惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
B
Blog
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
美团技术团队
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
U
Unit 42
The Cloudflare Blog
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
罗磊的独立博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
I
InfoQ
GbyAI
GbyAI
腾讯CDC
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கோட்டை விடும் முதல்வர் வ...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

சென்னை: கும்​மிடிப்​பூண்டியில் 3 வயது பெண் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின்: வடக்கே எங்கோ தூரத்​தில் நடந்​த​தாக நாம் செய்​தி​களில் படித்த குற்​றச்​சம்​பவங்​கள் எல்​லாம், தமிழகத்​தில் தினசரி தொடர்​கதை​யா​வது கண்​டிக்​கத்​தக்​கது.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சட்​டத்​துக்​குப் புறம்​பாக வாக்​குக் கேட்​ப​தற்​கான கரு​வி​யாக குழந்​தைகளைப் பயன்​படுத்​திய முதல்​வர் விஜய், குழந்​தைகள் - பெண்​கள் பாது​காப்​பில் தொடர்ந்து கோட்டை விடு​கிறார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: தமிழகத்​தில் எங்கே இருக்​கிறது பெண்கள் பாது​காப்​பு? என்​ன​தான் செய்​கிறது காவல்​துறை? எங்கே போனது சிங்​கப்​பெண் அதிரடிப் படை?

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: குழந்​தைகள், பெண்​களுக்கு எதி​ரான வன்​முறைத் தாக்​குதல் தமிழகத்​தில் தொடர்ச்​சி​யாக அரங்​கேறி வரு​கிறது. அவர்​களின் பாது​காப்பை காவல்​துறை உறுதி செய்​ய​வேண்​டும்.

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்: போதைப் பொருள்​களின் நடமாட்​டம், அதனால் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ராக நிகழும் குற்​றங்​கள் மக்​களை பெரும் அச்​சத்​தில் ஆழ்த்தி வரு​கிறது.

அண்​ணா​மலை: கடந்த சில மாதங்​களாகவே, தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் குற்​றங்​களில், வட மாநில இளைஞர்​கள் கைது செய்​யப்​படு​வது பல கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.

திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி: ‘பொறுப்​பு’ என்​னும் சொல்​லுக்​குப் பொருள் தெரி​யாதவர்​கள் நடத்​தும் ஆட்​சி​யில், பொது​மக்​களே தங்​களின் பாது​காப்பை உறுதி செய்து கொள்​வதைத் தவிர வேறு என்ன செய்ய முடி​யும்?

பாமக தலைவர் ராமதாஸ்: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்: என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக்கொண்டிருக்கிறதா தமிழக காவல்துறை?

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சட்​டம் -ஒழுங்கு சீர்​கேட்​டைக் கட்​டுப்​படுத்த போர்க்​கால நடவடிக்கை அவசி​யம் என்​பதை முதல்​வர் விஜய்​யும், அவருக்கு ஆதர​வாககுரல் கொடுப்​பவர்​களும் எப்​போது உணரப் போகிறார்​கள்?

இந்​திய மாதர் தேசிய சம்​மேளனத்​தின் பொதுச் செயலா​ளர் கண்​ணகி: பெண்​கள் தங்​களுக்கு நடக்​கும் அநீ​தி​கள் குறித்​தோ, ஏமாற்று பேர்​வழிகள் குறித்தோ அச்​சமின்​றிப் புகார் அளிக்க ஏது​வாக ரகசிய புகார் பெட்​டிகள் அல்​லது தனி உதவி எண்​கள்​ இன்​னும்​ தீவிர​மாகச்​ செயல்​​பாட்​டுக்​ கொண்​டுவர வேண்​டும்​. இவ்​​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.