惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
小众软件
小众软件
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
月光博客
月光博客
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
博客园_首页
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி 5 ஆக அதிகரிப்பு - பேரவ...
அனலி · 2026-06-22 · via hindutamil

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திருவள்ளூர் விபத்தில் சிக்கியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு.

படம்: ஆர்.ரகு

Updated on: 

திரு​வள்​ளூர்: திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரியபாளையம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது.

சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர்.

நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலாளர்களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்பட்டுள்ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் என மொத்​தம் 65 தொழிலா​ளர்கள் மயக்கம் அடைந்​தனர். சிலருக்கு வாய், மூக்​கு, கண், காதுகளில் ரத்​தக் கசி​வும் ஏற்​பட்​ட​தால் பதற்​ற​மான சூழல் உரு​வானது. பெரிய​பாளை​யம் போலீ​ஸார், தீயணைப்​புத் துறை​யினர், வருவாய்த் துறை​யினர் விரைந்து வந்து மீட்​புப் பணி​களில் ஈடுபட்டனர். பாதிக்​கப்​பட்ட தொழிலா​ளர்​கள் உடனடி​யாக 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் பல்​வேறு வாக​னங்​கள் மூலம் அருகே உள்ள மருத்​து​வ​மனைகளுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

பெரிதும் பாதிப்​புக்கு உள்​ளான 7 தொழிலா​ளர்​கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்​கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொது​மருத்​து​வ​மனைக்​கும் மேல் சிகிச்​சைக்​காக மாற்​றப்​பட்​டனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

இதனயைடுத்து திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

விதி எண் 110-ன் கீழ் விளக்கம்: இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவையில் திருவள்ளூர் விபத்து குறித்து இன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விதி எண் 110-ன் கீழ் விளக்கமளிக்கையில், "திருவள்ளூர் அமோனியா வாயு கசிவால் 70 பெண்கள், 4 ஆண்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 27 பேர் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். இதில் 5 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல் அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கான செலவை அரசே மேற்கொள்ளும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

அப்போது அமைச்சரின் விளக்கத்துக்கு முன்னதாகவே தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி திமுக, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனாால் அவையில் சிறிதுநேரம் சலசலப்பும் ஏற்பட்டது.

3 பேர் கைது: அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர் மோகன், அவரது சகோதரர் ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.