநல்​லூர் தொகு​தி​யில், உதயசூரியன் சின்​னத்​தில் போட்​டி​யிட்டு வெற்றிபெற்ற மதி​முக வேட்​பாளர் தி.​மு.ராஜேந்​திரன், முகநூல் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:மதி​முக அலு​வல​க​மான தாயகத்​தில் ஜூன் 26-ம் தேதி வைகோவை சந்​தித்து பேசினேன். பதவி வில​கல் என்ற முடிவை மேற்​கொள்ள வேண்​டாம் என்று தெரி​வித்​தேன்.

சட்​டப்​பேர​வை​யில் எனது செயல்​பாடு​கள் தகுதி நீக்​கத்​துக்கு வழி​வகுத்​தால் மகிழ்ச்​சி​யுடன் பதவியைத் துறந்து மக்​களிடம் முறை​யிடு​வோம் என்​றும், இப்​போது அவசரம் வேண்​டாம் என்​றும் குறைந்​த​பட்​சம் 6 மாதம் பொறுத்​திருப்​போம் என்​றும் கூறினேன். கூட்​டணி குறித்து எடுக்​கும் முடிவை மதிப்​ப​தாக​வும் இன்​னும் சில பல செய்​தி​களை​யும் வைகோ​விடம் கூறி கண்ணீருடன் முறை​யிட்​டேன்.

அதன் பின்​னர், இரவில் வைகோ​விடம் இருந்து கிடைத்த உத்​தர​வை, பொதுக்​குழு​வில்என்​னால் செயல்​படுத்த இயலாது என்​ப​தால், பொதுக்​குழு​வில் நான் கலந்து கொள்​ள​வில்​லை. 42 ஆண்​டு​களாக வைகோ மீது நான் வைத்​திருக்கும் அன்​பும், விசு​வாச​மும் உண்மையானது. அதே​போல், வாக்​களித்த மக்​கள் பெரு​மைப்​படும் வகை​யில் எனது செயல்​பாடு​கள் இருக்​கும் என்று தொகுதி மக்​களிடம் ஏற்​படுத்தி வைத்​திருக்கும் நம்​பிக்​கை​யும் உண்​மையானது. மீத​முள்ள நம் வாழ்​வில் எவ்​வித களங்​க​மும் சுமக்க வேண்​டாம் என்​பது என் கருத்​து. இந்த கருத்​துகள்​ வைகோ​வின்​ நலனை​யும்​ உள்​ளடக்​கியது.