惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
DataBreaches.Net
C
Check Point Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
美团技术团队
P
Proofpoint News Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
Jina AI
Jina AI
爱范儿
爱范儿
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமோனியா வாயுக் கசிவு விபத்தில் மேலும் ஒரு பெண் தொழிலாளர் ...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

திரு​வள்​ளூர்: கடல் உணவு பதப்​படுத்​தும் நிறு​வனத்​தில் ஏற்​பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் ஏற்​கெனவே 8 பெண் தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த நிலை​யில், மேலும் ஒரு பெண் தொழிலா​ளர் நேற்று உயி​ரிழந்​தார். இதனால் இறந்​தோரின் எண்​ணிக்கை 9 ஆக உயர்ந்​துள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பெரிய​பாளை​யம் அருகே கன்​னி கைப்​பேர் கிராமத்​தில் ‘செ​யின்ட்பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம், இறால் உள்​ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்து வரு​கிறது.

இங்கு வடமாநிலங்​களைச் சேர்ந்த 200-க்​கும் மேற்​பட்​டோர் 2 ஷிப்​டு​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர். கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​த​போது, திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்​பட்​டது.

இதனால் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள், அரு​கில் தங்​குமிடத்​தில் ஓய்​வெடுத்​துக் கொண்​டிருந்த பெண் தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட 80 பேர் மயக்​கமடைந்​தனர். பலருக்கு கண் எரிச்​சல், மூச்​சுத் திணறல், வாய் மற்​றும் மூக்​கில் ரத்​தக்​கசிவு போன்ற பாதிப்​பு​கள் ஏற்​பட்​டன.

பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் உடனடி​யாக மஞ்​சங்​காரணை வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, சிறுணி​யம் வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இதில் ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகிய இரு​வர் கடந்த 21-ம் தேதி​யும், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஷிபானி (22), கீதா ஜுங்கா (24), பர்​பாவதி ஜுங்கா (19), ஷம்​பபடி ஜுங்கா (23), பூர்​ணிமா ஜுங்கா (19) மற்​றும் அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த ஷிட்டா ஹஸ்டா (20) ஆகிய 6 பேர் நேற்று முன்​தின​மும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், சென்​னை, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்​ஜிலா சோரேன் (26) என்ற பெண் தொழிலாளர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

வேல்ஸ் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் இரு​வர் சிகிச்சை பெற்​று, தங்​குமிடத்​துக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர். மற்ற 69 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சிகிச்சை பெறும் 25-க்​கும் மேற்​பட்​ட​வர்​களில் பலரின் நிலை கவலைக்​கிட​மாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

விவரம் சேகரிப்பு

உயி​ரிழந்​தவர்​களில் திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மற்​றும் சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்ட ஜுமானி ஜுவாங், மாலோ​தி, ஷிபானி, ஷம்​பபடி ஜுங்கா மற்​றும் கீதா ஜுங்கா ஆகிய 5 பேரின் உடல்​கள் நேற்று ஒடிசா மாநில தொழிலா​ளர் நலத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டு, விமானம் மூலம் ஒடிசா மாநிலத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது.

விபத்து நடந்த நிறு​வனத்​தில் பணிபுரிந்து வந்த தொழிலா​ளர்​களில், விபத்​தில் சிக்​காத, விபத்​தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தொழிலா​ளர்​களின்​ விவரங்​களை அதி​காரி​கள்​ சேகரித்​து வருகின்​றனர்​.

முதல்கட்ட ஆய்வு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு

​அமோனியா வாயுக் கசிவு விபத்​தில் 9 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்த விபத்து குறித்து விரி​வான விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்ய சிறப்​புக் குழுவை முதல்​வர் விஜய் அமைத்​திருந்​தார்.

தொழில​கப் பாது​காப்​புத் துறை இயக்​குநர், சுகா​தா​ரத் துறை கூடு​தல் இயக்​குநர், மாசுக் கட்​டுப்​பாடு வாரிய உறுப்​பினர் செயலர் ஆகியோர் இதில் இடம் பெற்​றிருந்​தனர். 24 மணி நேரத்​துக்​குள் முதல்​கட்ட அறிக்​கை​யை​யும், 3 நாட்​களுக்​குள் முழு அறிக்​கை​யை​யும் சமர்ப்​பிக்​கு​மாறு முதல்​வர் உத்​தர​விட்​டிருந்​தார்.

அதன்​படி, நேற்று முதல்​கட்ட அறிக்​கையை அந்த குழு முதல்​வரிடம் சமர்ப்​பித்​தது. அந்த அறிக்​கை​யில், இந்த விபத்து நடந்த சம்​பவத்​தின் பின்​னணி, பாதிப்பு நடந்த விதம், அதற்​கான காரணங்​கள், பாதித்​தவர்​களின் விவரங்​கள், அரசு சார்​பில் மேற்​கொள்​ளப்​பட்ட மீட்பு நடவடிக்​கைகள், மருத்​துவ சிகிச்​சைகள், சட்ட நடவடிக்​கைகள் ஆகிய முதல் நிலை விசா​ரணை​யின் அடிப்​படையி​லான தகவல்​கள் இடம்​பெற்​றன. முழு​மை​யான விவரங்​கள் அடங்​கிய அறிக்​கையை சில தினங்​களில் குழு​வினர் முதல்​வரிடம் சமர்ப்​பிக்க உள்​ளனர்.