惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
罗磊的独立博客
量子位
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
IT之家
IT之家
D
DataBreaches.Net
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
D
Docker
The GitHub Blog
The GitHub Blog
B
Blog
V
Visual Studio Blog
博客园 - Franky
N
Netflix TechBlog - Medium
博客园 - 【当耐特】
Martin Fowler
Martin Fowler
博客园 - 聂微东
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை ச...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சென்னை: அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​களை உதவி பேராசிரியர்​களாக பணி வரன்​முறை செய்ய முடி​யாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரி​வித்​துள்ளது.

தமிழகத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர்​களாக பணி​யாற்றி வந்​தவர்​கள், தங்​களை பணி வரன்​முறை செய்​து, உதவிப் பேராசிரியர்​களாக நியமிக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்து வந்​தனர்.

அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக சிறப்​புத் தேர்வு நடத்​தி, உதவி பேராசிரியர்​களாக நியமிப்​பது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் கடந்த 2022-ம் ஆண்​டு, ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்​பாக 3 ஆண்​டு​களாக காலி​யாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கும் சேர்த்து தேர்வு நடத்த புதி​தாக அரசாணை வெளி​யிட்​டது.

இந்த அறி​விப்பை ரத்து செய்​யக் கோரி​யும், 2020-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைப்​படி தங்​களை பணிவரன்​முறை செய்​யக்​கோரியும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனிநீதிப​தி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்​து, கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி வரன்​முறை செய்​வது தொடர்​பான 2020 அரசாணைப்​படி தேர்வு நடை​முறை​களை முடிக்க வேண்​டும் என கடந்த 2024 ஏப்​ரலில் உத்​தர​விட்​டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்​வித் துறை, கல்​லூரி கல்வி இயக்​குநரகம், ஆசிரியர் தேர்வு வாரி​யம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறை​யீட்டை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கவுரவ விரிவுரை​யாளர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​கள் அளவி​லான குழுக்​கள் மூல​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ள​தால், அவர்​களின் கோரிக்​கையை ஏற்​பது என்​பது உச்ச நீதி​மன்​றம் வகுத்​தளித்த போட்​டித் தேர்வு நடை​முறை கொள்​கையை நீரத்​துப்​போகச் செய்​து​விடும் எனக்​கூறி தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தனர்.

மேலும், பணி வரன்​முறை என்​பதும், தேர்வு நடை​முறை என்​பதும் வெவ்​வேறானவை என்​ப​தால் பணி வரன்​முறையை உரிமை​யாக கோர முடி​யாது. எனவே அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள ஆயிரத்து 292 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கான தேர்வு குறித்த அறி​விப்பை விரை​வில் வெளி​யிட வேண்​டும் என ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.

இதுத​விர ஏற்​கெனவே 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களுக்கு 42 ஆயிரத்து 64 பேர் விண்​ணப்​பித்​துள்​ள​தால் அவர்​களுக்​கும் போட்​டித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்​டும்; இதில் கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு அவர்​கள் பணி​யாற்​றிய அனுபவத்​தின் அடிப்​படை​யில் அதி​கபட்​ச​மாக 15 மதிப்​பெண்​கள் வரை வெயிட்​டேஜ் மதிப்​பெண் வழங்​கலாம்.

நீண்ட கால​மாக பணி​யாற்​றிய கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு வயது வரம்​பில் தளர்வு வழங்க வேண்​டும். இந்த தேர்வு நடை​முறை​களை 6 மாதங்​களுக்​குள் முடிக்க வேண்​டும், என உத்​தர​விட்​டுள்​ளனர்.

தேர்வு நடை​முறை முடிந்து நியமன உத்​தர​வு​கள் வழங்​கும் வரை கவுரவ உதவி பேராசிரியர்​களாக பணி​யாற்றி வருபவர்​களை எக்​காரணம் கொண்​டும்​ பணிநீக்​கம்​ செய்​யக்​கூ​டாது என்​றும்​ நீதிப​தி​கள்​ தங்​களது உத்​தர​வில்​ தெரி​வித்துள்ளனர்.