惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
A
About on SuperTechFans
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மே 2026
2026-05-10 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: மனக்குழப்பம் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

மிதுனம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். மனைவியுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். மேலதிகாரி பாராட்டுவார்.

கடகம்: சேமிப்புகள் கரையக்கூடும். கணவன் மனைவி பிரச்சினைக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தவும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.

சிம்மம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் அறிவுரையை ஏற்கவும்.

கன்னி: தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர். தொட்டது துலங்கும். பழைய கடனைப் பைசல் செய்ய புதுவழி பிறக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர். பழைய கடனையை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

விருச்சிகம்: உறவினர், பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அலுவலகத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். வியாபாரத்தில் போட்டி விலகும்.

தனுசு: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருகை தருவர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: மனப் போராட்டம், ஒருவித பயம் இருக்கும். குடும்பத்தினரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. மனைவி, பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரரின் ஆலோசனையை நிராகரிக்காதீர். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: வெளிவட்டாரத்தில் புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலை பொருட்கள் வாங்குவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.