惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
罗磊的独立博客
L
LangChain Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரளாவில் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணற்றில் ...
2026-05-03 · via hindutamil

பஞ்​சா​யத்து உறுப்பினர் மரீனா சனீஷ்

Updated on

1 min read

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டம் உப்​புத்​தரா கிராம பஞ்​சா​யத்து உறுப்​பினர் மரீனா சனீஷ். உப்​புத்​தரா கிராம மக்​கள் கோடை காலங்​களில் குடிநீருக்​காக பல மைல் தூரம் செல்​ல​ வேண்​டிய நிலை​யிருந்​தது. இதே கிராமத்​தில் பிரிட்​டிஷார் ஆட்சிக் ​காலத்​தில் தோண்​டப்​பட்ட கிணறு ஒன்று இருக்​கிறது. இது நல்ல தண்​ணீர் கிணறும் கூட. ஆனால் போதிய பராமரிப்பில்லாமல் வறண்டு இருந்​தது.

இதையடுத்து இந்​தக் கிணற்றை தூர் வார மரீனா முடிவு செய்தார். இதையடுத்து கிராம மக்​கள் உதவி​யுடன் அவர் மட்​டுமே தன்னந்​தனி​யாக கிணற்​றில் இறங்கி தூர் வாரி​னார். தற்​போது இந்​தக் கிணற்​றில் குடிநீர் ஊற்று அதி​கரித்து தண்​ணீர் வரத்​தொடங்கியுள்​ளது.

இதுகுறித்து மரினா சனீஷ் கூறும்​போது, “இந்த 15 அடி ஆழமுள்ள கிணற்​றில் வண்​டல் மண்​ணும், சேறும் நிறைந்​திருந்​தது. இதையடுத்து கோடை காலத்​துக்கு முன்​ன​தாக தூர் வார முடிவு செய்​தோம். இதற்கு முன்பு இதை 100-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் இந்​தக் கிணற்றை பயன்​படுத்தி வந்​தனர்.

முதலில் யாரும் கிணற்​றில் இறங்க முன்​வர​வில்​லை. இதையடுத்து நானே இறங்கி சுத்​தம் செய்​தேன். அதில் இருந்த சேறு, வண்​டல் மண் ஆகிய​வற்றை தூர் வாரி சுத்​தப்​படுத்​தினேன். இயந்​திரங்​கள் உதவி​யுடன் சுமார் 4 மணி நேரத்​தில் கிணறு சுத்​தம் செய்​யப்​பட்​டது. தற்​போது கிணற்​றில் நல்ல தண்​ணீர் ஊற்​றெடுக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதையடுத்து மக்​கள் பயன்​படுத்​தும் அளவுக்கு கிணற்​றில் தண்​ணீர் மட்​டம் அதி​கரித்​துள்​ளது. இதனால் இந்​தப் பகுதி மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்” என்​றார்.

இதுதொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.