惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
博客园 - Franky
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
量子位
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் வன்முறை முகம் அம்பலம்: திரிணமூ...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதாகவும், தங்கள் கட்சி அலுவலகங்களை சூறையாடுவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மூதாட்டி ஒருவர் முகத்தில் காயமடைந்த நிலையில் ரத்தக் கரையோடு சாலையில் படுத்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவோடு வெளியிடப்பட்டுள்ள பதிவில், “அலிபுர்துவாரில் ஒரு வயதான மூதாட்டியை பாஜகவின் கொடூரமாக தாக்கி உள்ளனர். பட்டப்பகலில் கலவரம் செய்யவும், அப்பாவி மக்களை படுகொலை செய்யவும் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார்களா?

தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டம் அமைதியாகவும் வன்முறையின்றியும் இருப்பதை உறுதி செய்வதற்காக என்று கூறி தேர்தலுக்குப் பிறகும் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்ட மத்தியப் படைகள் இப்போது எங்கே இருக்கின்றன?

பாஜகவினரின் வன்முறையை எளிதாக்குவதற்காக மட்டுமே அவர்கள் இருக்கிறார்களா? பாஜகவின் வன்முறை முகம் அம்பலமாகி உள்ளது. மேற்கு வங்கம் இந்த காட்டுமிராண்டித்தனத்தை பொறுத்துக்கொள்ளாது. சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் பதில் சொல்லியாக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், ஓர் அலுவலகம் தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த பதிவில், “பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற மறுகணமே தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்திவிட்டது.

ஜல்பைகுரி வார்டு 14-ல் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில், பாஜக ஆதரவு பெற்ற சமூக விரோத சக்திகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அமைதியின்மையை உருவாக்க திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட செயல் இது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவின் டோலிகஞ்ச், கஸ்பா பகுதிகளிலும், ஹவுராவின் பரநகர், கமர்ஹாட்டி பகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே, தேர்தல் வெற்றியை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீதும், சொத்துக்கள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்துவதாக தனக்கு தகவல்கள் வருவதாகவும் எனவே கட்சியினர் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தாக்குதல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக காவல்துறையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரி ஒஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தகைய தாக்குதல்களுக்கும் தங்கள் தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதுள்ள விரக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் அக்கட்சிக்குள்ளேயே இருக்கும் போட்டி கோஷ்டிகள் இச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்” என்று பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா தெரிவித்துள்ளார்.